எண் 9 மற்றும் நட்பின் இலக்கணம் | எண்ணம் போல் வாழ்வு
நம் நட்பானது எண் ஒன்பதை போன்று இருக்க வேண்டும். ஒன்பது கூட ஒன்பதை கூட்டும்போது 18 வருகிறது அதை ஒன்று பிளஸ் எட்டு என்று கூட்டும்போது மீண்டும் 9 வருகிறது. மேலும் ஒரு ஒன்பதை கூட்டினால் 18, 27 ஆகிறது 2 பிளஸ் 7 மீண்டும் 9 ஆகிறது. அதே போன்று நட்பில் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நட்பு நிலையாக இருக்க வேண்டும்.
நட்பில் நாம் நண்பர்களுக்கு உதவும் போது உதவி நடக்க வேண்டும் நாம் மறைந்து இருக்க வேண்டும் அதாவது ஒன்பதில் கூட ஐந்து கூட்டினால் 14 வரும் ஒன்று பிளஸ் நான்கு ஐந்து. ஐந்தை வெளிக்காட்டி 9 மறைந்து விட்டது. மேலும் ஒரு உதாரணம் ஒன்பது கூட மூன்றை கூட்டினால் 12 வரும் ஒன்று பிளஸ் இரண்டை கூட்டினால் மூன்று வரும் மூன்று வெளிக்காட்டி 9 மறைந்திருக்கிறது அதேபோன்று நட்பில் நாம் நண்பர்களுக்கு உதவலாம் நாம் உதவி இருக்கிறோம் என்று எல்லாருக்கும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
எண்ணம் போல் வாழ்க.
Comments
Post a Comment