Posts

Showing posts from October, 2022

உங்களுக்கு ஆமை முயல் கதை தெரியும் அல்லவா? | எண்ணம் போல் வாழ்வு

உங்களுக்கு ஆமை முயல் உண்மை கதை தெரியுமா? ஆமைக்கும் முயலுக்கும் ஒரு உள் அரங்கில் போட்டி நடந்தது. போட்டி முடிந்த பிறகு ஒரு நிருபர் நடுவரிடம் இந்த போட்டியில் முயல் தானே ஜெயித்தது என்று கேட்டார். அதற்கு நடுவர் ஆமாம், ஆமாம் என்று கூறினார். இந்த நிருபர் தன் நண்பர்களிடம் போய் சொன்னார் இந்த போட்டியில் ஆமை ஜெயித்தது என்று. அவர்கள் அது எப்படி சாத்தியம் என கேட்டார்கள் ஒருவேளை முயல் தூங்கி இருக்கும் என்று அவர் சொன்னார். இப்படித்தான் அந்த கதை உருவானது. இன்றைய கலி காலத்தில் சரித்திர நிகழ்வுகள் இந்த கதையை போன்று திரித்து கூறப்படுகிறது. நாம் தான் தெளிவாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் நம் காதில் பூ சுற்றி விடுவார்கள். எண்ணம் போல் வாழ்வு.

நீங்கள் Social Mediaவில் post போடுபவரா? | எண்ணம் போல் வாழ்வு

நாம் நல்ல மனநிலையில் இருக்கும்போது ஒரு சோகப் பாடலை கேட்டாலும் அதன் வரிகளை படித்துப் பார்த்து சந்தோஷப்படுவோம். ஆனால் நாமே துக்கமாக இருக்கும்போது ஒரு சோக பாடலைக் கேட்டால் நாம் துவண்டு போய் விடுவோம். அந்த பாடலை நம் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் ஆக வைத்தால் அதை பார்த்து பத்து அல்லது 50 பேர் சோகமாக இருந்து மேலும் சோகமானால் அந்த பாவம் நம்மை வந்து சேரும்.  அதனால் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைக்கும் முன் அது அடுத்தவருக்கு சுகம் தருமா? துக்கம் தருமா? என தெரிந்து, புரிந்து வைக்கவும் அல்லது நமக்கு பாவம் வரும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.  எண்ணம் போல் வாழ்வு.

எண் 9 மற்றும் நட்பின் இலக்கணம் | எண்ணம் போல் வாழ்வு

நம் நட்பானது எண் ஒன்பதை போன்று இருக்க வேண்டும். ஒன்பது கூட ஒன்பதை கூட்டும்போது 18 வருகிறது அதை ஒன்று பிளஸ் எட்டு என்று கூட்டும்போது மீண்டும் 9 வருகிறது. மேலும் ஒரு ஒன்பதை கூட்டினால் 18, 27 ஆகிறது 2 பிளஸ் 7 மீண்டும் 9 ஆகிறது. அதே போன்று நட்பில் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நட்பு நிலையாக இருக்க வேண்டும். நட்பில் நாம் நண்பர்களுக்கு உதவும் போது உதவி நடக்க வேண்டும் நாம் மறைந்து இருக்க வேண்டும் அதாவது ஒன்பதில் கூட ஐந்து கூட்டினால் 14 வரும் ஒன்று பிளஸ் நான்கு ஐந்து. ஐந்தை வெளிக்காட்டி 9 மறைந்து விட்டது. மேலும் ஒரு உதாரணம் ஒன்பது கூட மூன்றை கூட்டினால் 12 வரும் ஒன்று பிளஸ் இரண்டை கூட்டினால் மூன்று வரும் மூன்று வெளிக்காட்டி 9 மறைந்திருக்கிறது அதேபோன்று நட்பில் நாம் நண்பர்களுக்கு உதவலாம் நாம் உதவி இருக்கிறோம் என்று எல்லாருக்கும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. எண்ணம் போல் வாழ்க.

Wife - in - law | எண்ணம் போல் வாழ்வு

மனைவியின் தந்தையை Father-in-law என்றும்  மனைவியின் தாயை mother-in-law என்றும்  மனைவியின் சகோதரரை brother-in-law என்றும்  மனைவியின் சகோதரியை Sister-in-law என்றும் ஆனால் மனைவியை wife-in-law என்று யாரும் அழைப்பதில்லை. ஏன் என்றால் wife தான் law. அதாவது சட்டம்.  மனைவியின் சட்ட திட்டங்களுக்கு ஒத்துப் போகும் கணவரின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். எப்போது மனைவியின் சட்டம் மீறப்படுகிறது அப்போது தான் இந்தியன் பீனல் கோடு விவாகரத்து கோரப்படுகிறது. குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்க மனைவியின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டால் எதிர்காலம் நன்றாக இருக்கும்.  எண்ணம் போல் வாழ்வு.

கண்ணால் பார்ப்பதை நம்புபவரா நீங்கள்? | எண்ணம் போல் வாழ்வு

ஒரு நபர் தன் நண்பரிடம் உனக்கு கல்யாணம் ஆகி எத்தனை வருடம் ஆகியது என்று கேட்டார். அதற்கு நண்பர் 20 வருடம் ஆகிவிட்டது என்று கூறினார். ஏன் கேட்கிறாய்? என்று கேட்டார். தீபாவளிக்கு இரண்டு நாள் முன்பாக நீயும் உன் மனைவியும் ஒரு Mallளில் கைகோர்த்து நடப்பதை பார்த்தேன். இன்றும் நீ ரொமான்டிக்காக நடந்து கொள்வது பார்த்தேன் என்று கூறினார். உடனே நண்பர் அது ரொமான்டிக் ஒன்றும் அல்ல. அவள் கையை நான் விட்டு விட்டால் அவள் உடனே ஏதாவது கடைக்கு புகுந்து ஏதாவது ஒரு பொருளை வாங்கி விடுவாள். அது ஒரு தற்காப்பு என்று கூறினார். நாம் கண்களால் பார்ப்பது வைத்து உடனே ஒரு முடிவுக்கு வந்து விடக்கூடாது. தீர விசாரிக்க வேண்டும். எண்ணம் போல் வாழ்வு.

ஒரு சம்பவம் உண்மையா கதையா என்பதை உங்களுக்கு பகுத்தறிய தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு

நண்பர்கள் சிலர் காட்டு வழியே ஒரு யாத்திரை போனார்கள். அவர்கள் கார் முன்பே ஒரு யானை வந்து நின்றது. நண்பர்கள் பயந்து போனார்கள். ஒவ்வொருவரும் அவர்களுக்கு தெரிந்த வழியில் அந்த யானையை விரட்ட முயற்சி செய்தார்கள். அந்த கார் ஓட்டிய நபர் காரை விட்டு இறங்கி யானைக்கு அருகில் சென்று 2000 ரூபாய் தாளை அப்படி இப்படி காண்பித்தார். இதை பார்த்ததும் அந்த யானை அங்கிருந்து நகன்று விட்டது. நண்பர்கள் ஆச்சரியத்துடன் கேட்டனர் இது என்ன வித்தை என்று. உடனே அந்த நபர் சொன்னார் நான் சில்லறை காரன் கிடையாது என்பதை யானை உணர்ந்து விட்டதால் அது அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டது என்று கூறினார்.  ஒரு சம்பவம் நடந்தால் அது உண்மையா? கதையா? என்பதை பகுத்தறியும் திறமை நமக்கு இருக்க வேண்டும். பகுத்தறியும் திறமை இல்லாத போது இந்த கலி காலத்தில் வாழ்வது மிக கடினமாக ஆகிவிடும்.  எண்ணம் போல் வாழ்வு.

மனைவியின் அருமை பெருமை உங்களுக்கு தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு

நம் உறவுகளில் மிகவும் சிறப்பான உறவு நம் மனைவி தான். நாம் அசலில் திருமணம் செய்து கொண்டால் ஒரு ரத்த பந்தம் இல்லாத ஒரு நெருக்கமான பந்தம் மனைவிதான். நம் தந்தை, தாய், சகோதர, சகோதரிகள், சித்தப்பா, பெரியப்பா, மாமா அவர்கள் பிள்ளைகள் எல்லாரும் நம்முடைய ரத்த பந்தங்கள்.  மனைவியின் மூலம் நாம் பெரும் குழந்தைகள் நம் ரத்த பந்தங்கள். இந்த மனைவியின் மூலம் அவருடைய இரத்த பந்தங்கள் நம்முடைய சொந்தங்கள் ஆகிறார்கள். அப்படிப்பட்ட மனைவியின் அருமை பெருமை தெரிந்து கொண்டு குடும்பம் நடத்துபவர்களின் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும். எண்ணம் போல் வாழ்வு.

எண்ணங்களின் சக்தி | எண்ணம் போல் வாழ்வு

நாம் நம் நண்பர்களின் மேல் அல்லது உறவினர்களின் மேல் அவருக்குத் தெரியாமல் குளிர்ந்த தண்ணீரை எடுத்து ஊற்றினால் அவர்கள் குளிரை அனுபவம் செய்வதற்கு பதிலாக கோபத்தினால் சூடு ஆவார்கள். நம் உடலில் உள்ள தோல் குளிரையும், சூடையும் அனுபவம் செய்கிறது. நம் மனம் தான் நம் சந்தோஷத்தையும், துக்கத்தையும் அனுபவம் செய்கிறது. நாம் சுகத்தை அனுபவிக்க வேண்டும் என்றால் நாம் நம் எண்ணத்தில் சுகமான எண்ணங்களை உருவாக்க வேண்டும். எண்ணம் போல் வாழ்வு.

தாலியின் மகத்துவம் | எண்ணம் போல் வாழ்வு

ஒரு நபர் தன் நண்பரிடம் கேட்டார் தாலி என்ற வார்த்தை சொன்னவுடன் உனக்கு என்ன நினைவுக்கு வருகிறது என்று. அதற்கு அவர் தாலியை அறுத்து ஓடுபவன் மூன்று வருடம் ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும். பொறுப்பாக தாலி கட்டியவன் வாழ்நாள் முழுவதும் ஜெயில் வாழ்க்கை வாழ வேண்டும் என்று. யார் திருமணத்தை ஜெயில் என நினைக்கிறார்களோ அவர்கள் வாழ்க்கை நரகம். யார் ஒருவர் திருமணத்தை ஒரு பல்கலைக்கழகம் என நினைக்கிறாரோ அவருடைய வாழ்க்கை சொர்க்கம். அவர் அவருடைய நினைப்பு தான் அவர்கள் வாழ்க்கையை தீர்மானிக்கின்றன. அதனால் தான் சொல்கிறோம் எண்ணம் போல் வாழ்வு.

வெற்றிக்காக புதிய புதிய வழிகளை தேர்ந்தெடுங்கள் | எண்ணம் போல் வாழ்வு

ஒரு நிறுவனம் சோப் விற்றார்கள் அதற்கு கூடவே இலவசமாக பேக்கிங் பவுடர் தந்தார்கள். அந்த பேக்கிங் பவுடர் மக்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்றவுடன் அந்த கம்பெனி நிறைய பேக்கிங் பவுடரை விற்க தொடங்கினார்கள் அதன் கூடவே ஒரு Bubblegum  இலவசமாக கொடுத்தார்கள். அந்த bubblegum மிகுந்த வரவேற்பு பெற்றது. அந்த கம்பெனிதான் Wrigley. அந்த நிறுவனம் தான் உலகத்தில் அதிகமாக bubblegum விற்கிறார்கள். நாம் நம் வாழ்வில் ஏதோ வேலை அல்லது வியாபாரம் செய்கிறோம். அது நாம் நினைத்துப்போல் சிறப்பாக செயல்படவில்லை என்றால் புதிய வழிகளை யோசிப்பது மிக மிக நல்லது. நாம் சும்மா இருக்க கூடாது. புதிய புதிய வழிகளை கண்டுபிடிக்க வேண்டும். எண்ணம் போல் வாழ்வு.

வெற்றி கிட்டும் வரை உழையுங்கள் | எண்ணம் போல் வாழ்வு

அலிபாபாவும் நிறுவனர் திரு ஜாக்பாட் அவர்கள் கூறுகிறார். today is difficult அதாவது இன்று கடினமாக இருக்கும். tomorrow will be much more difficult அதாவது நாளை இதை விட கடினமாக இருக்கும். but day after tomorrow will be beautiful ஆனால் நாளைய மற்ற தினம் நம் வாழ்வு இனிமையாக இருக்கும் but people die before tomorrow evening அதற்கு முன்னால் மக்கள் நாளை மாலை மரித்துப் போவார்கள். அவர் இப்படி சொன்னதற்கான காரணம் மக்கள் தன் லட்சியத்திற்காக உழைத்து, உழைத்து 90-95 சதவீதம் வெற்றியை பார்த்து விடுகிறார்கள்.0அங்கு துவண்டு போய் லட்சியத்தில் இருந்து விலகி விடுகிறார்கள். அப்படி செய்யாமல் வெற்றி காணும் வரை உழைக்க வேண்டும். அப்போது வாழ்க்கை சிறக்கும். எண்ணம் போல் வாழ்வு.

இக்கரைக்கு அக்கறை பச்சை? | எண்ணம் போல் வாழ்வு

ஒரு நபர் பல காலமாக bachelor ராக இருந்து வெறுத்து திருமணம் செய்து கொண்டார். கல்யாணத்திற்கு பிறகு மீண்டும் பேச்சிலராக வாழ நினைத்ததால் வாரத்திற்கு இரு நாள் தன் மனைவியை அவர்கள் அம்மா வீட்டுக்கு அனுப்பி விடுகிறார். வாழ்க்கை என்பது இக்கரைக்கு அக்கரை பச்சை. நம் வாழ்வு சிறப்பாக இருக்க வேண்டும் என்றால் நமக்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கக் கூடாது. நாம் கிடைத்ததற்கெல்லாம் நன்றி தெரிவித்து, விரும்புவன எல்லாம் மிக விரைவில் வரும் என்று நினைத்து வாழ்ந்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும். எண்ணம் போல் வாழ்வு.

Mind your own business | எண்ணம் போல் வாழ்வு

ஒரு நபர் தன் நண்பரிடம் நீ ஒரு பெரிய பிசினஸ் மேக்னெட் எப்படி ஆனாய் என்பதை சொன்னால் எல்லாருக்கும் உபயோகமாக இருக்கும் என்று கூறினார் அதற்கு நண்பர் நான் கல்லூரி படிக்கும்போது ஒரு பெண் நாலு வார்த்தை கூறினார் அதை பின்பற்றியதால் தான் நான் இன்று ஒரு தலை சிறந்த பிஸ்னஸ் மேக்னட்டாக இருக்கிறேன் என்று கூறினார் உடனே நண்பர் அது என்ன நான்கு வார்த்தைகள் என்று கேட்டார் mind your own business என்று அவள் கூறியதாக கூறினார். நாம் நம்முடைய காரியத்தை கவனித்துக் கொண்டு அடுத்தவர் தொழிலில் மூக்கு நுழைக்காமல் இருந்தால் நம் வாழ்வும் சிறப்பாக அமைந்து விடும்.  எண்ணம் போல் வாழ்வு.

உங்களுக்கு முழு மாத சம்பளம் கிடைத்ததா? | எண்ணம் போல் வாழ்வு

ஒருவர் மனைவி தன் கணவரிடம் உங்கள் மாத சம்பள கவரில் பாதி மாதம் சம்பளம் தான் இருக்கிறது. அது ஏன்? என கேட்டார். அதற்கு கணவர் நானும் என் Bossடம் கேட்டேன். அவர் சொன்னார் போன மாதம் நீங்கள் work from home செய்தீர்கள். அப்போது வேலை நேரத்தில் நீங்கள் துணி துவைத்தது, பாத்திரம் கழுவியது போன்றவற்றுக்கு நாங்கள் சம்பளம் தர முடியாது. அதை உங்கள் மனைவியிடம் கேட்டுக் கொள்ளுங்கள் என்று கூறினார். வாழ்வில் இதுபோல சுவாரஸ்யமான திருப்பங்கள் நடக்கத்தான் செய்யும். நாம் அதற்கு வருந்துவது ஒரு தீர்வு ஆகாது. அதை எப்படி சமயோசிதமாக செயல்படுவது என்று சிந்தித்தால் நம் வாழ்க்கை இனிக்கும். எண்ணம் போல் வாழ்வு.

உங்களுக்கு வாழ்க்கையின் அர்த்தம் தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு

ஒருவர் தன் வீட்டை விட்டு வெளியே போகும் போது அவரது மனைவி கேட்டார் நீங்கள் எங்கே போகிறீர்கள் என்று. அதற்கு அவர் நான் ஏன் பிறந்தேன்? ஏன் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்? உன்னை ஏன் திருமணம் செய்தேன்? இந்த வாழ்க்கையின் அர்த்தம் என்ன? என்பதை அறிந்து விட்டு வருகிறேன் என்று கூறினார். உடனே அவர் மனைவி நீங்கள் சாராயம் குடிக்க போகிறீர்கள் என்று நேரடியாக சொல்லி இருக்கலாம் என்று கூறினார். சாராயம் குடிப்பதால் அவர் கேட்ட கேள்விகளுக்கு விடை கிடைக்குமா? என நமக்கு தெரியாது. ஆனால் தியானத்தின் மூலம் நாம் நிச்சயம் இந்த கேள்விக்கு விடை காணலாம். நான் கடந்த 12 வருடமாக இராஜ யோக தியானம் பயிற்சி செய்கிறேன். உங்களுக்கு இராஜ யோக தியானம் பயிற்சி செய்ய வேண்டுமானால் பிரேமானந்தன் நாராயணன் YouTube சேனல் பாருங்கள். https://youtube.com/c/PremanandhanNarayanan எண்ணம் போல் வாழ்வு.

உங்கள் மனைவியை புரிந்து கொள்ள முடிகிறதா? | எண்ணம் போல் வாழ்வு

ஒரு நபர் தன் நண்பரிடம் என் மனைவி என்னை வாழவே விடுவதில்லை என வருத்தப்பட்டு கூறினார். அதற்கு நண்பர் உன் மனைவி உன்னை கொலை செய்ய முயற்சி செய்கிறாரா என்று கேட்டார். அதற்கு அவர் அப்படி ஒன்றும் இல்லை அவள் என் ஆயுசுக்கு வேண்டி செவ்வாய்க்கிழமை தோறும் மாங்கள்ய விரதம் இருக்கிறாள். அப்போது நண்பர் நீ என்னதான் சொல்ல வருகிறாய் என கேட்டார். என் மனைவி என்னை வாழவும் விடுவதில்லை சாகவும் விடுவதில்லை. மொத்தத்தில் அவளை புரிந்து கொள்ளவே முடியவில்லை என்று கூறினார். நாம் உறவுகளில் யாரையும் புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டாம். அவர்களை அவர்களாகவே ஏற்றுக் கொள்வோம். அன்பை பரிமாறுவோம். அப்போது பாருங்கள் உங்கள் வாழ்க்கை எப்படி மிளிர்கிறது என்று. எண்ணம் போல் வாழ்வு

கடினமான சூழ்நிலைகள் நமக்கு ஏன் ஏற்படுகிறது?| எண்ணம் போல் வாழ்வு

நாம் ஒவ்வொருவரும் பிரார்த்திக்கும் போது இறைவனிடம் நாம் சந்திக்கும் கடினமான சூழ்நிலைகளில் இருந்து ஒரு மாற்றத்தை தர கேட்கிறோம். நாம் உண்மையில் ஆராய்ந்து பார்த்தால் எந்த ஒரு கடின சூழ்நிலையும் நம்மை மாற்றுவதற்காக வருகிறது என்பதை புரிந்து கொள்வோம். அதனால் வாழ்வில் நடக்கும் நல்ல, துக்க சம்பவங்கள் எல்லாமே நல்லதுக்கு தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நல்ல நல்ல விஷயங்கள் நமக்கு சந்தோஷத்தை தருகிறது. கடினமான சூழ்நிலைகள் நமக்கு அனுபவங்களை கொடுக்கிறது. எண்ணம் போல் வாழ்வு.

நீங்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? | எண்ணம் போல் வாழ்வு

ஒருவர் எவ்வளவு தான் பட்டம் பெற்றிருந்தாலும் ஏன் டாக்டர் பட்டம் பெற்றிருந்தாலும் அவர் மனைவி உங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று கூறினால் உங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. கணவன் மனைவி என்ற உலகத்தில் மனைவியின் பார்வையில் உங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை என்றால் உங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை என்று அர்த்தம். அதே போல நம் சொந்தம், பந்தம், நண்பர்கள் மற்றும் சமுதாயம் நமக்கு ஒன்றும் தெரியாது என்று நினைக்கலாம். நாம் தான் நம் திறமைகள் மீது அதிகமான நம்பிக்கை உடையவர்களாக இருக்க வேண்டும். நாம் நம் லட்சியத்திற்காக உழைத்து அதை வெற்றி அடையும் போது நம்மை சுற்றி உள்ளவர்கள் நம்மை புரிந்து கொள்வார்கள். அதுவரை நம் திறமைகளை பற்றி நாம் தான் அதீத நம்பிக்கையோடு இருக்க வேண்டும்.  எண்ணம் போல் வாழ்வு.

உங்கள் நண்பர்களுக்கு உங்களை பிடிக்குமா? | எண்ணம் போல் வாழ்வு

ஒரு நபர் தன் நண்பர்களிடம் வர வர நண்பர்களுக்கு என்னை பிடிக்கவில்லை என நினைக்கிறேன் என்று கூறினார். உடனே ஒரு நண்பர் முதலில் உன்னை பிடிக்கிறதா? பிடிக்கவில்லையா? என்பது வேறு விஷயம். இப்போது உன்னை யார் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கேட்டார். இந்த காலத்தில் எல்லோரும் பிஸியாக இருக்கிறார்கள். யாருக்கும் யாரையும் நினைத்து பார்க்க கூட நேரமில்லை. அதனால் நாம் நம்மை நேசிப்பவராக இருப்போம். நாம் செய்யும் வேலையை நேசிப்பவர்களாக இருப்போம். நாம் திறம்பட வேலை செய்து நம் செயல் அடுத்தவர்களுக்கு பிடித்ததாக ஆகட்டும். அதனால் அவர்கள் நம்மை நினைக்கட்டும். எண்ணம் போல் வாழ்வு.

காதல்.... கத்திரிக்காய்... | எண்ணம் போல் வாழ்வு

ஒரு பையன் அவன் நண்பர்களிடம் காதல் கத்திரிக்காய் என்பதெல்லாம் வெறும் டைம் வேஸ்ட். ஒவ்வொருவரும் தன் லட்சியத்திற்காக உழைக்க வேண்டும் என்று கூறினான். உடனே அவன் நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து கேட்டார்கள் உன்னுடைய காதல் தோல்வியில் முடிந்து விட்டதா? என்று. ஆணோ பெண்ணோ படிக்கும் வயதில் படிக்க வேண்டும். வேலைக்கு போகும் வயதில் வேலைக்கு போக வேண்டும். வாழ்வில் ஒரு நிலை வந்து விட்டோம் என நினைக்கும் போது அப்போது யார் மீதாவது விருப்பம் வந்தால் அப்போது விருப்பம் தெரிவித்தால் அந்த காதல் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். நம் வாழ்வை நாம் தான் சீராக வைத்துக் கொள்ள வேண்டும். எண்ணம் போல் வாழ்வு.

நீங்கள் சமைத்தது கேசரியா? உப்புமாவா? | எண்ணம் போல் வாழ்வு

ஒரு நபர் தன் மனைவியிடம் நேற்று நீ சமைத்த ரவை கேசரியில் சர்க்கரை அதிகமாக இருந்தது என்றார். அதற்கு அவர் மனைவி நீங்கள் நேற்று சாப்பிட்டது ரவை உப்புமா என கூறினார். அப்போது அந்த உப்புமாவில் அதிகமாக உப்பு இருந்தது என கூறினார். சிலர் எப்போதும் குறை கூறிக் கொண்டே இருப்பார்கள். நாம் ஒரு நிறைவான வாழ்க்கை வாழ வேண்டும் என்றால் யாரையும் திருப்தி படுத்த வேண்டும் என்று வாழக்கூடாது. நாம் நம் மன நிறைவுக்கு ஏற்றபடி வாழ்க்கையை நடத்த வேண்டும்.  எண்ணம் போல் வாழ்வு.

உறவுகளில் நாம் நேர்மையாக இருப்போம் | எண்ணம் போல் வாழ்வு

ஒரு பையன் தன் நண்பனிடம் உனக்குத்தான் இன்ஸ்டாகிராமில் 5,6  பேரில் id இருக்கிறது அல்லவா. அந்த ஐடியில் ஒன்றிலிருந்து எனக்கு இவர் நல்லவர் வல்லவர் என்று போற்றி போஸ்ட் போட முடியுமா என கேட்டார். இது என்னுடைய கேர்ள் பிரண்டை இம்பிரஸ் பண்ண உதவியாக இருக்கும் என்று கூறினார். அதற்கு நண்பர் உனக்கு உதவாமல் வேறு யாருக்கு உதவப் போகிறேன் என சொன்னார். உன்னுடைய கேர்ள் பிரண்டு பெயர் என்ன என்று தெரிந்து கொள்ளலாமா என்று நம்பர் கேட்டார் அதற்கு அவர் அவள் பெயர் ரியா என குறிப்பிட்டார். உடனே நண்பர் அந்த ரியாவின் ப்ரொபைல் பிச்சர் ஒரு ரோசாப்பூவாக இருந்தால் அதுவும் என்னுடைய ஒரு fake id தான் என்று கூறினார். உறவுகளில் உறவுகளை ஈர்ப்பதற்காக நாம் இந்த மாதிரி கீழ்த்தரமான செயல்கள் செய்யக்கூடாது. உறவுகளில் நேர்மை வேண்டும். எண்ணம் போல் வாழ்வு.

உங்கள் மனம் நகைப் பெட்டியா குப்பை தொட்டியா? | எண்ணம் போல் வாழ்வு

வைரத்தை வைக்கக்கூடிய பெட்டியை நாம் நகைப் பெட்டி என்று கூறுகிறோம். அதே போன்று குப்பை போடும் தொட்டியை குப்பை தொட்டி என்கிறோம்.  நம் மனதில் நல்ல நல்ல எண்ணங்களை செலுத்தினால் நாம் நல்லவர்களாக ஆவோம். கெட்ட கெட்ட சிந்தனைகளை செலுத்துவோம் ஆனால் நாம் கெட்டவர்கள் ஆவோம்.  எண்ணங்களுக்கான உணவு நாம் பார்ப்பது, கேட்பது, மற்றும் படிப்பதாகும். அதனால் நம் மனதை வைரப் பெட்டியை போல அல்லது குப்பை தொட்டியை போல வைப்பது அவரவரின் முயற்சிக்கு ஏற்ப. எண்ணப் போல் வாழ்வு.

நீங்கள் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்கிறீர்களா? | எண்ணம் போல் வாழ்வு

ஒரு நபர் தன் நண்பர்களிடம் நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடுங்கள், குடியுங்கள், தொப்பை வளர்த்துக் கொள்ளுங்கள். அதற்கு ஒன்றும் கவலைப்படாதீர்கள். ஏனென்றால் நாம் இறந்தால் நம் சொந்தக்காரர்கள் நம் உடலை சுடுகாடுக்கு கொண்டு போய் அடக்கம் செய்து விடுவார்கள். நாமே நடந்து போக போவது இல்லை. நாம் வாழும் போது நம் உயரத்திற்கு ஏற்ற உடல் எடை இருந்தால் நல்லது. எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லாமல் இருந்தால் ரொம்ப நல்லது. வாழும் வரை  நோய் இல்லாமல் வாழ்வது எல்லாவற்றையும் விட நல்லது. எண்ணம் போல் வாழ்வு.

நாக்க முக்க... நாக்க முக்க... | எண்ணம் போல் வாழ்வு

ஒரு நடந்த சம்பவம் சில வருடங்களுக்கு முன்பாக தமிழ் படத்தில் வந்த ஒரு பிரபலமான பாடல் நாக்க முக்க நாக்க முக்க இந்த பாடலை முதல் முறை கேட்கும் போது அந்த பாடல் ஆசிரியரை அறைய வேண்டும் என்று எண்ணம் தோன்றியது. சில மாதங்களுக்குப் பிறகு ஒரு நண்பர் வழியாக ஒரு நபர் அறிமுகமானார் அவர் சொன்னார் சார் நீங்க நாக்க முக்க நாக்க முக்க பாடலை கேட்டு இருக்கிறீர்களா? அந்த பாடலை எழுதியது நான்தான். உங்களுக்கு அந்த பாடல் பிடித்திருக்கிறதா? என கேட்டார். நான் உடனே சொன்னேன் நல்ல பாடல் சார் நல்ல ஹிட் ஆன பாடல் என்று கூறினேன். மனதளவில் கூட எண்ணங்களில் கூட ஒருவரை காயப்படுத்தும் எண்ணம் தோன்றக்கூடாது அப்படி தோன்றி விட்டாலும் அது சொல்லிலும் செயலிலும் வரவே கூடாது. ஏனென்றால் எண்ணம் சொல் செயல் மூலமாக நாம் யாருக்காவது துக்கம் கொடுத்தால் நாமும் துக்கம் அனுபவிக்க வேண்டி வரும். எண்ணம் போல் வாழ்வு.

உங்களூக்கு பிறப்பு இறப்பு சுழற்சியை உடைக்க தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு

நான்கு வயது மகன் தன் கர்ப்பமான தாயிடம் உங்கள் வயிற்றில் தங்கச்சி பாப்பா இருக்கிறது அல்லவா என்று கேட்டான் அதற்கு ஆம் என்று அம்மா கூறினார். தங்கச்சி பாப்பா அழகா இருப்பா இல்லமா என்று மகன் கேட்டான் அதற்கு தாயார் ஆம் என்றால். உனக்கு தங்கச்சி பாப்பா ரொம்ப பிடிக்கும் அல்லவா என்று கேட்டான் அதற்கும் தாய் ஆமாம் என்றால். அப்போ ஏன்மா தங்கச்சி பாப்பாவ சாப்பிட்டே என்று கேட்டான். இந்த மகன் இப்படி கேட்டதற்கு காரணம் அவனது அறியாமை. நாமும் இள வயதில் ஏன் பிறக்கிறோம், ஏன் வாழ்கிறோம், ஏன் சாகப் போகிறோம் என தெரியாமல் இருந்தோம். இந்த பிறப்பு இறப்பு சுழற்சியை முறியடிக்க வேண்டும் என்றால் இதற்கான விடையை நாம் இந்த பிறவியில் கண்டுபிடித்தாக வேண்டும். எண்ணம் போல் வாழ்வு.

நீங்கள் அகமும் புறமும் அழகாக இருக்கிறீர்களா? | எண்ணம் போல் வாழ்வு

இந்த காலத்தில் அழகே இல்லாதவர்களை கூட அழகாக காட்டக்கூடிய மொபைல் பில்டர்கள் வந்திருக்கின்றன. ஆனால் மன தளவில் அழுக்கானவர்களை அழகாக காட்டக்கூடிய எந்த ஒரு பில்டரும் கிடையாது. அதனால்தான் சொல்கிறார்கள் அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று. நாம் அகமம் புறமும் அழகானவர்களாக நல்லவர்களாக வாழ்வோம். எண்ணம்போல் வாழ்வு.

பேசும் போது சொற்களை கவனியுங்கள் | எண்ணம் போல் வாழ்வு

நாம் அடுத்தவர்களிடம் பேசும் போது நீங்கள் ஒல்லியாக இருக்கிறீர்கள் நீங்கள் பென்சில் போல் இருக்கிறீர்கள் என்று ஒருபோதும் சொல்லாதீர்கள். அதற்கு பதிலாக நீங்கள் பார்ப்பதற்கு ஸ்லிம்மாக இருக்கிறீர்கள் என கூறுங்கள் வேண்டுமென்றால் நீங்கள் கொஞ்ச சதைப்பிடிப்போடு இருந்தால் பார்ப்பதற்கு லட்சணமாக இருக்கும் என்று சொல்லுங்கள். அதே போல பிள்ளைகளை முட்டாள் என்று திட்டாதீர்கள், வேண்டுமென்றால் நீ ஒரு அறிவு ஜீவி போல் பேசுகிறாய் என கூறுங்கள். எப்போதும் நாம் எண்ணம் சொல் செயல் மூலமாக யாரையும் காயப்படுத்தக் கூடாது ஏனென்றால் எண்ணம் போல் வாழ்வு.

திருமண வாழ்க்கை என்பது 3 ring circusஸா? | எண்ணம் போல் வாழ்வு

திருமண வாழ்க்கை என்பது த்ரீ ரிங் சர்க்கஸ் என விளையாட்டாக கூறப்படுகிறது ஏனென்றால் 1. Engagement ring - நிச்சயதார்த்த மோதிரம் 2. wedding ring - திருமண மோதிரம் 3. suffering - துக்கம் திருமண வாழ்க்கையை துக்கம் என நினைத்தால் வாழ்க்கை துக்கமாகத்தான் இருக்கும் தாம்பத்திய வாழ்க்கையில் கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் புரிந்து வாழ்ந்தாள் திருமண வாழ்க்கை ஆயிரம் காலத்து பையிறு தான். எண்ணம் போல் வாழ்வு.