ஒரு காதலியின் கல்யாண பத்திரிகை? | எண்ணம் போல் வாழ்வு
ஒருத்தனுடைய காதலி அவளுடைய கல்யாணப் பத்திரிகையை அவனிடம் கொடுத்து போய்விட்டாள். இதை பார்த்த அவனுடைய நண்பன் நீங்கள் இரண்டு பேரும் திருமணம் செய்வீர்கள் என நான் நினைத்தேன், உங்கள் இருவரின் பெயரும் இந்த பத்திரிகையில் இருக்க வேண்டும் என ஆசைப்பட்டேன் என்று கூறினான்.
அதற்கு அவன் இப்போதும் எங்கள் இரண்டு பேரின் பெயரும் இந்த பத்திரிகையில் இருக்கிறது. அவளுடைய பெயர் பத்திரிகைக்குள்ளும் என்னுடைய பெயர் பத்திரிகையின் கவரிலும் உள்ளது என்றான்.
வாழ்க்கையில் எவ்வளவு பெரிய tragedy வந்தாலும் நாம் அதை நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருப்பதைவிட்டு விட்டு அடுத்தது என்ன செய்யலாம் என யோசித்து செயல்படும் போதே நம் வாழ்க்கை சிறப்பாக ஆகிறது.
எண்ணம் போல் வாழ்வு.
Comments
Post a Comment