Posts

Showing posts from March, 2022

உங்கள் மனைவி உங்கள் பேச்சைக் கேட்பதில்லையா? | எண்ணம் போல் வாழ்வு

என் மகள் நான் சொல்வதைக் கேட்பதற்கு என் மனைவி நான் சொல்வதை கேட்காமல் இருப்பதற்கு என்ன காரணம் தெரியுமா? என் மகள் என் மகள், என் மனைவி என் மாமனாரின் மக்கள். இப்படி எல்லாம் சொல்லி தான் சமாதானப் பட்டுக் கொள்ள வேண்டும். வாழ்க்கையில் நாம் சிறப்பாக வாழ இரண்டு விஷயங்கள் செய்ய வேண்டும். ஓன்று - நாம் யார் மீதும் எந்த எதிர்பார்ப்பும் கொள்ளக்கூடாது  இரண்டு - நாம் அனைவர் மீதும் அன்புடன் நடந்து கொள்ள வேண்டும் பற்று இருக்கவே கூடாது.  எண்ணம் போல் வாழ்வு.

நல்ல காலம் வருகுது | எண்ணம் போல் வாழ்வு

இந்த நாள் வந்தா எல்லாம் சரியாகிடும் அந்த நாள் வந்தா எல்லாம் சரியாகி அப்படி சும்மா இருந்திடாதீங்க. நம்ப மாறாம அந்தநாள் வந்தால் கூட எந்த மாற்றமும் வரப்போவதில்லை. நமது தகுதி, திறமை, அறிவு, குணத்தை வளர்த்துக் கொண்டே வந்தால் இன்னைக்கு இல்ல நாளைக்கு வெற்றியை பார்க்கலாம், இல்லாட்டி நல்ல காலம் பொறக்குது, நல்ல காலம் பொறக்குது பாட்டு பாடிட்டு இருக்க வேண்டியது தான். எண்ணம் போல் வாழ்வு.

எங்கே நிம்மதி? | எண்ணம் போல் வாழ்வு

எங்கே நிம்மதி எங்கே நிம்மதி அங்கே எனக்கோர் இடம் வேண்டும் என்று எல்லோரும் பாடுகிறார்கள். ஆனால் ஆசையை விட தயாராக இல்லை. எதுவரை நாம் ஆசையை விட வில்லையோ அதுவரை நமக்கு நிம்மதி கிடைக்காது. காமம், கோபம், அகங்காரம், பற்று, பேராசை இவற்றை ஜெயித்தால் நாம் நிம்மதியாக வாழலாம். எண்ணம் போல் வாழ்வு.