Posts

Showing posts from July, 2022

நீங்க thoroughவ தானே படிக்கிறீங்க? | எண்ணம் போல் வாழ்வு

பள்ளிக்கூடத்தில் படிக்கிற ஒரு பொண்ணு அவங்க அப்பா சொன்னதா சொல்றா எந்த ஒரு classலேயும் நம்ம thoroughவ படிக்கணும்  அவங்க அப்பா சொன்னதா சொல்றா. அப்படி thorough படிக்க வேண்டி இருக்கிறதுனால சில கிளாஸ்ல ரெண்டு மூணு வருஷம் கூட படிக்க வேண்டி இருக்கும் அதனால என்ன ஒரு weak student அப்படின்னு முடிவு பண்ணிடாதீங்க. இந்த காலத்து குழந்தைகள் ரொம்ப ஸ்மார்ட்டா பேசுறாங்க உண்மையில குழந்தைகள் நல்லாவும் படிக்கணும் அந்தந்த வருஷத்துலையும் பாஸ் ஆகணும். எண்ணம் போல் வாழ்வு.

நண்பர்கள் நமக்கு கிடைத்த வரப்பிரசாதம் | எண்ணம் போல் வாழ்வு

நம் நண்பர் ஒருத்தர் கருத்து வேறுபாட்டின் காரணமாக நம்மை விட்டு பிரிந்து விட்டார் என எடுத்துக் கொள்வோம்.  நாம் நண்பர்களாக இருந்த போது நாம் நம்முடைய பல ரகசியங்களை அவரிடம் கூறியிருப்போம். இப்போது நட்பு  பிரிந்த பிறகும் அவர் நம் ரகசியத்தை காக்கிறார் என்றால். நாம் ஒரு சிறந்த நண்பரை இழந்து விட்டோம் என்று அர்த்தம். வாழ்க்கையில் நண்பர்கள் நமக்கு கிடைத்த சொத்து அல்லது வரப்பிரசாதம். சிறிய சிறிய கருத்து வேறுபாடுகளின் காரணமாக நாம் நம் நட்பை இழக்க வேண்டாம். எண்ணம் போல் வாழ்வு.

அடுத்தவர்களுக்கு உதவ நம்மிடம் என்ன வேண்டும்? | எண்ணம் போல் வாழ்வு

இந்த உலகத்தில் optimistic, pessimistic என இரு தரப்பு மக்களும் இருக்கிறார்கள். அதாவது நேர்மறை சிந்தனை உள்ளவர்கள் எதிர்மறை சிந்தனை உள்ளவர்கள். நேர்மறை சிந்தனை உள்ளவர்கள் விமானத்தை கண்டுபிடிக்கிறார்கள் எதிர்மறை சிந்தனை உள்ளவர்கள் பயத்தினால் பாராசூட் கண்டுபிடிக்கிறார்கள். இந்த நாடகமே இந்த இரு தரப்பு மக்களால் தான் சுவாரிசமாக இருக்கிறது. எண்ணம் போல் வாழ்வு.

தியானம் கற்பதால் என்ன பலன்? | எண்ணம் போல் வாழ்வு

நாம் மெடிடேஷன் கற்பதால் அதாவது தியானம் கற்பதால் நம் வாழ்க்கையின் சூழ்நிலை கெட்டதிலிருந்து நல்லதாக மாறப்போவது இல்லை. தியானம் கற்பதால் நாம் மாறுவோம் அதாவது நம்முடைய புத்திசாலித்தனம் கூடும் மனதில் நல்ல தேவையான சிந்தனைகள் உருவாகும். அதனால் நம் சூழ்நிலை மாறும். வெற்றிகள் குவியும். நாம் ஒவ்வொருவரும் தியானம் கற்போம் நம் வாழ்வை சிறப்பாக வைத்துக் கொள்வோம். எண்ணம் போல் வாழ்வு

Positive & Negative | எண்ணம் போல் வாழ்வு

நேர்மறையாக சிந்திப்பது அதாவது பாசிட்டிவாக யோசிப்பது நல்ல விஷயம் ஆனால் HIV Positive, Corona Positive இதுவெல்லாம் நல்ல விஷயம் அல்ல. ஒருவருடைய குணம் நெகட்டிவ் அது கெட்டது. ஆனால் HIV Negative, Corona Negative இது கெட்ட விஷயம் அல்ல. பாசிட்டிவ் எல்லாம் நல்ல பாசிடிவ் அல்ல நெகட்டிவ் எல்லாம் கெட்ட நெகட்டிவும் அல்ல. எண்ணம் போல் வாழ்வு.

ஒருவனுக்கு ஒருத்தி என்பது நம் பண்பாடு | எண்ணம் போல் வாழ்வு

ஒருவனிடம் அவன் திருமணம் ஆசையை பற்றி கேட்கும் போது அவன் கூறியதாவது எனக்கு திருமணத்துக்குப் பிறகு 6, 7 குழந்தைகள் இருக்க வேண்டும். அந்த ஆறு ஏழு குழந்தைகளின்  தாயார் வெவ்வேறு ஆளாக இருக்க வேண்டும் என்று கூறினான். இது ஆசை அல்ல. இது வக்கிரம். ஒருவனுக்கு ஒருத்தி என்பது நம் பாரம்பரியம். நாம் நம் பண்பாடுடன் வாழ்வோம். தாம்பத்திய வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக் கொள்வோம். எண்ணம் போல் வாழ்வு.

நம் உழைப்பை நம்புவோம் | எண்ணம் போல் வாழ்வு

இறைவன் நமக்கு table, chair போன்றவற்றை தருவதில்லை அவர் தருவதெல்லாம் ஒரு மரம் தான் அதை வைத்துக் கொண்டு ஒரு தச்சரை பயன்படுத்தி நாம் நமக்கு தேவையான பொருட்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அதேபோல இறைவன் நமக்கு திறமையும் ஆற்றலையும் தருகிறார் அதை வைத்து நாம் நமக்கு தேவையான செல்வம் பொருள் ஈட்டிக் கொள்ள வேண்டும். கூரையை பியித்துக் கொண்டு பணம் வரும் என காத்து இருப்பது முட்டாள்தனம். நாம் உழைப்பை நம்புவோம் சிறப்பாக வாழ்வோம். எண்ணம் போல் வாழ்வு.

வாழ்க்கை என்பது கொண்டாட்டம் | எண்ணம் போல் வாழ்வு

ஒருத்தருடைய மனைவி தன் கணவரிடம் நமக்கு கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆயிடுச்சு நாட்கள் போனதே தெரியலங்க என்று கூறினார். அதற்கு கணவர் எனக்கு நாட்கள் நகர்ந்தது தெரியும் என்று கூறினார். நாம் சந்தோஷமாக இருந்தால் ஒரு வருடம் கூட ஒரு நிமிடம் போன்று தோன்றும். நாம் துக்கத்தில் இருந்தால் ஒரு நிமிடம் ஒரு வருட போன்று தோன்றும். வாழ்க்கை என்பது ஒரு கொண்டாட்டம். அதை ரசித்து வாழ வேண்டும். எண்ணம் போல் வாழ்வு.

Timing ரொம்ப முக்கியம் நண்பர்களே | எண்ணம் போல் வாழ்வு

ஒரு பையன் ஒரு பெண்ணை காதலிச்சான் அவன் நண்பன் கிட்ட காதல் ஜெயிக்க ஐடியா கேட்டான். அதுக்கு அந்த நண்பன் உன் கிட்ட நல்ல வேலை, கை நிறைய பணம், பைக்கு, கார், சொந்தவீடு இதெல்லாம் சம்பாதிச்சு நீ அந்த பெண்ணு கிட்ட போய் propose பண்ணுனா அந்த பொண்ணு சம்மதிப்பா அப்படின்னு சொன்னான்.  இது எல்லாம் ரெடி பண்ணி அந்த பொண்ணு கிட்ட propose பண்ண போகும்போது தான் தெரிஞ்சுது அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆகி ரெண்டு குழந்தை இருக்குன்னு.  வாழ்க்கையில planning ரொம்ப முக்கியம் அது போல execution ரொம்ப முக்கியம் அதைவிட timing ரொம்ப ரொம்ப முக்கியம்.  எண்ணம் போல் வாழ்வு.

வாழ்க்கை என்னும் பள்ளிக்கூடத்தில் நீங்கள் மாணவரா? | எண்ணம் போல் வாழ்வு

நாலு நண்பர்கள் காரில் போகும்போது அவர்கள் கார் பிரேக் டவுன் ஆகிவிட்டது அப்போது அதிலிருந்த  மெக்கானிக்கல் இன்ஜினியர் சொன்னார் காரில் ஸ்டார்டர் பிரேக் டவுன் ஆகிவிட்டது என்று. கெமிக்கல் இன்ஜினியர் சொன்னார் gasoline impurities கலந்து இருக்கிறது என்று. எலக்ட்ரிக்கல் இன்ஜினியர் சொன்னார் பேட்டரி டவுன் என்று. கம்ப்யூட்டர் இன்ஜினியர் சொன்னார் அனைவரும் காரை விட்டு இறங்கவும் பிறகு ஏறவும் அப்போது கார் ஸ்டார்ட் ஆகிவிடும் என்று. ஏன் நாலு பேர் நாலு அபிப்பிராயம் கூறுகிறார்கள், ஏனென்றால் அவர்களுடைய ஞானம் அப்படிப்பட்டது. இந்த வாழ்க்கை என்னும் பள்ளிக்கூடத்தில் நாம் தினமும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் ஏனென்றால் வாழ்க்கை நமக்கு பாடம் கற்பிப்பதை நிறுத்துவதில்லை. எண்ணம் போல் வாழ்வு.

உங்கள் மனநலம் எப்படி இருக்கிறது? | எண்ணம் போல் வாழ்வு

நம்மைப் பார்த்து யாராவது மெண்டல் என்று கூறினால் நாம் உடனே கோபப்படக்கூடாது சற்று தள்ளி நின்று இவர் எப்படி இதை கண்டுபிடித்தார் என்று யோசிக்க வேண்டும். ஏனென்றால்  WHO (World health organisation) சொல்கிறது உலகில் உள்ள அனைவரும் ஏதாவது ஒரு மனநோயினால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று. நாம் சந்தோஷப்பட வேண்டியது நாம் மன நோய்க்கு மருந்து ஏதும் எடுக்கும் நிலையில் இல்லாதது. நம் மனநலம் சிறப்பாக இருப்பதற்காக நாம் தினசரி தியானம் செய்வோம். எண்ணம் போல் வாழ்வு.

உங்களுக்கு உணவு சமைக்க தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு

ஒரு மாமியார் அவர் மருமகளிடம் உனக்கு உங்க வீட்டில் சமைக்க கற்றுத் தரவில்லையா என்று கேட்டார் அதற்கு மருமகள் எங்கள் வீட்டில் Zomato, Swiggy யில் online food order என்ன கத்து கொடுத்து இருக்காங்க அத்தை என்று கூறினார். நாம் ஒரு நாள் மூன்று வேளை உணவு சாப்பிட வேண்டியிருக்கிறது. ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சமைக்க கற்றுக் கொள்வது போது மிக மிக முக்கியம். அது நம் ஆரோக்கியத்தையும் காக்கும். நம் ஹோட்டல் Bill யும் குறைக்கும். எண்ணம் போல் வாழ்வு.

உங்களுக்கு பதற்றம் ஒன்றும் இல்லையே? | எண்ணம் போல் வாழ்வு

வாழ்க்கை தரும் சவால்கள் நமக்கு பதட்டத்தை தருகிறதா அல்லது பதற்றமான சூழ்நிலையில் நாம் லேசாக இருக்கிறோமா என்பதை பொறுத்து நம் வாழ்க்கை சிறப்பாக இருக்கிறதா அல்லது மோசமாக இருக்கிறதா என்பது தீர்மானிக்கப்படுகிறது. எந்த சவால்கள் வந்தாலும் தேவையான தீர்வு நம்மிடம் இருந்தாலோ, அல்லது தீர்வு தெரிந்தவர் நமக்கு தெரிந்திருந்தாலோ நமக்கு எந்த ஒரு பதற்றமும் இருக்காது. எண்ணம் போல் வாழ்வு.

உங்கள் துணைவர் எப்படிப் பட்டவர்? | எண்ணம் போல் வாழ்வு

ஒருத்தருடைய மனைவி தன் கணவரிடம் கல்யாணத்துக்கு முன்னாடியே நீங்க தண்ணி அடிப்பீங்க அப்படின்னு ஏன் எனக்கு கல்யாணத்துக்கு முன்னாடி சொல்லல என்று கேட்டார். அதற்கு கணவர் நீ ஆண்களின் ரத்தத்தை குடிப்பாய் என்பதை கல்யாணத்துக்கு முன்னாடி ஏன் எனக்கு சொல்லவில்லை என்று கேட்டார். தாம்பத்திய வாழ்வில் கணவனும் மனைவியும் இப்படி சண்டை போட்டுக் கொண்டிருந்தால் குடும்பம் எப்படி நடக்கும். தாம்பத்திய வாழ்க்கையில் கணவனும் மனைவியும் விட்டுக் கொடுத்து வாழ்வதே சிறப்பான வாழ்வியல் ஆகும். எண்ணம் போல் வாழ்வு.

உங்க மனசுல இருக்கிறது யாரு? | எண்ணம் போல் வாழ்வு

ஒரு பையன் காதல்னு சொல்லிட்டு ஒரு பொண்ணு பின்னாடி சுத்திட்டு இருந்தான். அந்தப் பொண்ணு கோவத்துல என் பின்னாடி சுத்துனா கத்தி எடுத்து உன் நெஞ்சில் குத்திடுவேன்னு சொன்னாள். அதுக்கு அந்த பையன் நீ குத்துனா நீ தான் சாவ அப்படின்னு சொன்னான்.  அதுக்கு அந்த பொண்ணு நான் உன்னை கத்தியால குத்தன நான் எப்படி சாவேன் அப்படின்னு கேட்டா. அதுக்கு அந்த பையன் என் மனசுல நீ தானே இருக்க. அப்படின்னு பதில் சொன்னான். இந்த காலத்து பசங்க ரொம்ப ஸ்மார்ட்டா இருக்காங்க, ஸ்மார்ட்டா பேசுறாங்க. இந்த திறமை எல்லாம் படிப்பிலும் வேலையையும் காமிச்சாங்கன்னா ரொம்ப நல்லா இருக்கும். எண்ணம் போல் வாழ்வு.

நீங்கள் சிறந்த Padipistஅ? | எண்ணம் போல் வாழ்வு

ஒரு பரீட்சையில் 10 கேள்விகள் கேட்டு அதில் 5-க்கு பதில் அளிக்குமாறு கூறியிருந்தார்கள். அதற்கு ஒரு மாணவர் 10 கேள்விகளுக்கும் பதில் கூறி கீழே ஒரு குறிப்பு இட்டிருத்திருந்தார். உங்களுக்கு வேண்டிய ஐந்து பதிலை எடுத்துக் கொள்ளுங்கள் என்று.  இந்த மாணவனை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். அவன் ஒரு புத்திசாலி, அறிவாளி, படிப்பிஸ்ட், அசடு, ஆபத்தம்.  ஒரு நிகழ்வுக்கு பல அபிப்ராயங்கள் வருவதற்கான காரணம் என்ன?  ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி சிந்திக்கிறார்கள் இதனால் தான் நாம் கூறுகிறோம். எண்ணம் போல் வாழ்வு.

அடுத்தவர்களுக்கு உதவ நம்மிடம் என்ன வேண்டும்? | எண்ணம் போல் வாழ்வு

நாம் அடுத்தவர்களுக்கு உதவியாக இருக்க நாம் பெரும் பணக்காரராகவோ, பெரும் படிப்பு படித்திருக்க வேண்டும் என்பதோ, அறிவாளியாக, புத்திசாலியாக, பதிவு, செல்வாக்குடன் இருக்க வேண்டும் என்பது அல்ல. நமக்கு சக மனிதன் மீது ஒரு அக்கறை இருந்தால் போதுமானது. நாம் அடுத்தவர்களுக்கு வேண்டி பிரார்த்திக்கலாம், நமக்குத் தெரிந்த ஞானத்தை இலவசமாக கொடுக்கலாம், நம்மிடம் 100 ரூபாய் இருந்தால் அதில் 20 ரூபாய் தானம் தர்மம் செய்யலாம். எண்ணம் போல் வாழ்வு.

வியாபாரத்தில் தோல்வியா? | எண்ணம் போல் வாழ்வு

வியாபாரத்தில் நஷ்டம் வருவது சகஜம் சில நேரங்களில் அது ஆயிரங்களிலும் சில நேரங்களில் அது லட்சங்களிலும் இருக்கிறது. நாம் அந்த சம்பவத்திலிருந்து ஒரு பாடம் கற்று வியாபாரம் செய்தால் நாம் கோடிகளில் சம்பாதிக்க முடியும். வியாபாரத்தில் நஷ்டம் அடைவது தோல்வி அல்ல, அதில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளாததே தோல்வியாகும்.  நாம் பாடம் கற்போம் நம் வாழ்வை சிறப்பாக வைத்துக் கொள்வோம்.  எண்ணம் போல் வாழ்வு 

சில தோல்விகளையும் கொண்டாடலாம்? | எண்ணம் போல் வாழ்வு

சில முயற்சிகள் கடைசி கட்டத்தில் வந்து தோற்கலாம். அப்படிப்பட்ட தோல்விகளை நாம் கொண்டாடலாம். ஏனென்றால் அந்த தோல்விகள் வெற்றி மிக அருகாமையில் இருப்பதை நமக்கு உணர்த்துகிறது. அந்த தோல்வி நமக்கு ஊக்கம் உற்சாகம் தருகிறது வெற்றியடைவதற்காக. நாம் ஒன்று இரண்டு முயற்சி எடுத்தால் வெற்றி காணலாம். அதனால் நாம் வெற்றி பெற்றால் தான் கொண்டாட வேண்டும் என்பது அல்ல, சில தோல்விகளையும் கொண்டாடலாம். எண்ணம்‌ போல் வாழ்வு.

ECRல Resort book பண்ணீட்டிங்களா? | எண்ணம் போல் வாழ்வு

மனசு சந்தோஷமாக இருக்க ECRல Resort book பண்ணனும் அவசியம் இல்லை. நாம் ACR பயன்படுத்தினால் போதுமானது.  ACR ல Aன்னா Accept. வாழ்க்கையில் நடக்கிற நல்ல கெட்ட சம்பவங்களை அப்படியே Accept பண்ணவோம். Cன்னா Change. Accept பண்ண முடியாததை Change பண்ணுவோம். Rன்னா Remove. Change பண்ண முடியாததை Remove பண்ணுவோம். அப்போ வாழ்க்கை சிறப்பா இருக்கும். எண்ணம் போல் வாழ்வு.

நாமும் எப்போதும் சந்தோஷமாக இருக்க முடியும் | எண்ணம் போல் வாழ்வு

எப்போதும் சந்தோஷமாக இருப்பவர்கள் இந்த நான்கு காரியங்களை செய்கிறார்கள். 1. அடுத்தவர்கள் கூறும் தேவையற்ற விஷயங்களை இவர்கள் கவனிப்பதே இல்லை. 2. அவர்கள் எப்போதும் குறைவாகவே பேசுவார்கள். 3. அவர்கள் நேரம் கிடைக்கும்போது எல்லாம் புதிய புதிய விஷயங்களை கற்றுக் கொள்வார்கள். 4. அவர்கள் எப்போதும் அடுத்தவர்களுக்கு உதவுவதற்கு எண்ணிக் கொண்டிருப்பார்கள். இந்த நான்கு விஷயங்களை நாமும் செய்ய முடியுமே. அப்பொழுது நாமும் சந்தோஷமாக இருக்கலாமே. எண்ணம் போல் வாழ்வு.

சுகம் துக்கம் யாரிடம் பகிரலாம்? | எண்ணம் போல் வாழ்வு

நம் துக்கத்தை அடுத்தவரிடம் பகிரும்போது நம் மனதில் உள்ள பாரம் குறைகிறது. நம் சந்தோஷத்தை அடுத்தவரிடம் பகிரும்போது நம் மனதில் சந்தோஷம் அதிகரிக்கிறது. இந்த கலிகாலத்தில் நம் துக்கத்தை அடுத்தவரிடம் பகிரும் போது அதைக் கண்டு சந்தோஷப்படுபவர்களும் இருக்கிறார்கள். அதனால் நம் துக்கத்தை இறைவனிடமும், நம் சந்தோஷத்தை சொந்தம் பந்தம் நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்வோம். எண்ணம் போல் வாழ்வு.

உங்கள் பக்கத்து வீட்டில் புது குடுத்தனம் வந்திருக்காங்களா? | எண்ணம் போல் வாழ்வு

ஒரு அம்மா சொல்றாங்க அவங்க பக்கத்து வீட்ல ஒரு புது குடுத்தனம் வந்திருக்காங்கன்னு. அவங்க வீட்ல இருக்க எல்லாரும் பார்க்க லட்சணமா இருக்காங்க ஆனா பேசி பார்த்தால் தான் தெரியும் அவங்க குணம் என்னன்னு. இப்படி அவங்க சொல்றதுக்கு காரணம் ஒருத்தருடைய சொல் அவர்கள் எண்ணங்களிலிருந்து உருவாகிறது. ஒரு நல்ல எண்ணம் நல்ல சொல்லாகுது. நல்ல சொல் நல்ல செயல் ஆகுது. அதனாலதான் சொல்றோம். எண்ணம் போல்  வாழ்வு.

பயம் பற்றிய பயம் என்ன செய்யும் தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு

நம் வாழ்வில் பெரிய பிரச்சனை எது தெரியுமா நம் மனதில் தோன்றும் எண்ணங்கள் விருந்தாளிகள் போல வருகின்றன அதை நாம் முதலாளி போல் மனதில் நிறுத்துவது தான். பயத்தை பற்றிய பயம் தான் மிக பெரிய பயமாக இருக்கிறது. உண்மையில் அந்த சம்பவம் நடந்தாலும் நாம் இப்படி பயந்திருக்க மாட்டோம். அதனால் நாம் எப்போதும் நேர்மறையான எண்ணங்களை உருவாக்குவோம். எண்ணம் போல் வாழ்வு.

சுகம் துக்கம் எதை பொறுத்து இருக்கிறது? | எண்ணம் போல் வாழ்வு

யார் ஒருத்தர் தன் வாழ்வில் நடக்கும் அனைத்து சம்பவங்களுக்கும் நன்றி உணர்வுடன் இருக்கிறாரோ அவர் எப்போதும் சந்தோஷமாக இருப்பார்.  யார் ஒருவர் நம் வாழ்வில் நடக்கும் அனைத்து சம்பவங்களுக்கும் குறை கூறிக் கொண்டிருக்கிறார் அவர் எப்போதும் துக்கத்தில் இருப்பார்.  அதனால் நாம் எப்போதும் நன்றி உணர்வுடன் இருப்போம். எண்ணம் போல் வாழ்வு.

நீங்கள் அதிர்ஷ்டசாலியா? புத்திசாலியா? | எண்ணம் போல் வாழ்வு

உங்களுக்கு தங்குவதற்கு ஒரு வீடு, உடுத்த உடை, உண்ண மூன்று வேளை உணவு இருக்குமானால் நீங்கள் அதிர்ஷ்டசாலி. உங்கள் வாழ்க்கை சவால்கள் நிறைந்ததாக இருந்து அதை வெற்றிகொண்டு சிறப்பாக வாழ்வீர்கள் ஆனால் நீங்கள் புத்திசாலி. வாழ்க்கை என்றால் சவால்கள் வரத்தான் செய்யும் அதை எதிர் கொண்டு தான் ஆக வேண்டும் அது ஜெயித்து நாம் சிறப்பாக வாழ வேண்டும். நீங்கள் அதிர்ஷ்டசாலியா? புத்திசாலியா? அல்லது இரண்டுமா? எண்ணம் போல் வாழ்வு.

இளைஞர்களே காதல் கத்திரிக்காய் என வாழ்க்கையை தொலைக்க வேண்டாம்? | எண்ணம் போல் வாழ்வு

ஒரு நபர் என் பக்கத்துக்கு வீட்டு பையனிடம்  உன் வயது பிள்ளைகள் மிகவும் துருதுருவென இருப்பார்கள் ஆனால் நீ மிகவும் மந்தமாக இருப்பது ஏன் என்று கேட்டார். அதற்கு அந்தப் பையன் அங்கிள் என்னுடைய மூளை கம்ப்யூட்டர் பொல ஆனால் இப்போது ஒரு பெண்ணை விரும்புவதால் எனது மூளை மழுங்கி விட்டது அதனால் உங்களுக்கு மந்தமாக தெரிகிறது என்றான். இளைஞர்கள் படிக்கின்ற வயதில் படிக்க வேண்டும், வேலை செய்கின்ற வயதில் வேலை செய்ய வேண்டும், கல்யாண வயதில் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும். அப்போது தான் வாழ்க்கையின் சிறப்பாக இருக்கும். காதல் கத்திரிக்காய் என இளமையில் திரிந்தால் வாழ்க்கை நாசமாக போய்விடும். எண்ணம் போல் வாழ்வு.