கண்ணால் பார்ப்பதை நம்புபவரா நீங்கள்? | எண்ணம் போல் வாழ்வு
ஒரு நபர் தன் நண்பரிடம் உனக்கு கல்யாணம் ஆகி எத்தனை வருடம் ஆகியது என்று கேட்டார். அதற்கு நண்பர் 20 வருடம் ஆகிவிட்டது என்று கூறினார். ஏன் கேட்கிறாய்? என்று கேட்டார்.
தீபாவளிக்கு இரண்டு நாள் முன்பாக நீயும் உன் மனைவியும் ஒரு Mallளில் கைகோர்த்து நடப்பதை பார்த்தேன். இன்றும் நீ ரொமான்டிக்காக நடந்து கொள்வது பார்த்தேன் என்று கூறினார்.
உடனே நண்பர் அது ரொமான்டிக் ஒன்றும் அல்ல. அவள் கையை நான் விட்டு விட்டால் அவள் உடனே ஏதாவது கடைக்கு புகுந்து ஏதாவது ஒரு பொருளை வாங்கி விடுவாள். அது ஒரு தற்காப்பு என்று கூறினார்.
நாம் கண்களால் பார்ப்பது வைத்து உடனே ஒரு முடிவுக்கு வந்து விடக்கூடாது. தீர விசாரிக்க வேண்டும்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment