Posts

Showing posts from May, 2022

சோதனை மேல் சோதனை போதுமடா சாமி | எண்ணம் போல் வாழ்வு

சோதனை மேல் சோதனை போதுமடா சாமி வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி என்று சோக கீதம் பாடிக்கிட்டு  இருக்கீங்களா? ஒரு விமானம் வானத்தில் பறக்கணும்ன்னா அது எதிர்காத்த மீறி பறக்க வேண்டும். அதுபோல வாழ்க்கையில சோதனைகளை கடந்தா தான் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். எண்ணம் போல் வாழ்வு.

மணமகள் மணமகனின் இடதா வலதா உட்காரவேண்டும்? | எண்ணம் போல் வாழ்வு

ஒரு நபர் ஒரு முதியவரிடம் திருமண நிகழ்வில் மணமகள் மணமகனின் இடதா வலதா உட்கார வேண்டும் என கேட்டார். அதற்கு அந்த முதியவர் திருமண வாழ்க்கையில் மணமகள் மணமகனின் தலையில் உட்காரக்கூடாது அதற்கு பதிலாக அவனது மனதில் அமர வேண்டும். அதற்கு இருவரும் பரஸ்பரம் புரிந்து கொண்டு விட்டுக் கொடுத்து வாழ வேண்டும் இதுவே பிரதானம் என்று கூறினார். எண்ணம் போல் வாழ்வு.

உங்களை உலகமே எதிர்க்கிறதா? | எண்ணம் போல் வாழ்வு

உங்களை முழு உலகமுமே எதிர்க்கிறது அப்போது திரும்பி நின்று உங்கள் கைப்பேசியை எடுத்து ஒரு செல்பி எடுங்கள். அப்போது முழு உலகம் உங்கள் பின்னால் இருக்கும். நாம் என்ன சொல்கிறோம் என்றால் நம்முடைய Attitude அவ்வளவு உயர்ந்ததாக இருக்கவேண்டும். அதாவது நாம் கடின உழைப்பு செய்ய வேண்டும். இன்றைய எதிர்ப்பாளர்கள்  நாளைய நம் followers ஆக மாறும் வரை. எண்ணம் போல் வாழ்வு.

உங்களுக்கு வாழ்க்கையை சுவாரஸ்யமாக மாற்ற தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு

நாம் நம் இளமைப் பருவத்தில் டிவியில் கார்ட்டூன் பார்க்க விரும்பி இருப்போம் ஆனால் செய்திகளை பார்த்திருப்போம் அதற்கு காரணம் tv யின் remote அப்பாவிடம் இருக்கும். இப்போது நாம் tv யில் செய்திகளை பார்க்க விரும்பினாலும் கார்ட்டூன் பார்ப்போம் ஏனென்றால் டிவி யின் ரிமோட் குழந்தையிடம் இருக்கும். வாழ்க்கை என்றால் இப்படித்தான் இருக்கும். நாம் எல்லா சூழ்நிலைகளையும் நம்மை சந்தோஷமாக வைக்க நாம் தான் முயற்சி செய்ய வேண்டும். எண்ணம் போல் வாழ்வு.

வாழ்க்கையின் Speed Breaker எது? | எண்ணம் போல் வாழ்வு

நம் வாழ்க்கையில் வரும் சிறுசிறு துன்பங்களை கண்டு நாம் மனம் துவண்டு போக கூடாது. ரோட்டில் ஸ்பீட் பிரேக்கர் இருப்பது பெரிய பெரிய விபத்துகளை தடுப்பதற்கே. அதே போன்று நம் வாழ்வில் வரும் பெரிய பிரச்சினைகளை தவிர்க்க இந்த சின்ன சின்ன தடங்கல்கள் வந்து போகின்றன என புரிந்து கொண்டால் நம் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். எண்ணம் போல் வாழ்வு.

நீங்கள் இரையை தேடுகிறீர்களா? அல்லது இறையை தேடுகிறீர்களா? | எண்ணம் போல் வாழ்வு

ஒரு சராசரி மனிதன் ஒரு நாள் தேவைக்காக மூன்று வேளை இரையை தேடுகிறான் அதாவது உணவை தேடுகிறான். விவரம் தெரிந்த மனிதன் இறையை அதாவது இறைவனை தேடுகிறான். யார் உணவை தேடுகிறார்களோ  அவர்கள் பிறப்பு இறப்பு, பிறப்பு இறப்பு சுழற்சியில் வரவேண்டும். யார் இறைவனை தேடுகிறார்களோ அவர்கள் இறப்பு பிறப்பு சுழற்சியில் இருந்து தப்பிக்கலாம். எண்ணம் போல் வாழ்வு.

யார் Great? | எண்ணம் போல் வாழ்வு

யார் தனது தவறுகளை உணர்ந்து இருக்கிறார்களோ அவர்கள் great. யார் தனது தவறுகளை உணர்ந்து அதை சரி செய்கிறார்களோ அவர்கள் அதைவிட சிறந்த நிலையில் இருக்கிறார்கள். யார் அடுத்தவர்களின் தவறுகளை உணர்ந்து, புரிந்து, தெரிந்து இருந்தும் அவர்களை அப்படியே ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்கள் ultimate. எண்ணம் போல் வாழ்வு.

வாய்ப்பு என்பது வடை மாதிரி| எண்ணம் போல் வாழ்வு

வாழ்க்கையில வாய்ப்பு என்பது வடை மாதிரி. பாட்டி வடை சுட்ட கதையில காக்கா வடையை சுட்டு போகிற மாதிரி நாம் நம் வாழ்க்கையில் வரும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். Pizza வை online யில் order செய்து அது வரும் வரும் காத்துக்கிட்டு இருக்கிற மாதிரி வாய்ப்புக்காக காத்திருந்தா ஏமாற்றம் தான் மிஞ்சும். உழைக்கிறவங்களுக்கு தான் வாய்ப்புகள் நிறைய வரும். வரும் வரும் காத்திருப்பவர்களுக்கு ஏமாற்றம்தான் வரும்.  எண்ணம் போல் வாழ்வு.

நீங்க வேலைக்காரி மாதிரி feel பண்றீங்களா? | எண்ணம் போல் வாழ்வு

ஒரு மனைவி தன் கணவரிடம் நான் இந்த வீட்டில் வேலைக்காரி மாதிரி இருக்கேன் என்று சொல்கிறார். அதற்கு கணவர் நான் தான் எல்லா வீட்டு வேலைகளை எல்லாம் செய்கிறேன். துணி துவைக்கிறேன்,  பாத்திரம் கழுவுகிறேன். அப்படியிருக்கும் போது நீ எப்படி வேலைக்காரி என்று சொல்கிறாய். அதற்கு மனைவி ஆமாம் நீங்க தான் எல்லா வீட்டு வேலை செய்றீங்க அதனால நீங்க தான் வேலைக்காரன். வேலைக்காரன் மனைவி வேலைக்காரி என்ற அர்த்தத்தில் நான் வேலைக்காரி என்று சொன்னேன் என்று கூறினார். நம் வாழ்வில் அனைத்தையும் எதிர்மறையாக சிந்தித்தால் நம் வாழ்க்கை வீணாகி போகும். அதனால் நாம் எதையும் நேர்மறையாக சிந்திப்போம். எண்ணம் போல் வாழ்வு.

கரை நல்லதா? | எண்ணம் போல் வாழ்வு

Surf Excel Advertisement ல கரை நல்லது சொல்றாங்க அப்படின்னா  கொஞ்சம் யோசிச்சு பார்த்தா கரை நல்லதுன்னா surf Excel எதற்கு தயாரிக்கிறார்கள். ஒரு விஷயத்தை தையோ பார்த்தாலோ கேட்டாலோ  உடனே நம்பிவிடக் கூடாது. அதை ஆராய்ந்த பிறகு தான் ஒரு முடிவுக்கு வரவேண்டும். எண்ணம் போல் வாழ்வு.

ஒவ்வொரு சம்பவத்தைப் பற்றிய உங்கள் பார்வை என்ன? | எண்ணம் போல் வாழ்வு

ஒவ்வொரு சம்பவத்தைப் பற்றியும் மூன்று பார்வை இருக்கின்றது. 1. நம் பார்வை  2 மற்றவர்களின் பார்வை  3 உண்மை நாம் உண்மை அறியாமல் நம் அபிப்ராயத்தை சொல்லக் கூடாது. ஏனென்றால் அப்படி கூறுவது வதந்தி ஆகும். வதந்தி ஒரு பாவச்செயல் மற்றும் குற்றம் ஆகும்.  எண்ணம் போல் வாழ்வு.

பழையதை நினைத்து உங்கள் எதிர்காலத்தை வீணாக்க வேண்டாம்? | எண்ணம் போல் வாழ்வு

ஒரு பெண் ஐந்து ஆறு வருடங்களுக்கு பிறகு தனது பாய் பிரண்டுக்கு ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்புகிறார். நீ எப்படி இருக்கிறாய் என்று. அங்கிருந்து ஒரு தகவல் வருகிறது என் தந்தைக்கு நான்கு வருடங்களுக்கு முன்பாக திருமணம் முடிந்துவிட்டது அவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர் அதனால் தாங்கள் திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் ஆன்ட்டி என்று. நாம் என்றும் நேற்று நடந்த சோக நினைவையே நினைத்து வாழ்ந்தால் நம் வாழ்க்கை கவலைக்கிடமாக இருக்கும். நல்லதையே நினைத்து நல்லதே நடக்கும் என வாழ்க்கையை வாழ்வோம்.  எண்ணம் போல் வாழ்வு.

உங்களுக்கு பேசும் போது திக்குமா? | எண்ணம் போல் வாழ்வு

சிலபேருக்கு பேசும்போது திக்குகிறது அதை முழுமையாக சரி செய்ய முடியும். நாம் ஆழமாக யோசித்துப் பார்த்தோமானால் அவர்கள் சத்தம்போட்டு தனக்குத் தானே ஒரு புத்தகத்தை படித்தால் அவர்களுக்கு திக்குவது கிடையாது.  அதே போன்று அவர்கள் அவர்களுக்கு உள்ளே மனதில் பேசும் போது திக்குவது கிடையாது. அதனால் முறையான பயிற்சி எடுத்து கொண்டு இந்த சிந்தனையையும் மனதில் வைத்தால் அவர்களுக்கு இந்த திக்குவது நின்று விடும்.  எண்ணம் போல் வாழ்வு.

வாழ்க்கையை பார்க்க வேண்டிய பார்வை? | எண்ணம் போல் வாழ்வு

வாழ்க்கையில் எந்த ஒரு புதிய வேலையைத் தொடங்கும் போதும் இந்த வேலை சிறப்பாக முடியும் என நாம் திடமாக எண்ண வேண்டும். ஒரு வேலை முடிந்தவுடன் அது நன்றாக அல்லது கெட்டதாக முடிந்தாலும் அதன் உள்ளில் ஏதோ ஒரு நன்மை இருப்பதாக புரிந்து கொள்ள வேண்டும். அது ஒரு நாள் நமக்கு வெளிச்சம் ஆகும் என்று புரிந்து கொண்டால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.  எண்ணம் போல் வாழ்வு.

உறவுகள் நீடிக்க என்ன செய்ய வேண்டும்? | எண்ணம் போல் வாழ்வு

ஒரு காதலன் காதலியிடம் உனக்கும் எனக்கும் செட்டாகாது நீ என்ன மாதிரி இல்ல அதனால நம்ம breakup பண்ணிக்கலாம். அதற்கு காதலி நான் ஒன்றும் உன்னை மாதிரி இருக்க  உன் தங்கச்சி கிடையாது உன்னுடைய காதலி. சில குடும்பங்களில் சிலர் இப்படி சொல்றாங்க அதாவது எங்க அப்பா அம்மாவ நாங்க ஃப்ரண்ட்ஸ் மாதிரி பார்க்கிறோம்ன்னு. அந்தந்த உறவுகளுக்கு கொடுக்க வேண்டிய சரியான மரியாதை கொடுக்கும் போதுதான் உறவுகள் மேம்படும், வாழ்க்கை சிறக்கும். எண்ணம் போல் வாழ்வு.

Expect & Trust | எண்ணம் போல் வாழ்வு

ஒருத்தர்கிட்ட எதிர்பார்க்கிறதோ ஒருத்தரை நம்புவதோ தவறு இல்லை.  ஆனால் யாரை நம்புவது யார்கிட்ட எதிர்பார்க்கிறது அப்படி என்கிற ஒரு புரிதல் இருக்கவேண்டும். எப்போது இந்த புரிதல் வருகிறதோ நம் வாழ்க்கை ஜிங்களால தான்.  எண்ணம் போல் வாழ்க.

நீங்கள் தைரியசாலி தானே? | எண்ணம் போல் வாழ்வு

நம் வாழ்வில் தைரியத்துடன் ஒரு முடிவெடுத்து ஒரு காரியத்தில் இறங்குகிறாம். அது வெற்றியைத் தருமா? தோல்வியை தருமா? என்பது நமக்கு முன்பே தெரியாது. ஆனால் நம்  உள் உணர்வு வெற்றியின் பாதையில் செல்வதாக நம்பிக்கையைத் தரும். இந்த தைரியம் தான் நம் வாழ்க்கையை வழி நடத்துகிறது வெற்றியையும் தருகிறது. எண்ணம் போல் வாழ்வு.

வாழ்க்கைக்கு தேவையான இந்த Minimum maximum உங்களுக்கு தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு

நம் வாழ்க்கை மிக மிக திருப்தியாக இருக்க நாம் இரண்டு காரியங்கள் செய்ய வேண்டும். 1. நம் வாழ்வில் நம் தேவைகளை எவ்வளவுக்கெவ்வளவு Minimum மாக வைத்து கொள்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது. 2. வாழ்க்கையில் விட்டுக் கொடுக்கும் பழக்கத்தை எவ்வளவுக்கெவ்வளவு Maximum மாக செய்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது. இந்த மினிமம் மற்றும் மேக்ஸிமமை நம் வாழ்வில் கடைபிடிக்கும் போது நம் வாழ்க்கை சூப்பராக இருக்கும். எண்ணம் போல் வாழ்வு.

அறிவியலும் ஆன்மீகமும் | எண்ணம் போல் வாழ்வு

அறிவியல் இந்த வெயில் காலத்தில் நம்மை குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது. ஆன்மீகத்தில் தியானம் வாழ்க்கை தரும் டென்ஷனை அதாவது சூட்டை தணிக்க உதவுகிறது. அறிவியல் தரும் அனைத்து பொருட்களையும் நாம் பயன்படுத்தலாம் ஆனால் அது இல்லாமலும் வாழ பழகிக்கொள்ள வேண்டும். நம் வாழ்க்கை சிறக்க தியானமும் கற்றுக்கொள்ள வேண்டும். எண்ணம் போல் வாழ்வு.

செய்பவர் செய்விப்பவர் யார் என தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு

நாம் ஒருவருக்கு உதவி செய்து அவர் இன்று நன்றாக இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம் அதற்காக நாம் தலை கால் புரியாமல் அகங்காரத்தில் வருவது நம் புரிதல் முற்றிலும் தவறு என்பதை உணர்த்துகிறது. இறைவன் ஒருவருக்கு உதவி செய்ய முடிவு செய்கிறார் அதற்கு நம்மை ஒரு medium மாக பயன்படுத்துகிறார் அவ்வளவு தான். நம் புரிதல் எப்படி இருக்க வேண்டும் என்றால் செய்பவர் செய்விப்பவர் இறைவன். நாம் வெறும் கருவி தான். எண்ணம் போல் வாழ்வு.

கோபத்தை உங்களால் தூக்கி எறிய முடியுமா? | எண்ணம் போல் வாழ்வு

நம்பலால கோபத்துல ஒரு பொருளை தூக்கி எறிய முடியும் இது ஒன்னும் பெரிய காரியம் இல்லை. ஆனா அந்தக் கோபத்தை தூக்கி எறிய முடியுமா?  கோபம் ஒவ்வொரு முறையும் நம்மை ஜெயிக்கிற மாதிரி, நம்போ புத்தன் மாதிரி கோபத்தை ஜெயிக்க முடியுமா?  கோபம் என்பது ஒரு விகாரம் அதை நம்போ ஜெயிச்சே ஆகனும். அதுக்கு வழி நம்ப எல்லாரும் தியானம் கத்துக்கணும்.  எண்ணம் போல் வாழ்வு.

உங்க வாழ்க்கையில நீங்க Hero தானே? | எண்ணம் போல் வாழ்வு

ஒரு சிங்கம் நம்முடைய கவனத்தை ஈர்க்க மெதுவாக நடந்து வந்தாலே போதுமானது. ஆனால் ஒரு குரங்கு நம் கவனத்தை ஈர்க்க குட்டிகரணம் போட வேண்டி இருக்கிறது. நாம் புரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால் இந்த பூமியில் 800 கோடி ஆத்மாக்கள் இருக்கிறார்கள் என்றால் அதில் நம்மை போன்று வேறு யாரையும் இறைவன் படைக்கவில்லை. நாம் அவ்வளவு ஸ்பெஷல். நம் வாழ்க்கையை அடுத்தவரைப் பார்த்து காப்பியடித்து ஒரு குரங்கு போல் குட்டி கரணம் போட வேண்டாம். எண்ணம் போல் வாழ்வு.

வாழ்க்கையில் tension இல்லாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? | எண்ணம் போல் வாழ்வு

உண்மையில் இருட்டு என்று ஒன்று இல்லை வெளிச்சமின்மையையே நாம் இருட்டு என்று கூறுகின்றோம். அதே போல் தீர்வு இல்லாத ஒரு பிரச்சனை இல்லை தற்சமயம் தீர்வுக்கான idea கிடைக்கவில்லை என்று அர்த்தம். நம் வாழ்க்கையில் வெற்றி கிடைக்க வேண்டுமென்றால் நாம் நிறைய படிக்க வேண்டும் அல்லது நிறைய படித்தவர்களை நம் பக்கத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். இப்படி செய்தோம் ஆனால் நம் வாழ்வில் tension இருக்காது. எண்ணம் போல் வாழ்வு.

உங்க life partner பற்றி எப்போதும் complaintஅ? | எண்ணம் போல் வாழ்வு

ஒரு மருமகன் அவர் மாமனாரிடம் மாமா உங்க பொண்ணு எப்பவுமே என்கிட்ட சண்டை போடுறா அவளை சமாளிக்கவே முடியல அப்படின்னு complaint பண்றார். அதற்கு மாமனார் என் மகளை சமாளிக்க முடியல அப்படின்னு சொல்றியே நான் அவ அம்மாவை ஐம்பது வருஷமா சமாளிக்கிறேனை நான் compliant பண்றேனா? தாம்பத்திய வாழ்வில் விரிசல் வருவதற்கான காரணம் ஒருவர் மற்றவரை தன் இஷ்டத்திற்கு வாழ வேண்டும் என்று நினைப்பதால். life partner அவர் அவராக இருப்பதை ஏற்றுக் கொள்ளும் போது தாம்பத்திய வாழ்க்கை சிறப்பாக இருக்கும். எண்ணம் போல் வாழ்வு.

வாழ்க்கையில் ஜெயிப்பதற்கான வழிகள் | எண்ணம் போல் வாழ்வு

நம்மை யாராவது காரண காரியம் இல்லாமல் உயர்த்தி பேசினால் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். நம்மைப் பற்றி தவறாக பேசுபவர்களிடம் ஊமையைப் போன்று இருந்துவிட வேண்டும். யாராவது உண்மையில் நம்மை வாழ்த்திப் பேசினால் நாம் செவிடன் போல் இருந்து விட வேண்டும். இது வாழ்க்கையில் ஜெயிப்பதற்கான வழிகளாகும்.  எண்ணம் போல் வாழ்வு.

உங்களுக்கு புல்லாங்குழல் வாசிக்கத் தெரியுமா? | எண்ணம் போல் வாழ்வு

ஒரு புல்லாங்குழலில் நிறைய ஓட்டைகள் இருக்கும் அதை வாசிக்கத் தெரியாதவர்கள் வாசித்தால் வெறும் காற்றுதான் வரும். ஆனால் முறையான பயிற்சி எடுத்து வாசித்தால் அதிலிருந்து ஒரு இனிமையான இசை வரும். அதே போல நம் வாழ்வில் பிரச்சினைகள் சவால்கள் வரும்போது அதை கையாளத் தெரியவில்லை என்றால் நம் வாழ்க்கை புரியாத புதிர் ஆகிவிடும். சரியாக முயற்சி செய்தால் நமக்கு அனுபவம் வந்துவிட்டால் புல்லாங்குழலில் எப்படி இசையை வருமோ அதே போன்று நாமும் பிரச்சினையை சவாலை முடித்து விடுவோம். அதற்குப் பிறகு நம் வாழ்க்கை ஜிங்கலாலா தான். எண்ணம் போல் வாழ்வு.

உலகில் உள்ளவர்களுக்கு கிடைப்பதும் கிடைக்காததும் | எண்ணம் போல் வாழ்வு

உலகில் உள்ள அனைவரும் அவர்களுக்கு தேவையானதை ஆசைப்படுவது நல்லது ஏனென்றால் ஒரு பிச்சைக்காரனுக்கும் அவருடைய தேவை பூர்த்தியாகிறது ஒரு பேரரசனுக்கு அவனுடைய பேராசை பூர்த்தி ஆகவேண்டும் என்பது இல்லை. மகாத்மா காந்தி கூறுகிறார் உலகில் உள்ள அனைவருக்கும் தேவையான பொருள் இந்த பூமியில் இருக்கிறது ஆனால் ஒருவருடைய பேராசைக்கு அல்ல.  அதனால் நாம் பேராசை இல்லாமல் வாழ்வோம் ஏனென்றால் பேராசை பெருநஷ்டம்.  எண்ணம் போல் வாழ்வு.

நீங்கள் பற்றற்றவர் ஆகி விட்டீர்களா? | எண்ணம் போல் வாழ்வு

ஒரு சத்சங்கில் ஒரு சிஷ்யன் குருவிடம் கேட்கிறார் சாது வாழ்க்கை வாழும் நாம் நமக்கென்று Email ID வைத்துக் கொள்ளலாமா? அதற்கு குரு Email ID வைத்துக்கொள்ளலாம் ஆனால் அதில் Attachment இருக்கக் கூடாது என்றார். நம் வாழ்வில் நாம் பணம் வீடு கார் போன்ற அனைத்தும் வைத்திருக்கலாம் ஆனால் அதன் மீது Attachment இருக்கக்கூடாது. அதாவது ஒரு பற்றற்ற வாழ்க்கையை வாழ வேண்டும். எண்ணம் போல் வாழ்வு.