உங்களுக்குள் ஊடல் ஒன்றும் இல்லையே? | எண்ணம் போல் வாழ்வு
ஒரு திருமணமான பெண் அவருடைய அம்மா வீட்டுக்கு சென்று தன் கணவருக்கு போன் செய்கிறார். அவரை உடனே வந்து தன்னை வீட்டுக்கு அழைத்துப் போகுமாறு கூறுகிறார்.
கணவர் ஆச்சரியமாக பத்து நாள் தங்குவதாக போய் விட்டு ஐந்தாவது நாளே திரும்பி வருவதாக கூறுவது ஏன் என்று கேட்டார்.
அதற்கு அவர் மனைவி இந்த ஐந்து நாளில் என் அப்பா, என் அம்மா, தம்பி, தங்கை என் எல்லோருடனும் சண்டை போட்டாச்சு ஆனால் உங்களுடன் சண்டை போடும் போது தான் அதில் ஒரு சுவாரஸ்யம் இருக்கிறது. அதனால் நான் எனது உடைகளை எடுத்து வைத்து விட்டேன். நீங்கள் வந்து என்னை அழைத்து செல்லுங்கள் என்று கூறினார்.
தாம்பத்திய உறவில் ஊடல்கள் இருக்கலாம். சிறு சிறு பிணக்கங்கள் இருக்கலாம். ஆனால் அதுவே பெரிய பிரச்சினையாக ஆகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment