Posts

Showing posts from December, 2022

ஒரு working New Year Resolution சொல்லட்டுமா? |எண்ணம் போல் வாழ்வு

நீங்கள் ஒரு காகிதத்தில் இந்த வருடத்தின் பெயரையும் 12 மாதத்தின் பெயரையும் எழுதிக் கொள்ளுங்கள். ஒவ்வொரு மாதத்தில் என்ன சாதிக்க வேண்டும் என்பதை அந்த மாதத்திற்கு நேராக எழுதிக் கொள்ளுங்கள். எழுதும் போது நிகழ்காலத்தில் எழுதுங்கள். அதாவது ஏப்ரல் மாதத்தில் ஒரு கார் வாங்க வேண்டும் என்றால் நீங்கள் எழுத வேண்டியது என்னிடம் ஒரு பென்ஸ் கார் இருக்கிறது என்று. இந்த 12 லட்சியத்தையும் ஒருமுறை எடுத்து படியுங்கள். பிறகு மனதுக்குள் ஒரு ஜீபூம்பா மந்திரம் செய்வது போல இந்த பன்னிரண்டில் ஏதாவது ஒன்று இப்போது நடக்க வேண்டும் என்று சிந்தியுங்கள். அப்போது ஒரு லட்சியம் கண் முன்பே தோன்றும். அந்த லட்சியத்தை வேறு ஒரு காகிதத்தில் எழுதிக் கொள்ளுங்கள். அதை அடைய வழிமுறைகளை பட்டியலிடுங்கள். அதற்காக உழையுங்கள். நீங்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள். எண்ணம் போல் வாழ்வு.

உங்களுக்கு செலவுகளை பகுத்தறிய தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு

நமக்கு எந்த செலவு முக்கியமானது எந்த செலவு அனாவசியமானது என பகுத்தறிய தெரிந்தால் மிக மிக நல்லதாக இருக்கும். ஒரு எடுத்துக்காட்டுக்காக ஒரு நாளில் 24 மணி நேரத்தில் நாம் எட்டு மணி நேரம் தூங்குகிறோம். தூக்கத்திற்காக ஒரு நல்ல விலை உயர்ந்த மெத்தையையும் விலை உயர்ந்த தலையணையையும் வாங்கிக் கொள்ளலாம். இதில் ஒன்றும் தவறில்லை .ஏனென்றால் நல்ல தலையணை நல்ல தூக்கத்தையும் நல்ல தூக்கம் நல்ல ஆரோக்கியத்தையும் தரும். நாம் எந்த செலவு முக்கியமானது எந்த செலவு அனாவசியமானது என தெரிந்திருக்க வேண்டும். எண்ணம் போல் வாழ்வு.

நாம் அனைவரையும் மரியாதையுடன் நடத்துவோம்? | எண்ணம் போல் வாழ்வு

நம்மிடம் பணிவாக மரியாதையுடன் பேசும் சிலர் நம் கீழே வேலை செய்யும் அதிகாரியிடம் அகங்காரத்துடன் பேசுகிறார் என்றால் நாம் அவரிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனென்றால் ஒரு வேலை நாமும் நம் கீழே வேலை செய்யும் அதிகாரியை போன்ற வேலை செய்து கொண்டிருந்தால் நமக்கும் இதே மரியாதை தான் அவர் கொடுப்பார். அவர் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும் நாம் நம்மை விட வயதில் மூத்தவராக இருந்தாலும் சிறியவராக இருந்தாலும், நம்மை விட பதவியில் பெரியவராக இருந்தாலும் சிறியவராக இருந்தாலும் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக மரியாதை கொடுக்க வேண்டும். ஏனென்றால் இது தான் ஒரு சிறந்த பண்பு. எண்ணம் போல் வாழ்வு. நம்மிடம் பணிவாக மரியாதையுடன் பேசும் சிலர் நம் கீழே வேலை செய்யும் அதிகாரியிடம் அகங்காரத்துடன் பேசுகிறார் என்றால் நாம் அவரிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏனென்றால் ஒரு வேலை நாமும் நம் கீழே வேலை செய்யும் அதிகாரியை போன்ற வேலை செய்து கொண்டிருந்தால் நமக்கும் இதே மரியாதை தான் அவர் கொடுப்பார். அவர் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும் நாம் நம்மை விட வயதில் மூத்தவராக இருந்தாலும் சிறியவராக இருந்தாலும், நம்மை விட பதவியில் பெரியவர...

சூழ்நிலைக்கேற்ப சமயோசிதமாக சிந்திக்க வேண்டும் | எண்ணம் போல் வாழ்வு

ஒரு நபர் வேலைக்காக ஒரு இன்டர்வியூக்கு செல்கிறார். அங்கே நிறைய பேர் வேலை தேடி வந்திருக்கிறார்கள் இவருடைய நேரம் வரும்போது இன்டர்வியூ நடக்கும் அறைக்குள் கதவை திறந்து உள்ளே போகும் போது அவர் சாஷ்டாங்கமாக விழுந்துவிட்டார். அவர் கையில் இருந்த file, சர்டிபிகேட் அனைத்தும் சிதறி விழுந்தது. அவருக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. ஆனாலும் எழுந்து அவர் சொன்னார் finally I have fallen in the right place. அதாவது கடைசியில் நான் வர வேண்டிய இடத்துக்கு வந்து விட்டேன் என்று. அவர் இன்டர்வியூவில் பாஸ் ஆகி வேலையும் கிடைத்துவிட்டது. எந்த ஒரு சூழ்நிலையும் நமக்கு சாதகமாக அமைய வேண்டும் என்று இல்லை ஆனால் சமயோசிதமாக சிந்தித்து செயல்படுபவர்களுக்கு எப்போதும் வெற்றி தான். எண்ணம் போல் வாழ்வு.

நீங்கள் சிங்கமா? புலியா? | எண்ணம் போல் வாழ்வு

காட்டில் பன்றிகள் கூட்டம் கூட்டமாக வரும் ஆனால் சிங்கம் சிங்கிளாக தான் வரும் என்பது ஒரு சினிமா டயலாக் ஆகும். ஆனால் அறிவியல் என்ன சொல்கிறது என்றால் சிங்கம் வேட்டையாடும் போது கூட்டமாக வரும் மற்றும் புலியானது வேட்டையாடும் போது தனியாக வரும். அப்படி இருந்தும் சிங்கத்தை காட்டின் ராஜா என கூறுகிறார்கள் என்றால் உண்மையில் சிங்கம் காட்டில் ஒர் இடத்தை ஆட்சி செய்கிறது. வேட்டையாடும் போது திட்டம் தீட்டுகிறது. ராஜ்ஜியம் செய்வதால் அது ராஜா. புலியானது தனியாக வருவதல், ராஜ்யம் செய்யாததால் அது ராஜா அல்ல. இதிலிருந்து நமக்கு புரிவது சங்கமே சக்தி. தனி மரம் காடு ஆகாது.  எண்ணம் போல் வாழ்வு.

தற்கொலை ஒரு தீர்வு கிடையாது? | எண்ணம் போல் வாழ்வு

ஒரு உண்மை சம்பவம் ஒரு பெண்மணி கடன் தொல்லை தாங்காமல் தற்கொலைக்கு முயற்சி செய்தார். அவருடைய சொந்தங்கள் அவரைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தார்கள். அங்கே ஒரு வாரம் மருத்துவர்களின் முயற்சியின் மூலம் அவர் காப்பாற்றப்பட்டார். ஆனால் இப்போது நாலு லட்ச ரூபாய் பில் வந்திருக்கிறது. கடன் தொல்லையால் தற்கொலை செய்ய நினைத்தவருக்கு மேலும் நாலு லட்சம் ரூபாய்க்கு கடன் ஏற்பட்டிருக்கிறது. நாம் தெரிந்து கொள்ள வேண்டியது தற்கொலை எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு கிடையாது. எந்த ஒரு பிரச்சினையும் ஒரு கை பார்த்து விடலாம் என்று எண்ணுபவர்கள் இன்று அல்லது நாளை வெற்றி காண்கிறார்கள். எண்ணம் போல் வாழ்வு.

நல்லவகளைப் பார்க்கும் போது பாராட்டலாமே? | எண்ணம் போல் வாழ்வு

ஒரு நபர் ஒரு சத்சங் செல்கிறார். அப்போது ஒரு பெரியவர் பேசுகையில் உங்கள் வீட்டில் உங்கள் மனைவி காலை , மதியம், ராத்திரி என மூன்று வேளைகளும் பல வருடங்களாக உணவு சமைத்து கொண்டிருக்கின்றார். நீங்கள் ஏன் ஒரு பாராட்டு தெரிவிக்கக் கூடாது என்று கூறினார். அந்த நபர் வீட்டுக்கு வந்த போது அவர் மனைவி அவர் சாப்பிட பிரியாணி பரிமாறினார். அதை சாப்பிட்டு அவர் Super, Excellent என கூறினார். அதற்கு அவர் மனைவி நான் உங்களை திருமணம் செய்து 20 வருடங்கள் ஆகிறது. இத்தனை வருடங்களாக நீங்கள் ஒரு முறை கூட என்னை பாராட்டவில்லை. இன்று பிரியாணி பக்கத்து வீட்டில் இருந்து வந்திருக்கிறது. அதை சாப்பிட்டு நீங்கள் சூப்பர் எக்ஸலண்ட் என கூறுகிறார்கள். உங்களை எல்லாம் என்ன செய்யலாம் என்று கூறினார். நாம் இயற்கையாகவே நல்லதை பார்க்கும்போது பாராட்டும் பழக்கம் நமக்கு இருக்க வேண்டும். எண்ணம் போல் வாழ்வு.

ஜோசியர் உங்கள் ஜாதகத்தை பார்த்து என்ன சொன்னார்?| எண்ணம் போல் வாழ்வு

ஒரு தாயும் அவரது எட்டாவது படிக்கும் மகனும் ஒரு ஜோசியரை பார்க்கச் சென்றார்கள். ஜோசியர் அந்த பையனின் ஜாதகத்தை பார்த்து நீ பிற்காலத்தில் கல் உடைப்பாய் என்று கூறிவிட்டார். அந்த மாணவன் வைராக்கியத்தின் பேரில் படித்து டாக்டர் ஆனால். அவன் ஒரு Nephrologist (நெஃப்ராலஜிஸ்ட், கிட்னி ஸ்பெஷலிஸ்ட்) ஆனான். பல வருடங்களுக்குப் பிறகு ஜோசியர் மூத்திரத்தில் கல் என இந்த டாக்டரிடம் சென்றார். டாக்டர் அவருக்கு சிகிச்சை அளித்து அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்டார்ஜ் ஆகும்போது அந்த ஜோசியரிடம் நான் எட்டாவது படிக்கும்போது உங்களை வந்து பார்த்தேன் நீங்கள் நான் பிற்காலத்தில்  கல் உடைப்பேன் என்று எண்ணை பார்த்து சொன்னீர்கள் என்று சொன்னார். அதற்கு ஜோசியர், ஜோசியம் என்பது ஒரு அறிவியல். நான் நீ கல் உடைப்பாய் என்று கூறினேன். அதற்கு அர்த்தம் நீ கட்டிடங்களில் கல் உடைப்பாய், அல்லது வைரங்களின் கல் அபாரம்,  அல்லது மூத்திரத்தில் உள்ள கல் உடைப்பாய் என்று எப்படி வேண்டுமானாலும் பொருள் கொள்ளலாம். நாம் எப்போதும் உயர்ந்த எண்ணங்களையே உருவாக்க வேண்டும். அப்போதுதான் நம் வாழ்க்கை சிறக்கும். எண்ணம் போல் வாழ்வு.

Success Formula என்னென்ன உங்களுக்கு தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு

வெற்றியின் ரகசியம் உங்களுக்கு தெரியுமா? 1. நம் லட்சியத்தை கண்டறிய வேண்டும். 2. நம் லட்சியத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும் போது தடைகள் கண்டிப்பாக வரும். 3. தடைகளுக்கான முக்கியமான காரணங்கள் என்ன என்பதை கண்டறிய வேண்டும். 4. அந்தத் தடைகள் இருந்து மீண்டு வர வழிமுறைகளை ஆலோசித்து திட்டம் வகுத்து வைக்க வேண்டும். 5. அந்தத் திட்டத்தின் படி நடக்க வேண்டும். இந்த இரண்டு முதல் ஐந்து வரை உள்ள விஷயங்களை மீண்டும் மீண்டும் பின்பற்றுவதால் நம் முதல் விஷயமான இலட்சியத்தை போய் சேர முடியும். எண்ணம் போல் வாழ்வு.