சூழ்நிலைக்கேற்ப சமயோசிதமாக சிந்திக்க வேண்டும் | எண்ணம் போல் வாழ்வு
ஒரு நபர் வேலைக்காக ஒரு இன்டர்வியூக்கு செல்கிறார். அங்கே நிறைய பேர் வேலை தேடி வந்திருக்கிறார்கள் இவருடைய நேரம் வரும்போது இன்டர்வியூ நடக்கும் அறைக்குள் கதவை திறந்து உள்ளே போகும் போது அவர் சாஷ்டாங்கமாக விழுந்துவிட்டார். அவர் கையில் இருந்த file, சர்டிபிகேட் அனைத்தும் சிதறி விழுந்தது. அவருக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.
ஆனாலும் எழுந்து அவர் சொன்னார் finally I have fallen in the right place. அதாவது கடைசியில் நான் வர வேண்டிய இடத்துக்கு வந்து விட்டேன் என்று. அவர் இன்டர்வியூவில் பாஸ் ஆகி வேலையும் கிடைத்துவிட்டது.
எந்த ஒரு சூழ்நிலையும் நமக்கு சாதகமாக அமைய வேண்டும் என்று இல்லை ஆனால் சமயோசிதமாக சிந்தித்து செயல்படுபவர்களுக்கு எப்போதும் வெற்றி தான்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment