ஒரு working New Year Resolution சொல்லட்டுமா? |எண்ணம் போல் வாழ்வு
நீங்கள் ஒரு காகிதத்தில் இந்த வருடத்தின் பெயரையும் 12 மாதத்தின் பெயரையும் எழுதிக் கொள்ளுங்கள். ஒவ்வொரு மாதத்தில் என்ன சாதிக்க வேண்டும் என்பதை அந்த மாதத்திற்கு நேராக எழுதிக் கொள்ளுங்கள். எழுதும் போது நிகழ்காலத்தில் எழுதுங்கள். அதாவது ஏப்ரல் மாதத்தில் ஒரு கார் வாங்க வேண்டும் என்றால் நீங்கள் எழுத வேண்டியது என்னிடம் ஒரு பென்ஸ் கார் இருக்கிறது என்று.
இந்த 12 லட்சியத்தையும் ஒருமுறை எடுத்து படியுங்கள். பிறகு மனதுக்குள் ஒரு ஜீபூம்பா மந்திரம் செய்வது போல இந்த பன்னிரண்டில் ஏதாவது ஒன்று இப்போது நடக்க வேண்டும் என்று சிந்தியுங்கள். அப்போது ஒரு லட்சியம் கண் முன்பே தோன்றும். அந்த லட்சியத்தை வேறு ஒரு காகிதத்தில் எழுதிக் கொள்ளுங்கள். அதை அடைய வழிமுறைகளை பட்டியலிடுங்கள். அதற்காக உழையுங்கள். நீங்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment