நீங்க அடுத்தவர்களுக்கு Advice கொடுக்க போகிறீர்களா? | எண்ணம் போல் வாழ்வு
உங்கள் வீட்டுக் குழந்தை சரியாக படிக்கவில்லை அதனால் அந்த குழந்தைக்கு அறிவுரை கூற முடிவு செய்கிறீர்கள். அதற்கு முன்பாக உங்களுக்கு ஒரு எண்ணம் தோன்றுகிறது. அதாவது இந்த குழந்தை படிப்பதற்கு லாயக்கில்லை, இது மாடு மேய்க்கத்தான் போகிறது. அதற்கு பிறகு நீங்கள் அரை மணி நேரம் குழந்தை படிக்க அறிவுரை கூறினாலும் ஒரு உபயோகமும் இல்லை ஏனென்றால் நீங்கள் ஒரு எதிர்மறை சுவரை எழுப்பி அங்கிருந்து கருத்து கூறினீர்கள்.
நாம் நேர்மறை எண்ணங்களை உருவாக்கி நேர்மறையாக பேசினோம் என்றால் மிக நல்ல மாற்றம் உண்டாகும்.
ஏனென்றால் எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment