தாம்பத்திய வாழ்க்கை எப்போது சிறப்பாக இருக்கும் தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு
ஒரு நபர் வெளிநாட்டில் வேலை செய்கிறார் இரண்டு மூன்று வருடங்கள் கழித்து இந்தியாவுக்கு மூன்று மாத விடுமுறைக்கு வருகிறார். அவர் வீட்டில் அவர் மனைவி முகம் கொடுத்து பேசவில்லை. மனம் வெறுத்த அந்த நபர் ஒரு வக்கீலை பார்த்து தன் கதையை எடுத்து சொல்லி தனக்கு விவாகரத்து வேண்டும் என கூறினார்.
அதற்கு வக்கீல் பொதுவாக எல்லோரும் எதிர்பார்க்கும் மனைவியைப் போல உங்கள் மனைவி கிடைத்திருந்தும் நீங்கள் உங்கள் மனைவி பேசவில்லை என்று கூறி விவாகரத்து கேட்க வந்திருக்கிறீர்கள். நீங்கள் ஒன்றுக்கு நாலு முறை யோசித்து உங்கள் முடிவை கூறுங்கள் என்று வக்கீல் கூறினார்.
இந்த நபர் கூறுவது போல மனைவி பேசவில்லை என்றால் விவாகரத்து செய்வது என்பது தவறான முடிவாகும். அதேபோல வக்கீல் சொன்னது போல பேசாத மனைவி இருந்தால் நல்லது என்பதும் தவறாகும்.
தாம்பத்திய வாழ்க்கையில் கணவரும் மனைவியும் பரஸ்பரம் புரிந்து வாழ்ந்தால் வாழ்க்கை இனிப்பாக இருக்கும்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment