ஜோசியர் உங்கள் ஜாதகத்தை பார்த்து என்ன சொன்னார்?| எண்ணம் போல் வாழ்வு
ஒரு தாயும் அவரது எட்டாவது படிக்கும் மகனும் ஒரு ஜோசியரை பார்க்கச் சென்றார்கள். ஜோசியர் அந்த பையனின் ஜாதகத்தை பார்த்து நீ பிற்காலத்தில் கல் உடைப்பாய் என்று கூறிவிட்டார். அந்த மாணவன் வைராக்கியத்தின் பேரில் படித்து டாக்டர் ஆனால். அவன் ஒரு Nephrologist (நெஃப்ராலஜிஸ்ட், கிட்னி ஸ்பெஷலிஸ்ட்) ஆனான்.
பல வருடங்களுக்குப் பிறகு ஜோசியர் மூத்திரத்தில் கல் என இந்த டாக்டரிடம் சென்றார். டாக்டர் அவருக்கு சிகிச்சை அளித்து அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்டார்ஜ் ஆகும்போது அந்த ஜோசியரிடம் நான் எட்டாவது படிக்கும்போது உங்களை வந்து பார்த்தேன் நீங்கள் நான் பிற்காலத்தில் கல் உடைப்பேன் என்று எண்ணை பார்த்து சொன்னீர்கள் என்று சொன்னார்.
அதற்கு ஜோசியர், ஜோசியம் என்பது ஒரு அறிவியல். நான் நீ கல் உடைப்பாய் என்று கூறினேன். அதற்கு அர்த்தம் நீ கட்டிடங்களில் கல் உடைப்பாய், அல்லது வைரங்களின் கல் அபாரம், அல்லது மூத்திரத்தில் உள்ள கல் உடைப்பாய் என்று எப்படி வேண்டுமானாலும் பொருள் கொள்ளலாம்.
நாம் எப்போதும் உயர்ந்த எண்ணங்களையே உருவாக்க வேண்டும். அப்போதுதான் நம் வாழ்க்கை சிறக்கும்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment