அடுத்தவர் மனதை காயப்படுத்தாமல் பேசலாமே | எண்ணம் போல் வாழ்வு
ஒரு பெண்மணி வேலை விஷயமாக வெளியூர் போகிறார் அவர் கணவரிடம் தன்னுடைய அம்மாவையும் தங்களுடைய பூனைக் குட்டியையும் நன்றாக பார்த்துக் கொள்ளும்படி சொல்லி புறப்படுகிறார். அடுத்த நாள் கணவரிடம் பூனை குட்டி எப்படி இருக்கிறது என கேட்கிறார். அதற்கு அவர் கணவர் பூனை குட்டி இறந்து விட்டதாக கூறுகிறார். மனைவி பூனை இறந்தாலும் நீங்கள் சொல்லும் விதம் எப்படி இருக்க வேண்டும் என்றால் முதல் நாளில் பூனை நன்றாக விளையாடிக் கொண்டிருக்கிறது என சொல்ல வேண்டும், அடுத்த நாள் அதற்கு அடிபட்டு விட்டது என சொல்ல வேண்டும், அதற்கு அடுத்த நாள் பூனை இறந்துவிட்டது என்று சொல்ல வேண்டும் எனக் கூறுகிறார். அவர் தன் தாயைப் பற்றி கேட்கும்போது அவர் கணவர் உன் அம்மா ஓடி ஆடி விளையாடுகிறார் என கூறுகிறார்.
நாம் எப்போதும் பேசும் போதும் யார் மனதையும் புண்படுத்தாமல் பேச வேண்டும். எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment