ஒரு சம்பவம் உண்மையா கதையா என்பதை உங்களுக்கு பகுத்தறிய தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு
நண்பர்கள் சிலர் காட்டு வழியே ஒரு யாத்திரை போனார்கள். அவர்கள் கார் முன்பே ஒரு யானை வந்து நின்றது. நண்பர்கள் பயந்து போனார்கள். ஒவ்வொருவரும் அவர்களுக்கு தெரிந்த வழியில் அந்த யானையை விரட்ட முயற்சி செய்தார்கள். அந்த கார் ஓட்டிய நபர் காரை விட்டு இறங்கி யானைக்கு அருகில் சென்று 2000 ரூபாய் தாளை அப்படி இப்படி காண்பித்தார். இதை பார்த்ததும் அந்த யானை அங்கிருந்து நகன்று விட்டது. நண்பர்கள் ஆச்சரியத்துடன் கேட்டனர் இது என்ன வித்தை என்று. உடனே அந்த நபர் சொன்னார் நான் சில்லறை காரன் கிடையாது என்பதை யானை உணர்ந்து விட்டதால் அது அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டது என்று கூறினார்.
ஒரு சம்பவம் நடந்தால் அது உண்மையா? கதையா? என்பதை பகுத்தறியும் திறமை நமக்கு இருக்க வேண்டும். பகுத்தறியும் திறமை இல்லாத போது இந்த கலி காலத்தில் வாழ்வது மிக கடினமாக ஆகிவிடும்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment