Posts

Showing posts from 2023

நீங்கள் அப்பாவியா? Smartஅ? | #shorts #Tamil #அப்பாவி #Smart

ஒரு நபர் தன் நண்பரிடம் என் மனைவி என் மீது ரொம்பவும் பாசமாக இருப்பாள் என்று கூறினார். உடனே நண்பர் அப்படியா என்றார். ஆமாம் அவள் என்னை பார்க்கும் போதெல்லாம் இப்படி கூறுவாள். உங்களைப் போல ஒரு புருஷன் உலகத்தில் உள்ள எந்த ஒரு பெண்மணிக்கும் கிடைக்க மாட்டாள் என்று. சிலர் மிகுந்த அப்பாவிகளாக இருப்பார்கள். அவர்களுக்கு பாராட்டு எது திட்டு எது என்பது கூட பிரித்தறிய தெரியாது. எதையும் நேர்மறையாக சிந்திப்பது என்பது ஒரு விஷயம் விவேகமாக இருப்பது என்பது வேறு ஒரு விஷயம். எண்ணம் போல் வாழ்வு.

Trio's that influence our life? | #shorts #Fear #Tear #Year #Trio

நம் வாழ்வை பாதிக்க கூடிய மூன்று ஆங்கில வார்த்தைகள். Fear Tear  Year. Fear அதாவது பயம் நாம் எதையோ கண்டு நம் வாழ்வில் பயப்படுகிறோம் ஆனால் அதற்கான வழிமுறைகளை கற்றுக் கொண்டால் நாம் அந்த பயத்திலிருந்து விடுபடுகிறோம். Tear என்றால் கண்ணீர் நமக்கு தூக்கம் தரும் சம்பவங்கள் கண்ணீரை வர வைக்கின்றன அந்த அழுகையை மாற்றக்கூடிய வழிமுறைகள் தெரிந்திருந்தால் நம் முகத்தில் சிரிப்பு வெளிவருகிறது. Year என்றாள் வருடம் நம் வாழ்வில் விடியே தெரியாத சில பிரச்சனைகளுக்கு காலம் தீர்வு தருகிறது. இந்த Fear, Tear மற்றும் Year எல்லோர் வாழ்வையும் பாதிக்கின்றன ஆனால் இதற்கு விடை தெரிந்தால் எல்லோரும் வாழ்வோம் ஜிங்கலாலா தான். எண்ணம் போல் வாழ்வு.

நம்மால் முடிவதை மட்டுமே வாக்குறுதியாக கொடுப்போம் | எண்ணம் போல் வாழ்வு

நாம் அடுத்தவருக்கு செய்யும் மிகப் பெரிய துரோகம் என்ன தெரியுமா ஒரு போலியான வாக்குறுதி கொடுப்பதாகும் நாம் பொதுவாக சொல்லும் போது உனக்கு என்ன வேண்டுமானாலும் நான் செய்வேன் என்று சொல்பவர்கள் தேவை வரும்போது அவர்கள் அங்கு இருப்பதே இல்லை. இது மிகப் பெரிய தவறாகும். நாம் யாரிடமும் நம்மால் என்ன செய்ய முடியும் என்பதை தெளிவாக கூற வேண்டும். எடுத்துக்காட்டாக என்னால் பிரார்த்தனை செய்ய முடியும். எனக்கு நல்ல உபதேசம் கொடுக்க முடியும். என்னால் உடல் உழைப்பு தர முடியும். என்னால் பணத்தால் உதவி செய்ய முடியும். இதில் எதை செய்ய முடியுமோ அதை சரியாக குறிப்பிட வேண்டும். எண்ணம் போல் வாழ்வு.

ஒருவர் பேசுவதை முழுவதுமாக கேட்டு முடிவுக்கு வரவும் | எண்ணம் போல் வாழ்வு

ஒருவர் தனது புதிய வருடத்தில் இவைகளை பின்பற்றப் போவதாக கூறினார். i will lie i will cheat i will drink and I will steal. இது எப்படி சரியாகும். Lie என்றால் பொய் என்று ஆங்கிலத்தில் அர்த்தம் ஆனால் அதற்கு வேறு ஒரு அர்த்தம் சாய்ந்து கொண்டு என்றும் இருக்கிறது. இந்த நபர் சொல்லுவது அவர் சாய்ந்து கொண்டு நல்ல ஒரு எதிர்காலத்திற்காக யோசிப்பார் என்று. அவர் தனது தோல்வியை cheat செய்து வெற்றி காண்பார். அவர் குடிப்பேன் என்பது ஞானத்தை பருகுவதை கூறுகிறார். அவர் திருடுவேன் என்று கூறியது நேரத்தை. நேரத்தை சேமித்து அதை இறைவனுக்காக நினைவு செய்ய பயன்படுத்திக் கொள்வேன் என்று. இப்படி ஒருவர் ஏதாவது கூறியவுடன் உடனே ஒரு தீர்ப்பு வருவதற்கு முன்பாக அவர்கள் முழுமையாக பேசிவிட்ட பிறகு ஒரு முடிவுக்கு வருவது நல்லது. எண்ணம் போல் வாழ்வு.

வாழ்க்கை வாழ்வது ரொம்ப simple தாங்க? | எண்ணம் போல் வாழ்வு

ஒரு வாத்து பிறந்தவுடன் கண் திறந்து பார்க்கும் நபரை தன் தாய் என நினைத்துக் கொள்ளும். 95 சதவீத நேரங்களில் தன் தாயையே அது பார்க்கிறது. ஒருவேளை அது ஒரு பூனையையோ ஒரு நாயையோ பார்த்தால் அது தான் தன் தாயென உணர்ந்து கொள்ளும். அதே போல சில மனிதர்கள் கண்களால் பார்ப்பதையும் காதால் கேட்பதையும் நம்பி விடுகிறார்கள். ஆனால் நாம் எதையும் தீர விசாரித்த பின்பே நம்ப வேண்டும். ஏனென்றால் நமக்கு ஆறறிவு இருக்கிறது. எண்ணம் போல் வாழ்வு.

வாழ்க்கை வாழ்வது ரொம்ப simple தாங்க? | எண்ணம் போல் வாழ்வு

நம் வாழ்க்கையை வாழ்வது மிகவும் எளிதானது தான் நாம் தான் அதனை கடினமாக ஆக்கிக் கொள்கிறோம். நாம் முதலில் நமக்கு தேவையானதற்காக உழைக்க வேண்டும். அதற்கு பிறகு முடிந்தவற்றுக்கு முயற்சி செய்ய வேண்டும். ஒரு நாள் வாழ்க்கையை திரும்பிப் பார்த்தால் நாம் முடியாததையும் செய்து இருப்போம். நம் வாழ்க்கையில் தோற்பதற்கு முதல் காரணம் முதலிலேயே முடியாததை முயற்சி செய்வதால் தான். அதாவது நாம் ஒரு பென்ஸ் கார் வாங்க முயற்சிப்பது போல. முதலில் ஒரு மாருதி 800 வாங்க வேண்டும். பிறகு 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காரை வாங்க வேண்டும். ஒரு நாள் நம்மிடம் அந்த பென்ஸ் காரும் இருக்கும். வாழ்க்கை மிகவும் எளிது தான். எண்ணம் போல் வாழ்வு.