உங்களில் யார் புத்திசாலி? | எண்ணம் போல் வாழ்வு
ஒருவரின் மனைவி அவருடைய கணவரிடம் நீங்கள் முட்டாளா? நான் முட்டாளா? என்று இன்று தெரிந்தாக வேண்டும் என்று கூறினார்.
ஒருவேளை கணவர் நீ தான் முட்டாள் என்று கூறினால் குடும்பத்தில் ஒரு பெரிய கலகம் ஏற்படும்.
ஆனால் கணவர் சாதுரியமாக சொன்னார். நீ பெரிய புத்திசாலி என்பதை உலகமே அறியும். நீ தேர்ந்தெடுத்த உன் கணவரும் புத்திசாலியாக தான் இருப்பார். அப்படி இருக்கும்போது நம் இருவரில் ஒருவர் கூட முட்டாளாக இருக்க முடியாது என்று கூறினார். குடும்ப உறவுகளில் நாம் யுக்தியோடு பேச வேண்டும். அப்போதுதான் குடும்பம் நல்லிணக்கமாக செயல்படும்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment