Posts

Showing posts from June, 2022

உங்கள் கனவு பலித்து விட்டதா? | எண்ணம் போல் வாழ்வு

ஒரு நபர் தன் நண்பர் வீட்டுக்கு சென்று அவருடைய மகனிடம் உன் வயது பிள்ளைகள் அவர்களுடைய கனவுகளை நினைவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். நீ உன் கனவை நினைவாக்கி விட்டாயா? அதற்கு அந்தப் பையன் எங்கே uncle எங்க வீட்ல தூங்கவே விட மாட்டாங்க அப்ப தானே கனவு காண்றதுக்கு. திரு அப்துல் கலாம் ஐயா கூறுகிறார் இரவில் உறக்கத்தில் வருவது கனவு அல்ல நம்மை தூங்க விடாமல் இருப்பது தான் கனவு என்று. நாம் நம் இலட்சியத்தை நோக்கி உழைப்போம். சந்தோஷமாக இருப்போம். எண்ணம் போல் வாழ்வு.

நீங்கள் கோடீஸ்வரரா? | எண்ணம் போல் வாழ்வு

ஒருவர் அடுத்தவரிடம் நான் ஒரு கோடீஸ்வரர் என கூறினார்.  அப்படி என்ன உங்களிடம் இருக்கிறது என அவர் கேட்டார். அதற்கு இவர் எனக்கு சொந்தமாக ஒரு பேங்க் இருக்கிறது என கூறினார். அவர் நீங்கள் எந்த பேங்குக்கு முதலாளி என கேட்டார். அதற்கு இவர் பவர் பேங்க் (Power Bank) என்றார். உண்மையில் ஒரு கோடீஸ்வரர் பணிவாகவும் எளிமையாகவும் இருக்க வேண்டும் அதுதான் ஒரு பெரிய மனிதனின் சிறப்பாக இருக்கும். எண்ணம் போல் வாழ்வு.

நீங்கள் பேசும் போது இதை கவனிக்கிறீர்களா? | எண்ணம் போல் வாழ்வு

ஒருத்தர் Customer Careக்கு கூப்பிட்டார் அந்தப் பக்கத்தில் ஒரு பெண் சொல்லுங்க சார் நான் என்ன உதவி செய்யட்டும். அவர் சொன்னார் என் வீட்டில் என் மனைவி இல்லை என்று சொல்லி ஒரு pause செய்தார். உடனே அந்தப் பெண் காலையிலேயே தொந்தரவு செய்யாதீர்கள் சார் என்று கூறி phone cut செய்துவிட்டார். நாம் பேசும்போது தொடர்ச்சியாக பேச வேண்டியதை தொடர்ச்சியாகவும், நிறுத்த வேண்டிய இடங்களில் நிறுத்தியும் பேசவேண்டும் இல்லை என்றால் பிரச்சினைகளை உருவாக்கும். எண்ணம் போல் வாழ்வு.

Science என்ன சொல்லுது Moral Science என்ன சொல்லுது? | எண்ணம் போல் வாழ்வு

Science சொல்கிறது நம் நாவில் ஏற்படும் புண்ணானது சீக்கிரம் சரியாகிவிடும் Moral Science சொல்கிறது நம் நாவினால் பேசும் வார்த்தை அடுத்தவரை காயப்படுத்தி அவருக்கு பல வருடம் துக்கத்தை கொடுக்கும் அதனால் தான் நாம் அடிக்கடி கூறுகிறோம் எண்ணம் சொல் செயல் மூலம் யாருக்கும் துக்கம் கொடுக்க வேண்டாம். ஏனென்றால் எண்ணம் போல் வாழ்வு.

உங்கள் வீட்டை coolலாக வைக்க நீங்கள் என்ன செய்கிறீர்கள்? | எண்ணம் போல் வாழ்வு

வருடம் முழுவதும் நம் வீட்டு temperature ஐ சீராக வைக்க வெயில் காலத்தில் ஏசியையும் பணிக்காலத்தில் heater யையும் பயன்படுத்துகிறோம். ஆனால் உண்மையில் நம்ப வீடு temperature சீராக இருக்க நம் வீட்டில் உள்ளவர்கள் இனிமையாக பேசவேண்டும் மற்றும் அவர்கள் மனசு நன்றாக இருக்க வேண்டும். அப்போது நம் வீடு என்றும் கூலாக இருக்கும். எண்ணம் போல் வாழ்வு.

மாணவர்களே நீங்கள் யாருக்கு வேண்டி படிக்கிறீர்கள்? | எண்ணம் போல் வாழ்வு

ஒரு அப்பா தன் பையன் கிட்ட ஏன்டா பரிட்சையில் பெயிலான்னு கேட்கிறார். அதுக்கு பையன் அப்பா பரீட்சையில் எல்லா கேள்வியும் out of syllabus அதுனாலத்தான் நான்  fail ஆயிட்டேன். அதுக்கு அப்பா ஆனாலும் நீ எல்லா கேள்விக்கும் பதில் எழுதி இருக்கியே. அதுக்கு பையன் நான் எழுதின எல்லா விடையும் out of syllabus அப்பா. மாணவர்கள் பள்ளிக்காகவோ, மதிப்பெண்களுக்காகோ படிக்கக் கூடாது. தன்னுடைய புரிதலுக்காகவும் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்காகவும் படிக்க வேண்டும். எண்ணம் போல் வாழ்வு.

எல்லா சூழ்நிலையிலும் நீங்கள் React பண்றீங்களா? Respond பண்றீங்களா? | எண்ணம் போல் வாழ்வு

காட்சி 1 :- ஒருவர் நம் மீது கோபப்படுகிறார் நாம் உடனே React செய்கிறோம் அதாவது உனக்கு மட்டும் தான் கோபப்பட முடியுமா நானும் கோபப்படுகிறேன் என்று கோபப்படுவது. இது உறவை முறிக்கும். காட்சி-2 ஒருவர் நம் மீது கோபப்படுகிறார் நாம் அதை Accept செய்கிறோம். அதாவது அவர் சொல்வதை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், கேட்டுக்கொள்கிறோம். அதற்குப் பிறகு பணிவாக பதில் அளிக்கிறோம் அல்லது தேவைக்கேற்ப அமைதியாக இருந்து விடுகிறோம். இப்படி செய்வதால் உறவுகள் பேனப்படுகிறது. அதனால் எப்போதும் React செய்வதற்கு பதிலாக Accept செய்து Respond செய்வோம்.  எண்ணம் போல் வாழ்வு.

உங்கள் வாழ்க்கை இனிக்கிறதா? கசக்கிறதா? | எண்ணம் போல் வாழ்வு

காட்சி 1 :-  நீங்கள் உங்கள் அலுவலகத்திற்கு கிளம்புகிறீர்கள். உங்கள் வண்டி சாவியை வைத்த இடத்தில் தேடுகிறீர்கள். அங்கு அந்த சாவி இல்லை. உடனே நீங்கள் சத்தம் போடுகிறீர்கள். உங்கள் மனைவி மக்கள் பயந்து போகிறார்கள். அவர்களே எடுத்தாலும் இல்லை என்று பயத்தால் பொய் சொல்கிறார்கள். காட்சி 2 :- நீங்கள் உங்கள் அலுவலகத்திற்கு கிளம்புகிறீர்கள் உங்கள் வண்டி சாவியை வைத்து இடத்தில் தேடுகிறீர்கள் அங்கே அந்த சாவி இல்லை நீங்கள் உங்கள் வீட்டில் உள்ளவர்களை சாவியை பார்த்தீர்களா என அன்பாக கேட்கிறீர்கள். யாராவது எடுத்திருந்தால் அவர்களாகவே முன்வந்து கொடுத்து விடுகிறார்கள் அல்லது எல்லோரும் சேர்ந்து அந்த சாவியை தேடுகிறார்கள். நாம் கோபப்பட்டால் உறவுகள் கசக்கும். நாம் அன்போடு பேசினால் உறவுகள் இனிக்கும். எண்ணம் போல் வாழ்வு.

நீங்க அடுத்தவர்களுக்கு Advice கொடுக்க போகிறீர்களா? | எண்ணம் போல் வாழ்வு

உங்கள் வீட்டுக் குழந்தை சரியாக படிக்கவில்லை அதனால் அந்த குழந்தைக்கு அறிவுரை கூற முடிவு செய்கிறீர்கள். அதற்கு முன்பாக உங்களுக்கு ஒரு எண்ணம் தோன்றுகிறது. அதாவது இந்த குழந்தை படிப்பதற்கு லாயக்கில்லை, இது மாடு மேய்க்கத்தான் போகிறது. அதற்கு பிறகு நீங்கள் அரை மணி நேரம் குழந்தை படிக்க அறிவுரை கூறினாலும் ஒரு உபயோகமும் இல்லை ஏனென்றால் நீங்கள் ஒரு எதிர்மறை சுவரை எழுப்பி அங்கிருந்து கருத்து கூறினீர்கள். நாம் நேர்மறை எண்ணங்களை உருவாக்கி நேர்மறையாக பேசினோம் என்றால் மிக நல்ல மாற்றம் உண்டாகும்.  ஏனென்றால் எண்ணம் போல் வாழ்வு.

நீங்கள் உங்கள் மனைவியிடம் வாதாடி செய்திருக்கிறீர்களா? | எண்ணம் போல் வாழ்வு

வக்கீலுக்கே படிக்காம சுப்ரீம் கோர்ட்டில் வாதாடி சில பேர் ஜெயிக்கலாம். வக்கீலே ஆனாலும் வீட்டில் மனைவியிடம் வாதாடி ஜெயிக்க முடியாமல் போகலாம். தாம்பத்திய வாழ்க்கையில் மனைவி செய்கிறாரா? கணவர் ஜெயிக்கிறாரா? என்பது முக்கியமல்ல. தாம்பத்தியம் தோற்க கூடாது. கணவன் மனைவி இருவரும் விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் தாம்பத்திய வாழ்க்கை ஜம்முனு இருக்கும். எண்ணம் போல் வாழ்வு.

அடுத்தவர் பார்வையில் நீங்கள் ஹீரோவா? வில்லனா? | எண்ணம் போல் வாழ்வு

நம்ப வாழ்க்கையில நம்ப ஹீரோவாக இருக்கலாம். சில பேர் பார்வையில் நாம் வில்லனாக தெரியலாம். யார் பார்வையில் நம்ப ஹீரோ யார் பார்வையில் நம்ப வில்லன் என்பது நமக்கு தெரியாது. எது எப்படியோ நாம் நல்லவர்களாக நல்ல கர்மங்களை செய்தபடி வாழ்ந்து விட்டு போவோம். எண்ணம் போல் வாழ்வு.

சில வார்த்தைகளுக்கு பல அர்த்தம் உள்ளது உங்களுக்கு தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு

ஆங்கிலத்தில் open என்ற வார்த்தைக்கு அர்த்தம் திறப்பது close என்ற வார்த்தைக்கு அர்த்தம் மூடுவது. ஆனால் இதே வார்த்தைகளுக்கு வேறு சில அர்த்தங்களும் உள்ளது. நம்போ எப்பவுமே அன்பா பரிவா நடக்கும் போது அதாவது open னாக நடக்கும் போது. மக்கள் நம் அருகாமையில் வருவாங்க அதாவது closeஅ வருவாங்க. எண்ணங்கள் எவ்வளவு தூய்மையாக இருப்பது  நல்லதோ அது போல சொற்களில் பல அர்தங்களை தெரிந்து பேசுவது மிக மிக நல்லது. எண்ணம் போல் வாழ்வு.

சந்தோசம் எத்தனை Type? | எண்ணம் போல் வாழ்வு

நம்ப ஒருத்தர கிண்டல் பண்ணலாம், கேலி செய்யலாம் அதன் மூலம் நாம் சந்தோஷம் அடையலாம். ஆனால் அதுல நமக்கு சந்தோஷம், அவர்களுக்கும் தூக்கம் நாம் செய்யும் செயல் நமக்கு பாவத்தை கொண்டு வரும். நாம் அடுத்தவர்களுக்கு உண்மையிலேயே சந்தோஷம் கொடுத்தால். நமக்கும் சந்தோஷம், அவருக்கும் சந்தோஷம் நாம் செய்யும் செயல் புண்ணியமாக மாறிவிடும். அதனால் நாம் எப்போதும் இந்த இரண்டாவது முறையை கடைபிடிப்போம். எண்ணம் போல் வாழ்வு.

நீங்கள் உண்மையில் Powerfulஅ? | எண்ணம் போல் வாழ்வு

உங்கள் நாள் இன்று சிறப்பாக தொடங்கி இருக்கிறது என வைத்துக் கொள்வோம் அப்போது உங்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்போ அல்லது வாட்ஸ்அப் மெசேஜ் வந்து நீங்கள் அப்செட் ஆகி விட்டீர்கள் என்றால் நீங்கள் எப்படிப்பட்டவர். சந்தோஷமாக இருந்த நீங்கள் அப்செட் ஆகிவிட்டீர்கள் அப்போது நீங்கள் powerfulஅ அல்லது உங்களை ஆப்செட் செய்தவர் அவர் powerfulஅ. எந்த சூழ்நிலையிலும் நாம் அப்செட் ஆகக் கூடாது. அதற்கு நாம் ஒவ்வொருவரும் இராஜயோக தியானம் பயிற்சி செய்ய வேண்டும். எண்ணம் போல் வாழ்வு.

வாழ்க்கையை lightஅ எடுத்துக்கங்க | எண்ணம் போல் வாழ்வு

ஒரு நபர் ஒரு கரப்பான் பூச்சியை அடிக்க போனார். அப்போது அந்த கரப்பான் பூச்சி அவரைப்பார்த்து சொன்னது. உங்களுக்கு உங்கள் மனைவியை கண்டால் பயம். உங்கள் மனைவிக்கு என்னை கண்டால் பயம். நீங்கள் உண்மையான வீரராக இருந்தால் உங்கள் வீரத்தை உங்கள் மனைவியிடம் காட்டுங்கள். நம் வாழ்வில் எல்லாவற்றையும் சீரியஸாக எடுத்தால் நாம் வாழ்க்கை வாழ முடியாது. நாம் நம் வாழ்க்கையை மிக இலேசாக எடுத்துக் கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும். எண்ணம் போல் வாழ்வு.

உங்கள் வாழ்க்கை பிரச்சினையை என்ன செய்கிறீர்கள்? | எண்ணம் போல் வாழ்வு

உங்கள் வாழ்க்கையில் வரும் பிரச்சனைகள் அல்லது சவால்களை உடனே முடித்து விடுங்கள். அல்லது அதனை விட்டு விடுங்கள். அந்த பிரச்சினையோடு வாழாதீர்கள். ஒரு பேனாவை இரண்டு நிமிடம் கை நீட்டி பிடிக்க முடியும், ஆனால் அதே பேனாவை இரண்டு மணி நேரம் பிடித்துக் கொண்டிருக்க முடியாது. அதனால் நாம் நம் பிரச்சனைகளை, சவால்களை உடனுக்குடன் முடிப்போம் அல்லது அப்படியே விட்டுவிடுவோம். பிரச்சினையை தலையில் சுமந்து கொண்டு துன்புற வேண்டாம். எண்ணம் போல் வாழ்வு.

இறைவன் யாருக்கும் துக்கம் கொடுப்பதில்லை? | எண்ணம் போல் வாழ்வு

இறைவன் அன்பின் கடல். இறைவன் யாருக்கும் துக்கம் கொடுப்பதில்லை. நாம் அடையும் துன்பம் நாம் செய்த வினைப் பயனே. அதனால்தான் நாம் திரும்பத்திரும்ப கூறுகிறோம் எண்ணம் சொல் செயல் மூலம் யாருக்கும் துக்கம் கொடுக்க வேண்டாம் என்று. ஏனென்றால் எண்ணம் போல் வாழ்வு.

நீங்கள் வெளி உலகத்திற்கு தருவது என்ன? | எண்ணம் போல் வாழ்வு

நம் உடலிலிருந்து வெளிவரும் வியர்வை, ரத்தம், எச்சில், கபம், மலம்,  சிறுநீர் இவை அனைத்தும் அருவெருப்பும் துர்நாற்றமும் தறுபவை ஆகும். ஆனால் நம் மனதில் எழும் எண்ணம், வாயிலிருந்து வரும் சொல், நாம் செய்யும் செயல் அடுத்தவருக்கு பிடித்ததாக இருக்க முடியும். நாம் செய்ய வேண்டியது எண்ணம், சொல், செயல் மூலம் 800 கோடி ஆத்மாவிற்கு சுகம், சாந்தி, செல்வம், மகிழ்ச்சி, ஆரோக்கியம் கொடுப்பது. எண்ணம் போல் வாழ்வு.

பொறுத்தார் பூமி ஆள்வார்? | எண்ணம் போல் வாழ்வு

ஒரு தோட்டக்காரர் அவர் தோட்டத்தில் உள்ள செடி, கொடி, மரங்களுக்கு தினசரி தண்ணீர் ஊற்றுவார். அவருக்கு தனது செடி கொடி மரங்கள் காய் காய்ப்பது மற்றும் பழம் கொடுப்பது எப்போது என்பது தெரியும். அதற்காக அவர் காத்திருக்க தயாராக இருக்கிறார். அதே போன்று நாம் செய்யும் செயல்கள் வெற்றி அடைய அதற்கான கால அளவுக்கு காத்திருக்க வேண்டும். பொறுத்தார் பூமி ஆள்வார். எண்ணம் போல் வாழ்வு.

வாழ்க்கை என்னும் பள்ளிக் கூடத்தில் நீங்கள் யார்? | எண்ணம் போல் வாழ்வு

ஒரு முட்டாள் தான் ஒரு முட்டாள் என்பதை எப்போது உணர்கிறானோ அப்போது அவன் புத்திசாலி ஆகின்றான். ஒரு புத்திசாலி தான் ஒரு புத்திசாலி என உலகத்திற்கு பிரகடனம் செய்யும் போது அவன் முட்டாள் ஆகுகிறான்‌ இந்த வாழ்க்கை என்னும்  பள்ளிக் கூடத்தில் நாம் ஒவ்வொருவரும் மாணவர்களே. நாம் பாடம் கற்றுக் கொள்ளாமல் இருந்தாலும். வாழ்க்கை நமக்கு பாடம் புகட்டாமல் இருப்பதில்லை. நமக்கு சிறந்த வாழ்க்கை வேண்டுமென்றால் நாம் சிறந்த மாணவனாக ஆகவேண்டும். எண்ணம் போல் வாழ்வு.

நீன்கள் மக்களைப் பார்க்கும் பார்வை என்ன? | எண்ணம் போல் வாழ்வு

நாம் ஒருவரைப் பார்க்கும்போது உயர்ந்தவர் என்றோ தாழ்ந்தவர் ஆகவோ பார்க்கக்கூடாது. ஏனென்றால் நமக்கு superiority complex அல்லது inferiority complex வரலாம். அதற்கு பதிலாக நாம் பார்க்கும் ஒவ்வொருவரிடமும் நாம் அவருடைய நன்மையான குணத்தை பார்த்தால் நாம் ஒரு சிறந்த மனிதராக ஆகலாம். அதனால்தான் அனைவருடைய நேர்மறையான குணத்தை மட்டும் பார்ப்போம்.  எண்ணம் போல் வாழ்வு.

யார் யாரெல்லாம் சோம்பேறி? | எண்ணம் போல் வாழ்வு

வேலை செய்யாதவர்கள் மட்டும் சோம்பேறிகள் அல்ல. செய்ய முடிந்ததையும் செய்யாதவர்கள் சோம்பேறிகளே. நாம் எல்லோரும் மூன்று காரியங்கள் செய்ய முடியும். 1. உலகில் உள்ள 800 கோடி ஆத்மாக்களுக்கும் சுகம், சாந்தி, செல்வம், மகிழ்ச்சி, ஆரோக்கியம் கிடைக்க பிரார்த்திக்க முடியும். 2. நமக்கு கிடைத்த ஞானத்தை இலவசமாக அடுத்தவர்களுக்கு கொடுக்க முடியும். 3. நம்மிடம் 100 ரூபாய் இருந்தால் பத்து ரூபாய் தானம் செய்யலாம். எண்ணம் போல் வாழ்வு.

பாவம் புண்ணியம் சரியான புரிதல் என்ன? | எண்ணம் போல் வாழ்வு

நாம் ஒரு பாவச்செயல் செய்து அதை உணர்ந்த பின் இறைவனிடம் தண்டனையை குறைக்குமாறு மன்றாடுகிறோம். இறைவன் நாம் செய்த புண்ணியத்தின் பலனை  குறைத்தால் நாம் ஏற்றுக்கொள்வோமா? இறைவன் நம் புண்ணியத்தின் பலனையும் பாவத்தின் தண்டனையையும் குறைப்பது இல்லை. நாம் செய்யும் நல்லதிற்கும் கெட்டதிற்கும் பலனை நாம் அனுபவித்தே ஆக வேண்டும். அதனால் நாம் எண்ணம் சொல் செயல் மூலம் யாரையும் காயப்படுத்தாமல் இருப்போம். ஏனென்றால் எண்ணம் போல் வாழ்வு.

வாழ்க்கை என்பது என்ன? | எண்ணம் போல் வாழ்வு

வாழ்க்கை என்பது இந்த பூமியில் எத்தனை வருடம் இருந்தோம் என்பது அல்ல. இருந்த வருடங்களில் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தோம் என்பது தான்.  நாம் இந்த வாழ்க்கையில் மூன்று நாட்கள் மட்டுமே வாழவேண்டும் ஒன்று நேற்று, இரண்டு இன்று, மூன்று நாளை. இதில் நேற்றும் நாளையும் நாம் நினைவுகளில் தான் வாழ முடியும். இன்று மட்டுமே நிஜம். இன்றைய நாள் பொழுது நாம் சந்தோஷமாக கழிப்போம். அப்போதுதான் இனி வரும் நாட்களும் சந்தோஷமாக இருக்கும்.  எண்ணம் போல் வாழ்வு.

உங்களுக்கு அடுத்தவரை பார்த்தால் வயிறு எரிகிறதா? | எண்ணம் போல் வாழ்வு

நம்மில் பலர் அடுத்தவர்களுக்கு இறைவன் பணம், பொருள், நிலம், நகை எல்லாம் கொடுத்துவிட்டார் என வயிறு எரிகின்றனர். ஆனால் இறைவன் நமக்கு என்ன கொடுத்தார் என்பதை காண தவறிவிடுகிறோம். யாரொருவர் தனக்கு கிடைத்ததற்கெல்லாம் இறைவனுக்கு நன்றி சொல்கிறார்களோ. அவர்களுக்கு தான் இந்த வாழ்க்கையில் அவர்களுடைய நியாயமான ஆசைகள் நிறைவேறுகின்றன. எண்ணம் போல் வாழ்வு.

உடல் மனம் லைத்துத் தான் காரியங்கள் செய்கிறீர்களா? | எண்ணம் போல் வாழ்வு

நாம் எந்த ஒரு நேரத்திலும் ஒரே ஒரு இடத்தில்தான் இருக்க முடியும். ஒரு வேளை நாம் பள்ளியில் பாடம் படிக்கிறோம் என வைத்துக் கொள்வோம். அப்போது ஆசிரியர் பாடம் நடத்துகிறார், ஆனால் நாம் நினைவால் வெளியே இருந்தோமென்றால். நமக்குத் தான் நஷ்டம் ஏனென்றால் நாம் ஆசிரியர் கூறியதை கேட்கவே இல்லை.  எந்த ஒரு செயலும் வெற்றி பெற வேண்டுமென்றால் நம் உடலும் மனமும் லயித்து வேலை செய்ய வேண்டும். அப்போதுதான் வெற்றி கிடைக்கும்.  எண்ணம் போல் வாழ்வு.

சந்தோஷம் என்பது எது? | எண்ணம் போல் வாழ்வு | #shorts #tamil #thoughts #எண்ணங்கள்

சந்தோஷம் என்பது நாம் தேடும் பொருட்களை எல்லாம் கிடைத்த பிறகு வருவது அல்ல. சந்தோஷம் என்பது நம்மிடம் இருக்கும் பொருளில் திருப்தி அடைவது. Where there is expectation there is loss. எங்கே எதிர்பார்ப்பு இருக்கிறதோ அங்கே தோல்வியும் இருக்கிறது. யார் இருப்பதற்கு நன்றி சொல்கிறார்களோ அவர்களுக்கு நிறைய கிடைக்கிறது. எண்ணம் போல் வாழ்வு.

நீங்கள் சாமர்த்தியசாலி தானே? | எண்ணம் போல் வாழ்வு

ஒரு கணவர் தன் மனைவியிடம் நீ என் சிறந்த பார்ட்னர் இல்லை உனக்கு போதுமான சாமர்த்தியம் போதவில்லை என்று கூறுகிறார். அதற்கு அவர் மனைவி ஒரு சாமர்த்தியமான பெண் உங்களை திருமணம் செய்து கொள்வாலா என கேட்டார்? அதற்கு கணவர் உனக்கு ‌ சாமர்த்தியம்த் இல்லை என்பதை நீயே ஒத்துக் கொள்ளத்தான் கூறினேன் என கூறுகிறார். இப்படி குடும்பத்தில் சண்டை போட்டுக் கொண்டே இருந்தால் குடும்பம் இரண்டாக பிரிந்து விடும். தாம்பத்திய வாழ்க்கையில் கணவனும் மனைவியும் விட்டுக் கொடுத்து வாழ்வதே சிறப்பாக இருக்கும். யார் விட்டுக் கொடுப்பது. யார் சாமர்த்தியசாலியோ அவர் தான். எண்ணம் போல் வாழ்வு.

நம் வாழ்க்கைக்கு யார் பொறுப்பு? | எண்ணம் போல் வாழ்வு

நாம் பேருந்திலோ, ரயிலிலோ, விமானத்திலோ யாத்திரை செய்யும்போது நமக்கு தூக்கம் வரும்போது தூங்குகிறோம் ஏனென்றால் அந்த வாகனத்தை செலுத்துபவர் சிறப்பாக செலுத்துவார் என்ற நம்பிக்கையில். அதே போல நம் வாழ்க்கை என்னும் பயணத்தில் இறைவன் நம் வாழ்க்கையை சிறப்பாக எடுத்துச் செல்வார் என்ற நம்பிக்கையில் படுத்து தூங்கவேண்டும். நாளை என்ன நடக்குமோ என்ற சிந்தனை வரக்கூடாது. அதற்கு நாம் எண்ணம் சொல் செயல் மூலம் யாருக்கும் துக்கம் கொடுக்காமல் இருந்தால் போதுமானது. ஏனென்றால் எண்ணம் போல் வாழ்வு.