உங்களுக்கு ஞானம் அடைவதற்கான மந்திரம் தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு
ஒரு நபர் ஒரு சத்ஸங்கிற்கு சென்று அங்கிருக்கும் குருவிடம் எனக்கு ஞானம் வேண்டும் என கேட்டார். அதற்கு குரு நீங்கள் இங்கு ஒரு உறுப்பினராக சேர்ந்து விட்டால் நாங்கள் உங்களுக்கு ஒரு மந்திரம் சொல்லிக் கொடுப்போம் அதை தினம் தோறும் சொல்லி வாருங்கள் அதன் கூடவே இரண்டு வாழைப்பழமும் தருவோம் நாளடைவில் உங்களுக்கு இந்த ஞானம் வந்துவிடும் என்று கூறினார்.
உடனே அந்த நபர் எந்த பழத்தை தருவீர்கள் ரஸ்தாலியா? பூவம் பழமா? என கேட்டார்.
குரு சொன்னார் நீங்கள் எந்த மந்திரம் என கேட்டிருந்தால் சந்தோஷமாக இருக்கும். ஆனால் நீங்கள் என்ன பழம் என கேட்டதால் உங்களுக்கு ஞானம் கிடைக்க சிறிது காலம் அதிகமாக தேவைப்படும் என கூறினார்.
நாம் நம் லட்சியத்தின் மேல் குறியாக இருக்க வேண்டும். லட்சியத்தை விட்டு விலகினால் நமக்கு லட்சியத்தை அடைய பல நாட்கள் தேவைப்படும்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment