Posts

Showing posts from September, 2022

நீங்க வெளிநாட்டு டூர் போகப் போறீங்களா? | எண்ணம் போல் வாழ்வு

ஒருத்தர் மனைவி அவர் கணவரிடம் நான் நேற்று மருத்துவரிடம் போகும் போது அவர் என் உடல் ஆரோக்கியத்திற்காக ஒரு மாதம் நன்றாக ஓய்வெடுக்க கூறினார். அதனால் நாம் அமெரிக்கா, யூரோப்பு, சுவிட்சர்லாந்து என சுற்றுலா போய் வரலாமா என கேட்டார். அதற்கு கணவர் நாம் வேறொரு நல்ல மருத்துவர் போய் பார்க்கலாம் என கூறினார். குடும்ப தலைவர்கள் தனக்கு கிடைக்கும் வருமானத்தில் குடும்பத்தை நிர்வாகம் செய்ய வேண்டும். மனைவி, குழந்தைகள் ஆசைப்படுவதெல்லாம் வாங்கிக் கொடுத்தால் பின்னாளில் திண்டாடப்பட வேண்டியதுமா அவர்களே. கடன் இல்லாமல் வாழ்வது சிறந்த வாழ்க்கை ஆகும். எண்ணம் போல் வாழ்வு.

உறவுகளில் நிறையை மட்டும் பாருங்கள்? | எண்ணம் போல் வாழ்வு

ஒருவரின் மனைவி தன் கணவரிடம் உங்களுக்கு குடிப்பழக்கம் இருக்கிறது என்பதை திருமணத்துக்கு முன் ஏன் கூறவில்லை என கேட்டார். அதற்கு கணவர் நீ ரத்தம் குடிக்கும் பழக்கம் இருப்பதை திருமணத்திற்கு முன் ஏன் எனக்கு கூறவில்லை என கேட்டார். திருமணத்திற்கு முன் பல விஷயங்கள் மறைக்கப்பட்டு இருக்கலாம் ஆனால் திருமணத்திற்கு பின் ஆணும் பெண்ணும் இருவரின் நிறையை மட்டும் பார்க்க வேண்டும். அப்போது திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.  எண்ணம் போல் வாழ்வு.

உங்க வாழ்க்கை ஜிங்களாலலாவா? | எண்ணம் போல் வாழ்வு

ஒரு ரேஷன் கடையில் சக்கரை இல்லாததால் அந்த கடைக்காரர் உங்களுக்கு சக்கரை இல்லை என சொல்லும் போது நமக்கு வருத்தமாக இருக்கிறது.  நாம் நீரிழிவு நோய்க்காக டாக்டரிடம் சென்று பரிசோதிக்கும் போது டாக்டர் உங்களுக்கு சக்கரை இல்லை என்று கூறும் போது நாம் சந்தோஷமாக இருக்கிறோம். வாழ்க்கையில் இருக்கிறது என கேட்கும் போதெல்லாம் நாம் சந்தோஷப்படுவதும் இல்லை. அதேபோல வாழ்க்கையில் இல்லை என கேட்கும் போதெல்லாம் நாம் துக்கப்படுவதும் இல்லை.  நாம் வாழ்வில் நல்லதையும் கெட்டதையும் சமமாக பார்க்க கற்றுக் கொண்டால் நம் வாழ்க்கை ஜிங்களால தான்.  எண்ணப் போல் வாழ்வு.

வாழ்க்கையை பயந்து பயந்து வாழ்கிறீர்களா? | எண்ணம் போல் வாழ்வு

ஒரு நபர் தன் நண்பரிடம் நம் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று பார். நாம் குழந்தையாக இருக்கும் போது நாம் பெற்றோர்களிடம் பயந்தோம். பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்களைக் கண்டு பயந்தோம். வாழ் நாள் முழுவதும் இறைவனை கண்டு பயந்தோம். முதுமையில் மரணத்தை கண்டு பயந்தோம். உடனே நண்பர் உன் மனைவியை விட்டு விட்டாயே என்றார்.  அதற்கு அவர் அவள் அடுத்த அறையில் தான் இருக்கிறாள் சத்தமாக பேசாதே என்று கூறினார். வாழ்க்கை என்பது பயந்து பயந்து வாழ்வதற்கானது அல்ல. வாழ்க்கை என்பது ரசித்து ரசித்து வாழ்வதற்கானது. எப்போதும் வாழ்க்கையை நேர்மையா பாருங்கள். அப்போது வாழ்க்கை இனிக்கும். எண்ணம் போல் வாழ்வு 

English is coming to me... | எண்ணம் போல் வாழ்வு

ஒரு நபர் தினசரி இன்ஸ்டாகிராமில் தமிழில் பதிவு போடுகிறார். ஒருநாள் தனது இன்ஸ்டாகிராமில் இப்படி ஒரு வீடியோ பதிவு செய்திருந்தார் அதாவது நீங்கள் என்னுடைய அனைத்து வீடியோக்களையும் தமிழில் தான் பார்க்கிறீர்கள் அதற்கு அர்த்தம் எனக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்று அர்த்தம் கிடையாது. English is coming to me. yes English is coming to me என்று வீடியோ போட்டு இருந்தார். நாம் நமது பலம் மற்றும் பலவீனத்தை தெரியாமல் இருந்தோம் என்றால் ஒருநாள் அவமானப்பட வேண்டி இருக்கும். எண்ணம் போல் வாழ்வு.

ஆபத்து காலங்களில் நம்மை காப்பாற்றுவது யார்? | எண்ணம் போல் வாழ்வு

சில நேரங்களில் நம் வாழ்க்கை பிரச்சினைகளை நமது பெற்றோர்கள், சகோதர சகோதரிகள், நண்பர்கள், ஏன் இந்த சமுதாயம் நினைத்தாலும் காப்பாற்ற முடியாது. அந்த நேரத்திற்கு நமக்கு உதவியாக வருவது நாம் செய்த புண்ணிய காரியங்கள், தர்மங்கள். அதனால் தான் சொல்கிறார்கள் தர்மம் தலைகாக்கும் என்று. அதனால் ஒரு நாளில் நாம் இரவு படுக்கப் போகும் போது நாம் இன்று என்ன புண்ணிய காரியம் செய்தோம் என்று எண்ணி பார்க்க வேண்டும். ஏனென்றால் எண்ணம் போல் வாழ்வு.

சொர்க்க வாழ்வு இங்கேயே அமைத்துக் கொள்வது எப்படி? | எண்ணம் போல் வாழ்வு

நம்முடைய சம்பாத்தியத்தில் நாம் நிறைவாக வாழ முடியும். ஆனால் பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் அவருடைய வாகனங்கள், வீடு போன்று நமக்கும் வேண்டும் என்று நினைக்கும் போது தான் நமக்கு நிம்மதி கெட்டுப்போகிறது. கடன் இல்லாத வாழ்க்கை சொர்க்கம் கடன் உள்ள வாழ்க்கை நரகம். அதனால் நிம்மதியாக வாழ கடனற்று இருங்கள். எண்ணம் போல் வாழ்வு.

காலம் பேசுமா? | எண்ணம் போல் வாழ்வு

காலம்  நம்மிடம் பேசுமா? 800 கோடி ஆத்மாக்கள் தான் செய்யும் ஒவ்வொரு கர்மத்தையும் காலம் அதன் நேரத்தில் விடையாக தரும். நாம் நல்ல நல்ல காரியங்கள் செய்தால் காலம் நமக்கு சுகத்தை தரும் நாம் கெட்ட கெட்ட காரியத்தை செய்தால் காலம் நமக்கு துக்கத்தை தரும். நாம் அனைவரும் நம் வாழ்வில் நல்லதே நடக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அப்படி நடக்க வேண்டும் என்றால் நல்ல காரியங்கள் மட்டுமே செய்வோம். எண்ணம் போல் வாழ்வு.

நம் மன ஆறுதலுக்கு யார் பொறுப்பு? | எண்ணம் போல் வாழ்வு

நம்மை யாராவது தெரிந்தோ தெரியாமலோ எண்ணம் சொல் செயல் மூலம் காயப்படுத்தலாம். அந்த காயத்திற்காக நாம் ஒரு நிமிடமா? அல்லது ஒரு வாழ்க்கை முழுவதுமா? வருத்தப்பட போகிறோம்? நம்மை காயப்படுத்தியவர்கள் யாராக இருந்தாலும், அதிலிருந்து மீண்டு வர வேண்டியது நம்முடைய கடமை ஆகும். யார் என்ன சொன்னாலும் அது நம் புருவத்தின் மத்தி வரை வரலாமே அன்றி அது உள்ளே புகுந்து நம்மை தொந்தரவு செய்யக்கூடாது. இதற்கு நாம் தியானம் பயிற்சி செய்ய வேண்டும். எண்ணம் போல் வாழ்வு.

உங்களுக்கு திருமண வாழ்க்கை இனிக்கிறதா கசக்கிறதா? | எண்ணம் போல் வாழ்வு

ஒருவர் மனைவி அவர் கணவரிடம் உங்களை இப்போது தான் பார்த்தது போல் இருக்கிறது ஆனால் நமக்கு கல்யாணம் ஆகி 20 வருடங்கள் ஓடிவிட்டது என்றார். அதற்கு கணவன் உனக்கு அப்படி எனக்கு உன்கிட்ட தினசரி வகுப்பு கேட்டு கேட்டு 20 வருடங்கள் ஆகிவிட்டது போல் தோன்றுகிறது. இந்த சம்பவத்திலிருந்து ஒருவருக்கு திருமணம் இனிக்கிறது ஒருவருக்கு திருமணம் கசக்கிறது. வாழ்க்கையில் நாம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நமக்கே தோன்றினால் தான் சந்தோஷமாக இருக்க முடியும். நம்மைப் போன்று வேறு ஒருவரை இறைவன் படைக்கவில்லை என புரிந்து கொள்ளும்போது நாம் சந்தோஷமாக இருக்க முடியும். எண்ணப் போல் வாழ்வு.

விவாகரத்துக்கு முக்கிய காரணம் என்ன? | எண்ணம் போல் வாழ்வு

விவாகரத்துக்கான முக்கியமான காரணம் என்ன கணவன் மனைவி இடையே மனப்பொருத்தம் இல்லாததே ஆகும். விவாகரத்து நடப்பதற்கான முக்கிய காரணம் திருமணம் தான். அதாவது ஒரு ஆணும் பெண்ணும் சிந்திக்க வேண்டியது என்னவென்றால் அவர் இருவரும் வெவ்வேறு சூழ்நிலையில் பிறந்து வளர்ந்தவர்கள். தாம்பத்திய வாழ்க்கையில் ஒரு ஆண் சரிம்மா, சாரிமா என்று சொல்ல பழகும் போதும் அதே போல் ஒரு பெண் சரிங்க, சாரிங்க என்ன சொல்ல பழகினால் அவர்கள் திருமண வாழ்வு இனிக்கும். எண்ணம் போல் வாழ்வு.

உங்கள் வீட்டிக்கான ஆட்டா மாவு எங்கே வாங்குகிறீர்கள்? | எண்ணம் போல் வாழ்வு

ஒரு பெண்மணி தன் கணவரிடம் நீங்கள் இந்த ஆட்டமாவை (கோதுமை மாவை) எங்கே வாங்கினீர்கள் எனக்கேட்டார். அதற்கு கணவர் நாம் எப்போதும் வாங்கும் அதே கடையில் தான் வாங்கினேன் என்ன அதற்கு என கேட்டார். அதற்கு மனைவி நான் சுட்ட சப்பாத்தி அனைத்தும் கருகி விட்டன என்று கூறினார். சிலர் எப்போதும் தன்னுடைய தவறை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். நாம் செய்த தவறை கொள்ளும் போது தான் அடுத்த முறை அதே தவறு நடக்காமல் இருக்க சிந்திப்போம், செயல்படுவோம். எண்ணம் போல் வாழ்வு.

தாய்மார்களுக்கு அன்பான வேண்டுகோள் | எண்ணம் போல் வாழ்வு

ஒரு நபர் தன் நண்பரின் வீட்டிற்கு சென்று அரை மணி நேரம் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது நண்பரிடம் உங்கள் மனைவி வீட்டில் இல்லையா என கேட்டார். அதற்கு அவர் மனைவி பெட்ரூமில் இருப்பதாகவும் சார்ஜிங் செய்து கொண்டிருப்பதாகவும் கூறினார். உடனே இவர் மொபைல் சார்ஜ் செய்கிறார்களா? என கேட்டார். அதற்காக இல்லை அவர்கள் அவர்களையே சார்ஜ் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அவருடைய தாயிடம் ஒரு மணி நேரமாக பேசிக் கொண்டிருக்கிறார் என்று கூறினார். தாய்மார்கள் தங்கள் திருமணமான மகளிடம் தினசரி பேசலாம். ஆனால் மகளின் வாழ்க்கை பிரச்சனைகளை மகளே சமாளிக்க விட்டுவிட வேண்டும். அதை சமாளிக்க அறிவுரை கோறினால் அப்போது கூறலாம். எண்ணம் போல் வாழ்வு.

உங்க business என்ன? | எண்ணம் போல் வாழ்வு

இருவர் நண்பர்கள் இருவரும் பெரிதாக ஒன்றும் படிக்கவில்லை அதில் ஒரு நபரின் மகன் இளநிலை படிப்பு முடித்துள்ளார் அதனால் அவர் அவர் நண்பரிடம் என் மகன் இதற்குப் பிறகு மேலே படிக்கப் போகிறாரா அல்லது வேலைக்கு போகப் போகிறாரா என தெரிந்து கொள்ள நண்பரிடம் அவரிடம் கேட்டு சொல்ல கேட்டுக் கொண்டார் அதற்கு நண்பர் ஒரு நாள் தன் நண்பனின் மகனிடம் இதற்கு மேல் நீ என்ன செய்யப் போகிறாய் படிக்கப் போகிறாயா? வேலைக்கு போகப் போகிறாயா என்று கேட்டார். அதற்கு நண்பரின் மகன்.  that is none of your business uncle என்று கூறினான் அதற்காக நல்லது என்று விடைபெற்றார் உடனே அவர் நண்பரிடம் உனது மகன் மேலே படிக்க விருப்பப்படவில்லை அவன் வியாபாரம் பார்க்க விரும்புகிறான் என்று கூறிவிட்டார். இந்த சம்பவத்திலிருந்து நாம் இரண்டு பாடம் கற்றுக் கொள்ளலாம். 1. நாம் பெரியவர்களை தாறுமாறாக பேசக்கூடாது. 2. நாம் ஒருவர் கூறுவதை புரிந்து கொள்ளவில்லை என்றால் அவரிடமே கேட்டு தெரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டுமே தவிர அதை விட்டுவிட்டு நாமே யூகிக்க கூடாது. எண்ணம் போல் வாழ்வு.

குழந்தைகளிடம் advice செய்யும் போது.... | எண்ணம் போல் வாழ்வு

நம் வீட்டில் குழந்தைகள் சிரித்து விளையாடிக் கொண்டிருக்கும் போது நாம் போய் ஏன் எப்போது பார்த்தாலும் சிரித்துக் கொண்டிருக்கிறாய் என கேட்கிறோம். நீ சிரித்துக்கொண்டே இருந்தால் மிக விரைவில் அழ வேண்டி இருக்கும் என சொல்கிறோம். உண்மையில் நாமே சந்தோஷம் தேடிக் கொண்டிருக்கிறோம்.  அதேபோல குழந்தைகள் துக்கத்தில் இருக்கும் போது நாம் போய் உனக்கு நான் எப்போதும் இருக்கிறேன் கலங்காதே என கூறுகிறோம். உண்மையில் வாழ்க்கை குழந்தைகளுக்கு கசப்பான உண்மையை புரிய வைத்துக் கொண்டிருக்கிறது.  அதாவது குழந்தைகள் சந்தோஷமாக இருக்கும்போது நாமும் அவர்களுடன் சேர்ந்து குதூகலமாக இருக்க முயற்சி செய்ய வேண்டும். அதே போன்று குழந்தைகள் துக்கத்தில் இருக்கும் போது நாம் ஆறுதல் கூறுவதன் கூட குழந்தைகளிடம் வாழ்க்கை போதிக்கும் பாடத்தை குழந்தை புரிந்து கொண்டதா என தெரிந்து கொள்ள வேண்டும்.  எண்ணம் போல் வாழ்வு.

நீங்கள் உங்கள் அவகுணத்தை வெற்றி கொள்ள முயற்சிக்கிறீர்களா? | எண்ணம் போல் வாழ்வு

ஒரு நபர் தன் நண்பரிடம் சென்று தான் நல்லவனாக ஆகப் போவதாகவும் அதனால் தன்னிடம் ஏதாவது அவகுணம் இருந்தால் சொல்லுமாறு கேட்டுக் கொண்டார். அதற்கு அவர் நண்பர் நீ உடனே உன் வீட்டுக்கு சென்று உன் மனைவியிடம் அவருடைய ஒரே ஒரு குறையை எடுத்து சொல் அவள் உன் மொத்த அவகுணத்தையும் பட்டியலிட்டு சொல்லிவிடுவாள். அது மட்டுமல்ல உன் சொந்தம் பந்தம் அனைவரின் அவகுணங்களையும் கூறி விடுவார். நாம் நம் அவகுணங்களை கண்டுபிடிக்க நம் நண்பரையோ, மனைவியோ கேட்க வேண்டியது இல்லை.  நாமே எண்ணம், சொல், செயல் மூலமாக யாருக்காவது துக்கம் கொடுத்திருக்கிறோம் என என யோசித்தால், துக்கம் கொடுத்திருந்தால், அதை மாற்றிக் கொண்டால் நாம் ஒரு சிறந்த ஆத்மாவாக ஆகிவிடுவோம். எண்ணம் போல் வாழ்வு.

உங்களை யார் நம்புவார்கள்? | எண்ணம் போல் வாழ்வு

உலகத்தில் ஒரு நபர் அடுத்த நபரை நம்பாமல் இருப்பதற்கு இரு காரணங்கள். 1. அந்த நபரை பற்றி முழுமையாக தெரியாமல் இருப்பது. 2. அந்த நபரை பற்றி முழுமையாக தெரிந்து இருப்பது. நம்மை முழுமையாக தெரியாதவர்கள் நம்பவில்லை என்றால் வருதப்படுவதற்கு ஒன்றும் இல்லை. நம்மை தெரிந்தவர்கள் நம்மை முழுமையாக நம்பவில்லை என்றால் அதற்கு இரண்டு காரணங்கள். 1. அவர்கள் சொல்வது போல் நம்மை முழுமையாக அவருக்கு தெரியாது. 2. நம்மில் ஒரு அவகுணம் கண்டிப்பாக இருக்கிறது. அதை நாம் மாற்றியே தீர வேண்டும். எண்ணம் போல் வாழ்வு.

உங்களுக்குள் பரஸ்பர புரிதல் இருக்கிறதா? | எண்ணம் போல் வாழ்வு

பரவலாக இப்படி சொல்கிறார்கள் அதாவது பொறுப்பே இல்லாத ஒரு ஆண் அல்லது பொறுப்பே இல்லாத ஒரு பெண் அவர் அவர்களுக்கு திருமணம் நடக்கும்போது அவர்கள் வாழ்க்கை மெச்சப்படும் என்று. இதே சமுதாயம் ஒருவர் வாழ்க்கை சீரழிந்து போனதற்கு திருமணமே காரணம் என்றும் சொல்கிறது. அது எப்படி திருமணம் நல்லதாகவும் அதே சமயம் கெட்டதாகவும் ஆக முடியும். திருமண வாழ்க்கையில் பரஸ்பர புரிதல் வாழ்க்கையை சொர்கமாக்கும் எப்போது இந்த புரிதில் இல்லையோ அப்போது வாழ்க்கை நரகமாகும். இவ்வளவுதான் விஷயம். எண்ணம் போல் வாழ்வு.

இறைவனிடம் பேசும் மொழி என்ன? | எண்ணம் போல் வாழ்வு

எனக்கு தமிழ், மலையாளம் மற்றும் ஆங்கிலத்தில் பேச தெரியும். மற்ற பாஷை பேசுபவர்களிடம் பேச முடியாது. நாம் இறைவனிடம் எந்த பாஷையில் பேசுவோம். நாம் எல்லோரும் ஒரு ஆத்மா அவர் அவருக்கு கிடைத்த உடலில் நடித்துக் கொண்டிருக்கிறோம். ஆத்மாவிற்குள் மனம் புத்தி சன்ஸ்கார் இருக்கிறது. இறைவனும் ஆத்மா. அதாவது உயர்ந்ததிலும் உயர்ந்தவர். அவருக்குள்ளும் மனம் புத்தி சன்ஸ்கார் இருக்கிறது. மனம் பேசும் பாஷை எண்ணங்கள். நாம் இறைவனிடம் எண்ணத்தின் மூலமே பேச முடியும். இதற்காக மௌனம், தியானம் கற்றுக் கொண்டால் இறைவனிடம் சிறப்பாக பேசலாம். எண்ணம் போல் வாழ்வு.

நீங்கள் எல்லா விரலிலும் மோதிரம் போடுபவரா? | எண்ணம் போல் வாழ்வு

ஒருத்தர் தன் 10 விரலிலும் மோதிரம் அணிந்து இருந்தார். அதை பார்த்த ஒருவர் உங்களுக்கு மோதிரம் அணிவது மிகவும் பிடிக்குமா என கேட்டார். அதற்கு அவர் என்னுடைய முதல் மோதிரம் திருமணத்திற்காக இடப்பட்டது. அதற்குப் பிறகு குடும்பத்தில் சமாதானம் வேண்டுமே என்பதற்காக கலர் கலராக மோதிரம் அணிய தொடங்கி விட்டேன் என்றார். தாம்பத்திய வாழ்க்கையில் கணவன் மனைவி இடையே பரஸ்பர அன்பு புரிதல் இருந்தால் மட்டுமே உறவுகள் நீடிக்கும் விரல்களில் மோதிரம் அணிவதால் அல்ல. எண்ணம் போல் வாழ்வு.

நீங்கள் செய்யும் செயல்களுக்கு சர்டிபிகேட் எதிர்பார்க்கிறீர்களா? | எண்ணம் போல் வாழ்வு

ஒருவருடைய மனைவி தன் கணவரிடம் சில வருடங்களுக்கு முன்னால் எனக்கு உடல்நிலை சரியில்லாத போது நீங்கள் என்னை மருத்துவமனையில் நன்றாக பார்த்துக் கொண்டீர்கள். அதே போல கொரோனா காலத்தில் எனக்கு கொரோனா வந்த போது அப்போதும் என்னை நன்றாக பார்த்துக் கொண்டீர்கள். இப்போது சமீபத்தில் ஒரு விபத்தில் என் கால் முறிவு ஏற்பட்டபோது அப்போதும் என்னை நன்றாக பார்த்துக் கொண்டீர்கள். இதிலிருந்து உங்களுக்கு என்ன புரிகிறது. நமக்கு கல்யாணம் ஆகி பத்து வருடங்கள் ஆகிறது, எனக்கு எப்போதுமே உடலில் ஏதாவது ஒரு உபாதை இருக்கிறது. நீங்கள் என் வாழ்க்கையில் வந்த ஏழரை என்று கூறினார். நாம் எப்போதுமே நல்ல செயல்களே செய்வோம். ஆனால் யாரிடமும் அதற்கான நற்சான்றிதழ்  கிடைக்க வேண்டும் என்று இருக்க வேண்டாம். எண்ணம் போல் வாழ்வு.

நீங்க ஒரு meaning full life வாழ்றீங்களா? | எண்ணம் போல் வாழ்வு

நமக்கு மனசு சரியில்லாத போது நாம் வேறு சிலரிடம் போன் செய்து நமது மனதை ஆற்றிக் கொள்வோம். அதே போல நமது நண்பர்கள், உறவினர்கள் அவர்களுக்கு மனது சரியில்லாத போது அவர்கள் வேறு யாருக்காவது போன் செய்து அவர்கள் மனதை ஆற்றிக் கொள்வார்கள். நம் சொந்தம், பந்தம் அவர்கள் மனசு சரியில்லாத போது அவர்கள் பேச நினைக்கும் ஆத்மா நாமாக இருந்தால் மிக சிறப்பு. அப்போது தான் நாம் ஒரு சிறந்த வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று பொருள். எண்ணம் போல் வாழ்வு.

எங்கே நிம்மதி? | எண்ணம் போல் வாழ்வு

எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி அங்கே எனக்கோர் இடம் வேண்டும் என்ன மக்கள் பாடுகிறார்கள். சிலர் நிம்மதிக்காக பணத்தை இழக்கிறார்கள். மேலும் சிலர் பணத்திற்காக நிம்மதியை இழக்கிறார்கள். நாம் எந்த காலத்தில் நிம்மதிக்காக நம்மை தொலைக்கக் கூடாது. வாழ்வில் சுகமோ தூக்கமோ நாம் நமது சந்தோஷத்தை என்றும் இழக்கக்கூடாது. யார் இந்த நொடி சந்தோஷமாக இருக்கிறார்களோ அவர்கள் தான் அடுத்த நொடியும் சந்தோஷமாக இருக்க முடியும். இதுவே நிம்மதி அடைவதற்கான நிரந்தர ரகசியம். எண்ணம் போல் வாழ்வு.

உங்களுக்கு அதிகாலை எழும் பழக்கம் இருக்கிறதா? | எண்ணம் போல் வாழ்வு

இன்றைய மாணவர்கள் பள்ளி இருக்கும்போது காலையில் ஆறு மணிக்கு எழுகிறார்கள் அதே பள்ளி விடுமுறை நாட்களில் 8 அல்லது 9 மணி வரை தூங்குகிறார்கள். வேலைக்குப் போகுபவர்கள் வேலை நாட்களில் சீக்கிரமாகவும் வேலை இல்லாத நாட்களில் நேரம் கழித்தும் எழுகிறார்கள்.  நம் வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டும் என்றால் நாம் அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும். அதாவது நான்கு மணிக்கே எழுந்திருக்க வேண்டும். ஏனென்றால் அதிகாலையில் எழுந்து தியானம், உடற்பயிற்சி மற்றும் படித்தல் செய்து பாருங்கள் உங்களுக்கே புரியும்.  எண்ணம் போல் வாழ்வு.