உங்கள் மனைவியை புரிந்து கொள்ள முடிகிறதா? | எண்ணம் போல் வாழ்வு
ஒரு நபர் தன் நண்பரிடம் என் மனைவி என்னை வாழவே விடுவதில்லை என வருத்தப்பட்டு கூறினார். அதற்கு நண்பர் உன் மனைவி உன்னை கொலை செய்ய முயற்சி செய்கிறாரா என்று கேட்டார். அதற்கு அவர் அப்படி ஒன்றும் இல்லை அவள் என் ஆயுசுக்கு வேண்டி செவ்வாய்க்கிழமை தோறும் மாங்கள்ய விரதம் இருக்கிறாள்.
அப்போது நண்பர் நீ என்னதான் சொல்ல வருகிறாய் என கேட்டார். என் மனைவி என்னை வாழவும் விடுவதில்லை சாகவும் விடுவதில்லை. மொத்தத்தில் அவளை புரிந்து கொள்ளவே முடியவில்லை என்று கூறினார்.
நாம் உறவுகளில் யாரையும் புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டாம். அவர்களை அவர்களாகவே ஏற்றுக் கொள்வோம். அன்பை பரிமாறுவோம். அப்போது பாருங்கள் உங்கள் வாழ்க்கை எப்படி மிளிர்கிறது என்று.
எண்ணம் போல் வாழ்வு
Comments
Post a Comment