உங்கள் வாழ்க்கை இனிக்கிறதா? கசக்கிறதா? | எண்ணம் போல் வாழ்வு
காட்சி 1 :- நீங்கள் உங்கள் அலுவலகத்திற்கு கிளம்புகிறீர்கள். உங்கள் வண்டி சாவியை வைத்த இடத்தில் தேடுகிறீர்கள். அங்கு அந்த சாவி இல்லை. உடனே நீங்கள் சத்தம் போடுகிறீர்கள். உங்கள் மனைவி மக்கள் பயந்து போகிறார்கள். அவர்களே எடுத்தாலும் இல்லை என்று பயத்தால் பொய் சொல்கிறார்கள்.
காட்சி 2 :- நீங்கள் உங்கள் அலுவலகத்திற்கு கிளம்புகிறீர்கள் உங்கள் வண்டி சாவியை வைத்து இடத்தில் தேடுகிறீர்கள் அங்கே அந்த சாவி இல்லை நீங்கள் உங்கள் வீட்டில் உள்ளவர்களை சாவியை பார்த்தீர்களா என அன்பாக கேட்கிறீர்கள். யாராவது எடுத்திருந்தால் அவர்களாகவே முன்வந்து கொடுத்து விடுகிறார்கள் அல்லது எல்லோரும் சேர்ந்து அந்த சாவியை தேடுகிறார்கள்.
நாம் கோபப்பட்டால் உறவுகள் கசக்கும். நாம் அன்போடு பேசினால் உறவுகள் இனிக்கும்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment