நல்லவகளைப் பார்க்கும் போது பாராட்டலாமே? | எண்ணம் போல் வாழ்வு
ஒரு நபர் ஒரு சத்சங் செல்கிறார். அப்போது ஒரு பெரியவர் பேசுகையில் உங்கள் வீட்டில் உங்கள் மனைவி காலை , மதியம், ராத்திரி என மூன்று வேளைகளும் பல வருடங்களாக உணவு சமைத்து கொண்டிருக்கின்றார். நீங்கள் ஏன் ஒரு பாராட்டு தெரிவிக்கக் கூடாது என்று கூறினார். அந்த நபர் வீட்டுக்கு வந்த போது அவர் மனைவி அவர் சாப்பிட பிரியாணி பரிமாறினார். அதை சாப்பிட்டு அவர் Super, Excellent என கூறினார்.
அதற்கு அவர் மனைவி நான் உங்களை திருமணம் செய்து 20 வருடங்கள் ஆகிறது. இத்தனை வருடங்களாக நீங்கள் ஒரு முறை கூட என்னை பாராட்டவில்லை. இன்று பிரியாணி பக்கத்து வீட்டில் இருந்து வந்திருக்கிறது. அதை சாப்பிட்டு நீங்கள் சூப்பர் எக்ஸலண்ட் என கூறுகிறார்கள். உங்களை எல்லாம் என்ன செய்யலாம் என்று கூறினார்.
நாம் இயற்கையாகவே நல்லதை பார்க்கும்போது பாராட்டும் பழக்கம் நமக்கு இருக்க வேண்டும்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment