Posts

Showing posts from April, 2022

உங்களுடைய இன்றைய Appointment எப்படி? | எண்ணம் போல் வாழ்வு

உலகில் உள்ள எல்லோரு க்கும் இன்றைய முக்கியமான அப்பாயிண்ட்மெண்ட் என்னவென்று தெரியுமா? இன்று நாம் சந்தோஷமாக இன்றைய நாளை கழிக்க வேண்டும் என்பதே. நாம் மொத்தத்தில் மூன்று நாட்கள் மட்டுமே வாழவேண்டும்  நேற்று இன்று மற்றும் நாளை. நேற்றும் நாளையும் நாம் நினைவுகளில் தான் வாழ முடியும். இன்றைய நாள் மட்டுமே நிதர்சனமான உண்மை. அதனால் இன்றைய நாள் என்றுஙம் அப்பாயின்மென்ட்டை சந்தோஷமாக, ஜாலியாக மற்றும் சிறப்பாக நாம் எல்லோரும் வாழ்வோமாக. எண்ணம் போல் வாழ்வு.

வாழ்க்கையை சிறப்பாக வாழும் வழிகள் | எண்ணம் போல் வாழ்வு

நம் வாழ்க்கை ஒரு Cause க்காக அதாவது குறிக்கோளுக்காக வாழ வேண்டும் Applause க்காக  அதாவது கைத்தட்டுதளுக்காக வாழக்கூடாது. நம் வாழ்க்கையில் அன்ப Express பண்ணி வாழலாமே தவிர அடுத்தவங்கள Impress பண்றதுக்காக வாழக்கூடாது. நாம் வாழும் போது நான் இங்கே இருக்கிறேன் நான் எங்கே இருக்கிறேன் என்று scene காட்டி வாழக்கூடாது நாம் இறக்கும் போது ஒரு நல்லவர் நம்மை விட்டுப் போய் விட்டாரே என்ற ஒரு வெற்றிடத்தை உருவாக்கி செல்ல வேண்டும். எண்ணம் போல் வாழ்வு.

புத்தர் சொல்லும் சந்தோஷத்திற்கான வழிகள் | எண்ணம் போல் வாழ்வு

ஒருவர் கௌதம புத்தரிடம் I want happiness எனக்கு சந்தோஷம் வேண்டும் என கூறினார் அதற்கு புத்தர் I want happiness ல் உள்ள I என்றால் நான் அதாவது ஈகோவை, அகங்காரத்தை விட்டுவிடுங்கள். Want என்றால் ஆசை அதை விட்டு விடுங்கள. அப்போது உங்களுக்கு Happiness அதாவது சந்தோசம் எப்போதும் இருக்கும். நம் வாழ்வில் சந்தோஷம் நிலைக்க அகங்காரம் மற்றும் ஆசையை விட்டால் போதுமானது. எண்ணம் போல் வாழ்க.

நாம் செய்ய வேண்டியது என்ன தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு

நாம் கால்பந்து விளையாடும் போது அன்று நாம் கோல் அடிக்க வேண்டிய நேரம் ஆக இருந்தால் நாம் கோணல் மானாலாக ஷார்ட் அடித்தாலும் அது கோலாக மாறி தீரும். நாம் செய்ய வேண்டியது கடின உழைப்பு மட்டுமே. நம் நேரம் வரும் போது எல்லாமே சரியாக நடைபெறும். அதனால் மக்கள் தங்கள் உழைப்பின் மீது நம்பிக்கை வைத்து உழைத்துக் கொண்டே இருந்தால் ஒரு நாள் அல்லது ஒரு நாள் வெற்றி வந்தே தீரும். எண்ணம் போல் வாழ்வு.

பிரச்சனைகளும் சவால்களும் வரட்டுமே | எண்ணம் போல் வாழ்வு

கோடிக்கணக்கான உபகரணங்களை உற்பத்தி செய்யும் ஒரு தொழிற்சாலை கருவிகள் இயங்காமல் நின்று விட்டது. அதன் முதலாளி ஒரு நிபுணரை அழைத்து வருகிறார். அந்த நிபுணர் அந்த தொழிற்சாலையை மேற்பார்வை இடுகிறார். பிறகு ஒரு போல்டை டைட்டு செய்கிறார். இப்போது தொழிற்சாலை இயந்திரங்கள் இயங்க ஆரம்பித்துவிட்டது. அந்த நிபுணர் பத்தாயிரம் பவுண்ட் ரசீது கொடுக்கிறார். இதை கண்ட முதலாளி அதற்கான விளக்கத்தை கேட்கிறார். அதற்கு அந்த நிபுணர் அந்த போல்ட்டை டைட்டு செய்ய ஒரு பவுண்டு மற்றும் இந்த போல்ட்டை தான் டைட்டு செய்ய வேண்டும் என்ற அந்த அறிவுக்கு 9999 பவுண்டு என்று விளக்கமளிக்கிறார். நம் வாழ்க்கையில் பிரச்சனைகள் அல்லது சவால்கள் வரட்டும். அவை தான் நமக்கு அனுபவங்களை கொடுக்கிறது‌ அனுபவங்கள்தான் நம்மை ஒரு நிபுணனாக ஆக்குகிறது. எண்ணம் போல் வாழ்வு.

அடுத்தவர் மனதை காயப்படுத்தாமல் பேசலாமே | எண்ணம் போல் வாழ்வு

ஒரு பெண்மணி வேலை விஷயமாக வெளியூர் போகிறார் அவர் கணவரிடம் தன்னுடைய அம்மாவையும் தங்களுடைய பூனைக் குட்டியையும் நன்றாக பார்த்துக் கொள்ளும்படி சொல்லி புறப்படுகிறார். அடுத்த நாள் கணவரிடம் பூனை குட்டி எப்படி இருக்கிறது என கேட்கிறார். அதற்கு அவர் கணவர் பூனை குட்டி இறந்து விட்டதாக கூறுகிறார். மனைவி பூனை இறந்தாலும் நீங்கள் சொல்லும் விதம் எப்படி இருக்க வேண்டும் என்றால் முதல் நாளில் பூனை நன்றாக விளையாடிக் கொண்டிருக்கிறது என சொல்ல வேண்டும், அடுத்த நாள் அதற்கு அடிபட்டு விட்டது என சொல்ல வேண்டும், அதற்கு அடுத்த நாள் பூனை இறந்துவிட்டது என்று சொல்ல வேண்டும் எனக் கூறுகிறார். அவர் தன் தாயைப் பற்றி கேட்கும்போது அவர் கணவர் உன் அம்மா ஓடி ஆடி விளையாடுகிறார் என கூறுகிறார். நாம் எப்போதும் பேசும் போதும் யார் மனதையும் புண்படுத்தாமல் பேச வேண்டும். எண்ணம் போல் வாழ்வு.