Posts

Showing posts from November, 2022

Solution இல்லாத problem என்று ஒன்று இல்லவே இல்லை| எண்ணம் போல் வாழ்வு

நாம் ஒரு சவாலை ஒரு மாதமாக போராடியும் ஜெயிக்க முடியவில்லை என்றால் நமக்கு வேதனையாக இருக்கும். மீண்டும் அந்த சவாலை முதலில் இருந்து தொடங்க வேண்டும் என நினைக்கும் போது மனதுக்கு வலிக்கிறது. ஆனால் நாம் யோசிக்க மறப்பது என்னவென்றால் நாம் இந்த முறை பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்கவில்லை. நமக்கு கொஞ்சம் அனுபவமும் உண்டாகி இருக்கிறது. இந்த முறை நாம் கண்டிப்பாக வெல்வோம், ஏனென்றால் தீர்வு இல்லாத சவால்கள் என்று ஒன்று இல்லவே இல்லைm நாம் தீர்வை நோக்கி போவதால் தீர்வு கண்டிப்பாக கிடைத்துவிடும். கவலை கொள்ள வேண்டாம். எண்ணம் போல் வாழ்வு.

தாம்பத்திய வாழ்க்கை எப்போது சிறப்பாக இருக்கும் தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு

ஒரு நபர் வெளிநாட்டில் வேலை செய்கிறார் இரண்டு மூன்று வருடங்கள் கழித்து இந்தியாவுக்கு மூன்று மாத விடுமுறைக்கு வருகிறார். அவர் வீட்டில் அவர் மனைவி முகம் கொடுத்து பேசவில்லை. மனம் வெறுத்த அந்த நபர் ஒரு வக்கீலை பார்த்து தன் கதையை எடுத்து சொல்லி தனக்கு விவாகரத்து வேண்டும் என கூறினார். அதற்கு வக்கீல் பொதுவாக எல்லோரும் எதிர்பார்க்கும் மனைவியைப் போல உங்கள் மனைவி  கிடைத்திருந்தும் நீங்கள் உங்கள் மனைவி பேசவில்லை என்று கூறி விவாகரத்து கேட்க வந்திருக்கிறீர்கள். நீங்கள் ஒன்றுக்கு நாலு முறை யோசித்து உங்கள் முடிவை கூறுங்கள் என்று வக்கீல் கூறினார். இந்த நபர் கூறுவது போல மனைவி பேசவில்லை என்றால் விவாகரத்து செய்வது என்பது தவறான முடிவாகும். அதேபோல வக்கீல் சொன்னது போல பேசாத மனைவி இருந்தால் நல்லது என்பதும் தவறாகும். தாம்பத்திய வாழ்க்கையில் கணவரும் மனைவியும் பரஸ்பரம் புரிந்து வாழ்ந்தால் வாழ்க்கை இனிப்பாக இருக்கும். எண்ணம் போல் வாழ்வு.

அறிவு மற்றும் ஞானம் வித்தியாசம் என்ன? | எண்ணம் போல் வாழ்வு

உங்களுக்கு அறிவு மற்றும் ஞானம் இவற்றின் வித்தியாசம் தெரியுமா? தக்காளி ஒரு பழம் என்பது அறிவு. அந்த தக்காளியை fruit salad செய்யும்போது பயன்படுத்தக் கூடாது என்பது ஞானம். நம் அறிவையும் ஞானத்தையும் எப்படி வளர்த்துக் கொள்வது என்றால் நாம் தினசரி படிக்கும் பழக்கம் வைத்துக் கொள்ள வேண்டும். நாம் படிக்க படிக்க நமக்கு பகுத்தறியும் சக்தி வளர்ந்து கொண்டே இருக்கும். எண்ணம் போல் வாழ்வு.

நம்பிக்கையே வெற்றிக்கான ஆதாரம் | எண்ணம் போல் வாழ்வு

நமக்கு தெரிந்ததை செய்வதற்கு உடலில் பலம் வேண்டும். நமக்கு தெரியாததை செய்வதற்கு மனதில் நம்பிக்கை வேண்டும். நமக்கு எப்படிப்பட்ட நம்பிக்கை வேண்டும் என்றால் ஒரு குழந்தையை அதனுடைய தந்தை தூக்கி தூக்கி போட்டு பிடிக்கும் போது அந்த குழந்தை சிரித்துக் கொண்டே இருக்கும். தன் தந்தை கீழே விடமாட்டார் என்று அலாதியான நம்பிக்கை இருக்கும். அந்த நம்பிக்கை நமக்கும் இருக்க வேண்டும். அப்போது தான் வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும். எண்ணம் போல் வாழ்வு.

உங்களில் யார் புத்திசாலி? | எண்ணம் போல் வாழ்வு

ஒருவரின் மனைவி அவருடைய கணவரிடம் நீங்கள் முட்டாளா? நான் முட்டாளா? என்று இன்று தெரிந்தாக வேண்டும் என்று கூறினார். ஒருவேளை கணவர் நீ தான் முட்டாள் என்று கூறினால் குடும்பத்தில் ஒரு பெரிய கலகம் ஏற்படும். ஆனால் கணவர் சாதுரியமாக சொன்னார். நீ பெரிய புத்திசாலி என்பதை உலகமே அறியும். நீ தேர்ந்தெடுத்த உன் கணவரும் புத்திசாலியாக தான் இருப்பார். அப்படி இருக்கும்போது நம் இருவரில் ஒருவர் கூட முட்டாளாக இருக்க முடியாது என்று கூறினார். குடும்ப உறவுகளில் நாம் யுக்தியோடு பேச வேண்டும். அப்போதுதான் குடும்பம் நல்லிணக்கமாக செயல்படும். எண்ணம் போல் வாழ்வு.

திருமணத்தின் போது மணமகன் குதிரையில் ஏன் வருகிறார்? | எண்ணம் போல் வாழ்வு

ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணமகனை குதிரையில் கொண்டு வருகிறார்கள். அந்த காட்சியைப் பார்த்த ஒரு நபர் தன் பக்கத்தில் உள்ளவரிடம் திருமணங்களில் மணமகனை குதிரையில் ஏன் கொண்டு வருகிறார்கள் என்று கேட்டார். அதற்கு அந்த நபர் கூறினார் இதுதான் மணமகனின் கடைசி வாய்ப்பு. அவருக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்றால் அந்த குதிரையில் ஓட்டம் பிடித்து விடலாம் என்று கூறினார். உண்மையில் மணமகன் குதிரையில் வருவதற்கான காரணம் அவர் ஒரு ராஜாவை போன்று தன் வாழ்க்கை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக தான். நாம் என்ன எண்ணங்களை கொண்டு வருகிறோமோ அது போன்று நம் வாழ்க்கை அமையும். ஏனென்றால் எண்ணம் போல் வாழ்வு.

உங்களுக்கு ஞானம் அடைவதற்கான மந்திரம் தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு

ஒரு நபர் ஒரு சத்ஸங்கிற்கு சென்று அங்கிருக்கும் குருவிடம் எனக்கு ஞானம் வேண்டும் என கேட்டார். அதற்கு குரு நீங்கள் இங்கு ஒரு உறுப்பினராக சேர்ந்து விட்டால் நாங்கள் உங்களுக்கு ஒரு மந்திரம் சொல்லிக் கொடுப்போம் அதை தினம் தோறும் சொல்லி வாருங்கள் அதன் கூடவே இரண்டு வாழைப்பழமும் தருவோம் நாளடைவில் உங்களுக்கு இந்த ஞானம் வந்துவிடும் என்று கூறினார். உடனே அந்த நபர் எந்த பழத்தை தருவீர்கள் ரஸ்தாலியா? பூவம் பழமா? என கேட்டார். குரு சொன்னார் நீங்கள் எந்த மந்திரம் என கேட்டிருந்தால் சந்தோஷமாக இருக்கும். ஆனால் நீங்கள் என்ன பழம் என கேட்டதால் உங்களுக்கு ஞானம் கிடைக்க சிறிது காலம் அதிகமாக தேவைப்படும் என கூறினார். நாம் நம் லட்சியத்தின் மேல் குறியாக இருக்க வேண்டும். லட்சியத்தை விட்டு விலகினால் நமக்கு லட்சியத்தை அடைய பல நாட்கள் தேவைப்படும். எண்ணம் போல் வாழ்வு.