நீங்கள் உங்கள் அவகுணத்தை வெற்றி கொள்ள முயற்சிக்கிறீர்களா? | எண்ணம் போல் வாழ்வு
ஒரு நபர் தன் நண்பரிடம் சென்று தான் நல்லவனாக ஆகப் போவதாகவும் அதனால் தன்னிடம் ஏதாவது அவகுணம் இருந்தால் சொல்லுமாறு கேட்டுக் கொண்டார்.
அதற்கு அவர் நண்பர் நீ உடனே உன் வீட்டுக்கு சென்று உன் மனைவியிடம் அவருடைய ஒரே ஒரு குறையை எடுத்து சொல் அவள் உன் மொத்த அவகுணத்தையும் பட்டியலிட்டு சொல்லிவிடுவாள். அது மட்டுமல்ல உன் சொந்தம் பந்தம் அனைவரின் அவகுணங்களையும் கூறி விடுவார்.
நாம் நம் அவகுணங்களை கண்டுபிடிக்க நம் நண்பரையோ, மனைவியோ கேட்க வேண்டியது இல்லை. நாமே எண்ணம், சொல், செயல் மூலமாக யாருக்காவது துக்கம் கொடுத்திருக்கிறோம் என என யோசித்தால், துக்கம் கொடுத்திருந்தால், அதை மாற்றிக் கொண்டால் நாம் ஒரு சிறந்த ஆத்மாவாக ஆகிவிடுவோம்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment