Posts

Showing posts from August, 2022

இது உங்களுக்கு தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு

நம் வாழ்வில் ஒவ்வொரு சம்பவமும் இரு முறை நடக்கிறது ஒன்று நமது மனத்திரையில் ஒன்று நிஜத்தில். ஒருவேளை நாம் காரில் போகும் போது நம் காரை ஏதாவது டூவீலர் வந்து இடித்து விடுவார்கள் என்ற எண்ணத்தை உருவாக்கினாலா அந்த சம்பவம் நடக்க வாய்ப்பு இருக்கிறது.  நாம் பத்திரமாக போய் பத்திரமாக திரும்பி வருவோம் என்ற எண்ணத்தை தான் உருவாக்க வேண்டும்.  எப்போதும் எதிர்மறையான எண்ணங்களை உருவாக்க கூடாது நேர்மையான எண்ணங்களை மட்டுமே உருவாக்க வேண்டும். ஏனென்றால எண்ணம் போல் வாழ்வு.

நீங்கள் சந்திக்கும் நபரிடம் என்ன பார்ப்பீர்கள்? | எண்ணம் போல் வாழ்வு

நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு நபரிடம் என்ன பார்ப்பீர்கள் அவருடைய அழகையா, அவருடைய பணம் மற்றும் வசதியா? நீங்கள் பார்ப்பதனால் அவர்களுடைய vibrationனை பாருங்கள்.  அவர்கள் எவ்வளவுதான் அழகாகவும், செல்வந்தர்களாகவும் இருந்தாலும் அவர்கள் எதிர்மறை எண்ணங்கள் என்னும் வைப்ரேஷனை பரப்பினால் அது நம்முடைய ஆத்ம சக்தியை அழித்துவிடும்.  அதனால் நாம் நேர்மறை வைப்ரேஷன் உருவாக்குபவர்களிடம் உறவு வைத்துக் கொள்வோம். எண்ணம் போல் வாழ்வு.

உங்கள் மனைவியோட physchology உங்களுக்கு தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு

physchology என்பது ஒரு science அது  mind மற்றும் behaviour பற்றிய படிப்பாகும். தாம்பத்திய வாழ்க்கையில் கணவன் மற்றும் மனைவிக்கு இடையே mind மற்றும் behaviour compatible ஆக இருக்க வேண்டும். ஒரு வேலை ஒருவர் physchoவாக இன்னொருவர் logicalகலாக சிந்திப்பவராக இருந்தால் அந்த குடும்பம் என்னவாகும் என யோசித்துப் பாருங்கள். கணவன் மனைவி இருவரும் மனம் மற்றும் நடத்தையில் பொறுத்தப்பட்டு போக வேண்டும். மனம் எண்ணங்களை உருவாக்கக்கூடிய தொழிற்சாலை ஆகும். அதனால்தான் கூறுகிறோம். எண்ணம் போல் வாழ்வு.

உங்கள் காதலியே இன்று உங்கள் மனைவியா? | எண்ணம் போல் வாழ்வு

ஒரு தொலைபேசி கம்பெனியிலிருந்து ஒரு நபருக்கு போன் வந்தது அவர்கள் கேட்டார்கள் நீங்கள் கடந்த ஆறு மாதமாக இரவு முழுவதும் போனில் பேசியிருக்கிறீர்கள், ஆனால் இப்போது அப்படி நடக்கவில்லை ஏனென்று தெரிந்து கொள்ளலாமா என்று கேட்டார்கள். அதற்கு அவர் நான் என் காதலியுடன் இரவு முழுவதும் பேசிக் கொண்டிருந்தேன். இப்போது அவருக்கு திருமணம் ஆகிவிட்டது என்றார். இப்போது அவள் என் மனைவி என்று கூறினார். காதலிக்கும் போது ஃபோனில் பேசுவது சகஞம். திருமணம் ஆகிவிட்டால் அவர் அருகில்  இருப்பதால் போனில் பேச வேண்டிய அவசியம் இல்லை. இதில் கூடுதலாக சிந்திக்க ஒன்றும் இல்லை. எண்ணம் போல் வாழ்வு.

Crush புது definition தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு

crush ன்னா friend க்கு மேல lover க்கு கீழ் அப்படின்னு விளக்கம் கொடுக்கறாங்க. ஆனா உண்மையான விளக்கம் crush ன்னா friend க்கு மேல lover க்கு பக்கத்துல. ஏன் அப்படி சொல்றோம்னா காதல் தோல்வி வேதனை தர மாதிரி crush பிரியும்போது ஒரு வேதனை தருகிறது.  மாணவர்கள் படிக்கும் வயதில் படிப்பில் கவனம் செலுத்த வேண்டுமே தவிர காதல் crush என நேரத்தை வீணடிக்க கூடாது.  எண்ணம் போல் வாழ்வு.

பெண்கள் மனதில் என்ன இருக்கிறது என கண்டுபிடிக்க முடியுமா?

ஆறும் அது ஆழமில்ல, அது சேரும் கடலும் ஆழமில்ல, ஆழம் எது ஐயா அந்த பொம்பள மனசு தான்யா. எல்லோரும் பெண்களின் மனதில் என்ன இருக்கிறது என ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். இன்று உலகத்தில் ஒரு 800 கோடி ஆத்மாக்கள் இருக்கிறார்கள். ஆனால் இறைவன் ஒவ்வொருத்தரின் மனதில் என்ன இருக்கிறது என்பதை அவரே பார்ப்பதில்லை. அப்படி இருக்கும்போது நாம் ஏன் நம் நேரத்தை வீணடிக்க வேண்டும். எல்லோரையும் அவர்களை அப்படியே ஏற்றுக் கொண்டால் நம் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.  எண்ணம் போல் வாழ்வு.

நீங்கள் ஒரு புது கார் வாங்க போறீங்களா? | எண்ணம் போல் வாழ்வு | #shorts #tamil #thoughts

நீங்க ஒரு புது கார் வாங்கப் போறீங்களா? அதுவும் EMI ல வாங்க போறீங்களா? அப்போ இந்த மூணு பாயிண்ட்ஸ நினைவில் கொள்ளுங்கள். ஒன்று - அந்த கார் வாங்குவதற்கான 20% முன் பணம் நம்மிடம் கையில் இருக்க வேண்டும். இரண்டு - கார் வாங்கும் தவணை நாலு வருடங்களுக்குள் இருக்க வேண்டும். மூன்று - கார்க்கான EMI தொகை நாம் வாங்கும் சம்பளத்தில் பத்து சதவீதத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும். கார் வாங்கும் போது இந்த 3 விஷயத்தை நினைவில் கொள்ளுங்கள், இல்லையேல் நாம் பிறகு வருத்தப்பட வேண்டி இருக்கும். எண்ணம் போல் வாழ்வு.

ஒரு காதலியின் கல்யாண பத்திரிகை? | எண்ணம் போல் வாழ்வு

Image

உறவுகள் மேம்பட ஒரு யுக்தி | எண்ணம் போல் வாழ்வு

உறவுகள் நீண்ட நாள் நீடிக்க நம் சொல் மற்றும் செயல் மட்டுமே போதுமானது அல்ல நம் நல்ல எண்ணமே அதை உறுதி செய்கிறது. அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஒரு தாயின் அன்பு. ஒரு தாய்க்கு எத்தனை குழந்தைகள் இருந்தாலும் அவர்களுக்கு சரி சமமான அன்பை பகிர்வதற்கு முக்கியமாக காரணம் அவளுடைய எண்ணமான என் குழந்தைகள் என்பதே.  எப்போது எண்ணங்கள் உயர்வாக இருக்கிறதோ சொல்லும், செயலும் தானாகவே நன்றாக இருக்கும். சிறந்த உறவுகள் நீடிக்க உயர்ந்த எண்ணங்களை உருவாக்குவோம்.  எண்ணம் போல் வாழ்வு.

உங்கள் வெற்றிக்கு யார் காரணம்? | எண்ணம் போல் வாழ்வு

Image

ஒரு நாளில் எத்தனை மணி நேரம் தூங்குவீர்கள்? | எண்ணம் போல் வாழ்வு

ஒரு பையன் அவன் நண்பர்களிடம் சொன்னான் எங்க அப்பா சொன்னாரு நம்போ யாருக்குமே துக்கம் மற்றும் கஷ்டம் யாருக்கும் கொடுக்க கூடாது. உடனே அவன் நண்பர்கள் சொன்னார்கள் நல்ல விஷயம். அதற்கு நீ என்ன செய்கிறாய் என கேட்டார்கள். அதற்கு அவன் சொன்னான் நான் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தூங்கி விடுவேன் என்று.  ஒரு நாளில் நாம் ஆறு முதல் 8 மணி நேரம் தூங்கலாம். ஆனால் தூங்குவதே வாழ்க்கையின் லட்சியமாக வைத்துக் கொள்ள முடியாது. நாம் நம் வாழ்க்கையில் அதிகாலையில் எழுவோம், வேலைகள் செய்வோம்  மற்றும் சாதிப்போம். எண்ணம் போல் வாழ்வு.

உங்கள் வெற்றிக்கு யார் காரணம்? | எண்ணம் போல் வாழ்வு

ஒரு ஆண் மகன் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருக்கிறாள் என கூறுகிறார்கள், ஆனால் உண்மையில் ஒரு ஆண் கார், வீடு, வசதி ஏற்படுத்திய பிறகு தான் அவனுக்கு சிறந்த ஒரு பெண் திருமணத்திற்கு ஏற்றுக் கொள்கிறாள். திருமணத்திற்கு வசதி, பணம் இவற்றை எவ்வளவு முக்கியமாக பார்க்கிறோமோ அதே போல ஆண், பெண் இருவரின் குணத்தையும் பார்க்க வேண்டும். ஏனென்றால் குணம் தான் வாழ்க்கையை சுரக்க்ஷிதம் ஆக்குகிறது.  எண்ணம் போல் வாழ்வு.

ஒரு காதலியின் கல்யாண பத்திரிகை? | எண்ணம் போல் வாழ்வு

ஒருத்தனுடைய காதலி அவளுடைய கல்யாணப் பத்திரிகையை அவனிடம் கொடுத்து போய்விட்டாள். இதை பார்த்த அவனுடைய நண்பன் நீங்கள் இரண்டு பேரும் திருமணம் செய்வீர்கள் என நான் நினைத்தேன், உங்கள் இருவரின் பெயரும் இந்த பத்திரிகையில் இருக்க வேண்டும் என ஆசைப்பட்டேன் என்று கூறினான். அதற்கு அவன் இப்போதும் எங்கள் இரண்டு  பேரின் பெயரும் இந்த பத்திரிகையில் இருக்கிறது. அவளுடைய பெயர் பத்திரிகைக்குள்ளும் என்னுடைய பெயர் பத்திரிகையின் கவரிலும் உள்ளது என்றான். வாழ்க்கையில் எவ்வளவு பெரிய tragedy வந்தாலும் நாம் அதை நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருப்பதைவிட்டு விட்டு அடுத்தது என்ன செய்யலாம் என யோசித்து செயல்படும் போதே நம் வாழ்க்கை சிறப்பாக ஆகிறது. எண்ணம் போல் வாழ்வு.

உங்கள் சொத்து பத்திரம் யார் பெயரில் உள்ளது? | எண்ணம் போல் வாழ்வு

ஒரு காதலன் தன் காதலியிடம் எனக்கு உன்னை மிக மிக பிடிக்கும் அதனால் உன் பெயரை நான் பச்சை குத்திக் கொள்ளவா அல்லது என் இதயத்தில் எழுதிக் கொள்ளவா என கேட்டான். அதற்கு காதலி வேண்டும் என்றால் உங்கள் சொத்து பாத்திரத்தில் என் பெயரை எழுதிக் கொள்ளுங்கள் என்று கூறினாள். உறவுகள் அன்பின் பெயரில் உருவாக வேண்டும் பொருளின் பெயரில் அல்ல. எந்த உறவு பொருட்கள், வசதி, சொத்து பார்த்து ஏற்படுகிறதோ அது நீண்ட நாள் நிலைப்பதில்லை. எண்ணம் போல் வாழ்வு.

உங்களுக்குள் ஊடல் ஒன்றும் இல்லையே? | எண்ணம் போல் வாழ்வு

ஒரு திருமணமான பெண் அவருடைய அம்மா வீட்டுக்கு சென்று தன் கணவருக்கு போன் செய்கிறார். அவரை உடனே வந்து தன்னை வீட்டுக்கு அழைத்துப் போகுமாறு கூறுகிறார். கணவர் ஆச்சரியமாக பத்து நாள் தங்குவதாக போய் விட்டு ஐந்தாவது நாளே திரும்பி வருவதாக கூறுவது ஏன் என்று கேட்டார். அதற்கு அவர் மனைவி இந்த ஐந்து நாளில் என் அப்பா, என் அம்மா, தம்பி, தங்கை என் எல்லோருடனும் சண்டை போட்டாச்சு ஆனால் உங்களுடன் சண்டை போடும் போது தான் அதில் ஒரு சுவாரஸ்யம் இருக்கிறது. அதனால் நான் எனது உடைகளை எடுத்து வைத்து விட்டேன். நீங்கள் வந்து என்னை அழைத்து செல்லுங்கள் என்று கூறினார். தாம்பத்திய உறவில் ஊடல்கள் இருக்கலாம். சிறு சிறு பிணக்கங்கள் இருக்கலாம். ஆனால் அதுவே பெரிய பிரச்சினையாக ஆகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். எண்ணம் போல் வாழ்வு.

மனசும் money purseசும் | எண்ணம் போல் வாழ்வு

நம் மனசும் நம் money purseசும் ஒரே போல தான் நம் money purseசில் நிறைய சில்லறைகள் இருக்கும்போது அது பாரமாக தெரிகிறது. அதேபோல நம் மனதில் நடந்து முடிந்த பழைய சில்லறை விஷயங்கள் மனதில் இருக்கும் போது நமக்கு பாரமாக தெரிகிறது.  நம் money purseசில் ரூபாய் நோட்டுகள் இருக்கும் போது purse லேசாக தெரிகிறது. அதே போல நம் மனதில் நல்ல நல்ல எண்ணங்கள் தோன்றும் போது நம் மனது லேசாகிறது. நம் வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும்.  எண்ணம் போல் வாழ்வு.

நாளைய சந்தோசம் இன்றைய சந்தோஷம் எது முக்கியம்? | எண்ணம் போல் வாழ்வு

நாம் அடுத்த ஐந்து வருடத்தில் இதை அடைய வேண்டும் என்ற கனவை உருவாக்கி அதற்காக உழைக்கிறோம். அடுத்த ஐந்து வருடத்தில் நம் கனவு நினைவாகிறது. ஆனால் அன்று நாம் சந்தோஷப்படுவதற்கு பதிலாக அடுத்த ஐந்து வருடத்திற்கு என்ன செய்யலாம் என திட்டம் தீட்டி வேலை செய்ய ஆரம்பித்து விடுகிறோம். நாளைய சந்தோஷத்தை விட இன்றைய சந்தோஷத்திற்கு நாம் உழைப்போம். அப்போது நம் வாழ்க்கை மிகச் சிறப்பாக இருக்கும். எண்ணம் போல் வாழ்வு.

வாழ்க்கை என்னும் ஓடம் | எண்ணம் போல் வாழ்வு

ஒருவர் பிரார்த்தனையில் கடவுளே எனக்கு வாழ்க்கை வெறுத்து விட்டது நான் சாகலாம் என நினைக்கிறேன் என்றார். உடனே அவருக்கு ஒரு அசிரிரியின் சத்தம் கேட்டது. நல்லது இன்று மாலை உன்னை அழைத்துக் கொள்கிறேன் என்று. உடனே அந்த நபர் பயந்து போய்விட்டார் இறைவா நான் வெறும் விளையாட்டுக்காக தான் சொன்னேன். நான் இறக்க முடிவு செய்யவில்லை என்று. பொதுவாக மக்களுக்கு வாழ பிடிக்கவில்லை ஆனால் இறக்கவும் தைரியம் இல்லை. பாருங்கள் இன்று உலகில் 800 கோடி பேர் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதனால் நாமும் வாழ்ந்து காட்டுவோம். சவால்களை ஜெயித்து காட்டுவோம்.  எண்ணம் போல் வாழ்வு.

நாமும் தேவதை ஆகலாம் | எண்ணம் போல் வாழ்வு

நாம் மரியாதையே கொடுக்க தகுதி இல்லாதவர் என்று நினைப்பவருக்கும் நாம் மரியாதை கொடுப்போம். ஏனென்றால் நாம் மரியாதை காண்பிப்பது நமது பண்பு ஆகும். அது அடுத்தவருக்கு இருக்கிறதோ இல்லையோ. தேவதை என்பதன் பொருள் தெய்வீக குணம் உள்ள மனிதர்கள். நாம் தேவதைகளைப் போல நடந்து கொள்வோம். நம்முடைய முகம், நம்முடைய புன்னகை அடுத்தவர்களை வசிகரிக்கட்டும்.  எண்ணம் போல் வாழ்வு.

நீங்க எந்த category? | எண்ணம் போல் வாழ்வு

சிலர் அதிகாலையில் எழுந்தவுடன் நாம் அடுத்தவர்களுக்கு என்ன வேலை கொடுக்கலாம் என யோசிக்கிறார்கள்.  சிலர் அதிகாலையில் எழுந்தவுடன் நமக்கு கொடுக்கப்பட்ட வேலையை எப்படி செய்யலாம் என்று யோசிக்கிறார்கள்.  ஒரு படிப்பு சொல்கிறது உலகில் மூன்று சதவிகித மக்கள் அடுத்தவர்களுக்கு வேலை கொடுப்பதாகவும் 97 சதவீத மக்கள் தங்களுக்கு கிடைத்த வேலையை செய்வதாகவும் கூறுகிறது.  நாம் எந்த பிரிவில் இருக்க வேண்டும் என நாம் தீர்மானிப்போம். உயர்ந்த எண்ணங்கள் உயர்ந்த இடத்தில் கொண்டு செல்லும்.  ஏனென்றால் எண்ணம் போல் வாழ்வு.

சூரிய உதயம் நமக்கு உணர்த்தும் பாடம் என்ன? | எண்ணம் போல் வாழ்வு

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மாலையும், ஒவ்வொரு சூரிய அஸ்தமனமும் நமக்கு உணர்த்துவது நாம் நம் ஆயுளில் ஒரு நாள் முடித்து விட்டோம் என்பது தான். அதேபோல ஒவ்வொரு சூரிய உதயமும் இறைவன் நமக்கு நம் மன விருப்பங்களை நிறைவேற்ற இன்னும் ஒரு நாள் கொடுத்திருக்கிறார் என்பது ஆகும். அதனால் நாம் ஒவ்வொரு விடியலையும் சிறந்த முறையில் பயன்படுத்தி நம் வாழ்க்கை சிறப்பாக வைத்துக் கொள்வோம். எண்ணம் போல் வாழ்வு.

நாம் யாரிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்? | எண்ணம் போல் வாழ்வு

நாம்  பார்க்கும் ஒவ்வொருவரிடமும் இந்த மூன்று விசேஷங்களை பாருங்கள். 1 அவர்கள் புத்திசாலித்தனம் 2 அவர்கள் செயலாற்றும் திறன் 3 அவர்களின் நேர்மை. யாரிடம் நேர்மை இல்லையோ அவர்கள் புத்திசாலியாக இருந்தாலும் செயலாற்றும் திறன் உடையவராக இருந்தாலும் அவரிடம் ஜாக்கிரதையாக இருங்கள். வேண்டுமென்றால் விலகி இருங்கள். அப்போது உங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். எண்ணம் போல் வாழ்வு.

நீங்கள் எப்படிப்பட்ட புத்தகம் படிப்பீர்கள்? | எண்ணம் போல் வாழ்வு

புத்தகம் படிக்கும் பழக்கம் நல்லது. நாம் எப்படிப்பட்ட புத்தகம் படிக்க வேண்டும்? நாம் புத்தகம் படிக்கும்போது பக்கங்களை புரட்டிக் கொண்டே இருந்தால் அது சாதாரண புத்தகம். அதுவே நாம் புத்தகம் படிக்கும் போது அது நம்மை புரட்டிப் போட்டால் அதாவது நம்மை யோசிக்க செய்தால் அது சிறந்த புத்தகம். நாம் சிறந்த புத்தகத்தை படிப்போம் நம் வாழ்வை சிறப்பாக வைத்துக் கொள்வோம். எண்ணம் போல் வாழ்வு.

Simple formula for success life | எண்ணம் போல் வாழ்வு

வாழ்க்கையில் சிறப்பாக வாழ எளிமையான வழி என்ன தெரியுமா. நாம் யாரையும் தோற்கடிக்க வேண்டாம் ஆனால் எல்லோருடைய மனதையும் ஜெயிக்க வேண்டும். நாம் யாரையும் கண்டு ஏளனமாக சிரிக்க வேண்டாம் அடுத்தவர் சிரிப்புக்கு நாம் காரணமாக இருப்போம். இந்த சிறிய இரண்டு வழிகளை பின்பற்றியினால் நம் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். எண்ணம் போல் வாழ்வு.

காற்று உள்ள போதே தூற்றிக்கொள்| எண்ணம் போல் வாழ்வு

ஒரு பையன் ரொம்ப வருஷமா ஒரு பொண்ணு ஒரு தலையா காதலிச்சிட்டு வந்தான். அவன் நண்பர்கள் அவகிட்ட போய் உன் காதலை சொல்ல வேண்டியது தானே என்று கூறினார்கள் உடனே அவன் ஒரு தைரியத்தை வர வைத்து அடுத்த நாள் மாலைக்குள் தனது காதலை வெளிப்படுத்துவதாக கூறினான் அடுத்த நாள் மாலை நண்பர்கள் அவனை கேட்டபோது அவன் சொன்னான் நேற்று மாலையே அவள் என் மொபைல் நம்பரை பிளாக் செய்து விட்டால் என்று. நான் வாழ்க்கையில் நமக்கு வரும் வாய்ப்புகளை அப்போது அப்போதே பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போது தான் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். எண்ணம் போல் வாழ்வு.

உலகப் பார்வையும் உங்கள் பார்வையும் ஒன்றா? | எண்ணம் போல் வாழ்வு

ஒரு பொண்ணு அவ பாய் பிரண்டு கிட்ட வந்து உனக்கு ஒரு நல்ல நியூஸ் ஒரு கெட்ட நியூஸ் சொல்ல போறேன்னு சொல்ல ஆரம்பிச்சா. உனக்கு எனக்கும் செட் ஆகாது அதனால நம்ப பிரேக் அப் பண்ணிக்கலாம். அதுக்கு அந்த பாய் ஃப்ரெண்ட் ஓகே அப்போ அந்த bad நியூஸ் என்ன என்று கேட்டான். நாம் நல்லதுன்னு நினைக்கிறது உலகம் நல்லதுன்னு நினைக்கவேண்டும் என்று அவசியம் இல்லை.  நான் கெட்டதுன்னு நினைக்கிறது உலகம் கெட்டதுன்னு நினைக்கணும்னு அவசியம் இல்லை. நம்ப பார்வையும் உலக பார்வையும் ஒரே அளவுல இருக்கும் என்று எதிர்பார்ப்பதே சரி அல்ல. எண்ணம் போல் வாழ்வு.

நீங்க disturbedஅ இருக்கீங்களா? | எண்ணம் போல் வாழ்வு

ஒரு பையன் ரொம்ப disturbedஅ இருந்தான். அப்போ அவன் girl friend வந்து baby நீ ஏன்ரொம்ப disturbedஅ இருக்கன்னு கேட்டா?  அதுக்கு அவன் baby நீ இருக்கும் போது என்னை யாராவது disturb பண்ண முடியுமா?  இப்போ அவ ரொம்ப confuse ஆயிட்டா. இவன் நம்மள யாரும் டிஸ்டர்ப் பண்ண மாட்டாங்கன்னு பாசிட்டிவா சொல்றேனா? அல்லது நான் தான் disturbnessன்னு நெகட்டிவா சொல்றேனா? வாழ்க்கையில என்ன சூழ்நிலை வந்தாலும் நாம் அதை பாசிட்டிவா தான் பார்க்கணும். அப்போது தான் நம்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.  எண்ணம் போல் வாழ்வு.

உங்களுக்கு Depression இல்ல இல்லையா? | எண்ணம் போல் வாழ்வு

ஒரு Pharmacy owner அவர் customer கிட்ட அடுத்த வாட்டி depression க்கு மருந்து வாங்கும் போது டாக்டரோட prescriptionனோட தான் வரணும். அப்பதான் நான் மருந்து தருவேன். நீங்க ஒவ்வொரு வாட்டியும் உங்க கல்யாண போட்டோவை காமிச்சு depression க்கு மருந்து வாங்குவது சரி இல்லை. தாம்பத்திய வாழ்க்கை என்பது கணவனும் மனைவியும் இணக்கமாக வாழ்வது. அப்படி வாழ்ந்தால் depression வரவே வராது.  எண்ணம் போல் வாழ்வு.

இக்கரைக்கு அக்கரை பச்சை | எண்ணம் போல் வாழ்வு

நம்போ காதலிக்கிற வயசுல நம்ம காதலை வீட்ல ஏத்துக்கலைன்னா வீட்டை விட்டு ஓடிப் போய் கல்யாணம் பண்ணிக்கலாமா என்ற எண்ணம் தோன்றுகிறது. கல்யாணமான பிறகு மனைவியின் தொல்லை தாங்கவில்லை என்றால் காட்டுக்கு ஓடிப் போகலாமா என்று எண்ணமும் வருகிறது. வாழ்க்கை என்பது இக்கரைக்கு அக்கரை பச்சை தான். நாம் commit ஆகுவதற்கு முன்பாக எவ்வளவு வேண்டுமானாலும் யோசிக்கலாம் ஆனால் commit ஆகிய பிறகு back அடிக்க கூடாது. இதை தான் திருவள்ளுவர் எண்ணித் துணிவது கர்மம் துணிந்த பின் எண்ணுவது என்பது இழுக்கு என கூறியிருக்கிறார். எண்ணம் போல் வாழ்வு.

Lamborghini, Ferrari car வாங்க plan போடுறீங்களா? | எண்ணம் போல் வாழ்வு

Lamborghini, Ferrari car எல்லாம் டிவியில் விளம்பரம் தருவதில்லை, ஏனென்றால் உலகில் உள்ள ஒரு சதவிகித பணக்காரர்கள் மட்டுமே இந்த கார்களை வாங்குகிறார்கள். இப்படிப்பட்ட பணக்காரர்கள் டிவியை பார்ப்பதில்லை. நாமும் Lamborghini, Ferrari இது போல் ஆக வேண்டுமென்றால் டிவி சீரியல் போன்றவற்றை பார்க்காமல் இருப்பது உத்தமம். நாம் நம் வாழ்வில் உழைப்பில் கவனம் செலுத்துவோம். எண்ணம் போல் வாழ்வு.

யாரைப் பற்றியும் சற்றென்று ஒரு முடிவுக்கு வராதீர்கள் | எண்ணம் போல் வாழ்வு

ஒருத்தர் சொன்னாரு அடுத்த வாரம் எல்லாரையும் பாத்துக்குறேன் ஒவ்வொருத்தரையா பாத்துக்குறேன். நீங்க அவர பத்தி என்ன நினைக்கிறீங்க கோபக்காரர்? சண்டை போடுபவர? அவர் அடுத்ததா என்ன சொன்னார் தெரியுமா என் கண்ணுக்கு பரிசோதனை பன்னேன். அடுத்த வாரம் எனக்கு கண்ணாடி கிடைத்துவிடும் அப்புறம் ஒவ்வொருத்தரையும் கிளியரா பார்ப்பேன். நம்போ ஒருத்தர் பேசுர ரெண்டு வரியில் வைத்து அவரைப் பற்றி ஒரு முடிவுக்கு வரக்கூடாது. அவர் முழுமையாக பேசின பிறகு நாம் ஒரு முடிவுக்கு வருவது நல்லது. எண்ணம் போல் வாழ்வு.

நீங்க எப்படி feel பண்றீங்க? | எண்ணம் போல் வாழ்வு

நான் ஒல்லியாக இருக்கிறேன் நான் குண்டாக இருக்கிறேன் என் முகம் லட்சணமாக இல்லை என்றெல்லாம் யோசிக்கிறீர்களா? நீங்கள் உங்கள் உடலை தயார் செய்து, முகத்தையும் பார்க்கும் படி செய்தாலும் உங்களை யாரும் பார்க்கப் போவது இல்லை. ஏனென்றால் நாம் முதன் முதலில் ஆழ்மனதில் நாம் மிக மிக சிறப்பான மனிதர் என்பதை எண்ணத்தில் கொண்டு வர வேண்டும். ஒரு positive attitude இருக்க வேண்டும். அப்போது தான் வெளிப்புறத்திலும் நாம் பார்க்க லாயக்காக, லட்சனமாக இருப்போம். எண்ணம் போல் வாழ்வு.