நீங்கள் செய்யும் செயல்களுக்கு சர்டிபிகேட் எதிர்பார்க்கிறீர்களா? | எண்ணம் போல் வாழ்வு
ஒருவருடைய மனைவி தன் கணவரிடம் சில வருடங்களுக்கு முன்னால் எனக்கு உடல்நிலை சரியில்லாத போது நீங்கள் என்னை மருத்துவமனையில் நன்றாக பார்த்துக் கொண்டீர்கள். அதே போல கொரோனா காலத்தில் எனக்கு கொரோனா வந்த போது அப்போதும் என்னை நன்றாக பார்த்துக் கொண்டீர்கள். இப்போது சமீபத்தில் ஒரு விபத்தில் என் கால் முறிவு ஏற்பட்டபோது அப்போதும் என்னை நன்றாக பார்த்துக் கொண்டீர்கள். இதிலிருந்து உங்களுக்கு என்ன புரிகிறது. நமக்கு கல்யாணம் ஆகி பத்து வருடங்கள் ஆகிறது, எனக்கு எப்போதுமே உடலில் ஏதாவது ஒரு உபாதை இருக்கிறது. நீங்கள் என் வாழ்க்கையில் வந்த ஏழரை என்று கூறினார்.
நாம் எப்போதுமே நல்ல செயல்களே செய்வோம். ஆனால் யாரிடமும் அதற்கான நற்சான்றிதழ் கிடைக்க வேண்டும் என்று இருக்க வேண்டாம்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment