குழந்தைகளிடம் advice செய்யும் போது.... | எண்ணம் போல் வாழ்வு
நம் வீட்டில் குழந்தைகள் சிரித்து விளையாடிக் கொண்டிருக்கும் போது நாம் போய் ஏன் எப்போது பார்த்தாலும் சிரித்துக் கொண்டிருக்கிறாய் என கேட்கிறோம். நீ சிரித்துக்கொண்டே இருந்தால் மிக விரைவில் அழ வேண்டி இருக்கும் என சொல்கிறோம். உண்மையில் நாமே சந்தோஷம் தேடிக் கொண்டிருக்கிறோம்.
அதேபோல குழந்தைகள் துக்கத்தில் இருக்கும் போது நாம் போய் உனக்கு நான் எப்போதும் இருக்கிறேன் கலங்காதே என கூறுகிறோம். உண்மையில் வாழ்க்கை குழந்தைகளுக்கு கசப்பான உண்மையை புரிய வைத்துக் கொண்டிருக்கிறது.
அதாவது குழந்தைகள் சந்தோஷமாக இருக்கும்போது நாமும் அவர்களுடன் சேர்ந்து குதூகலமாக இருக்க முயற்சி செய்ய வேண்டும். அதே போன்று குழந்தைகள் துக்கத்தில் இருக்கும் போது நாம் ஆறுதல் கூறுவதன் கூட குழந்தைகளிடம் வாழ்க்கை போதிக்கும் பாடத்தை குழந்தை புரிந்து கொண்டதா என தெரிந்து கொள்ள வேண்டும்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment